அஞ்சல், ரயில்வே பணிகளைத் தொடர்ந்து தமிழக மின்வாரியத்திலும் பிற மாநிலத்தவர்கள் 36 பேர் நியமனம் பறிபோகிறதா தமிழக அரசு வேலைவாய்ப்புகள்?

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தில் உதவி மின்பொறியாளர் பணிக்கான நேரடித் தேர்வு கடந்த டிசம்பரில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுகளை நடத்தும் பணி அண்ணா பல்கலைக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தின் பல்வேறு பொறியி யல் கல்லூரி வளாகங்களில் நடந்த எழுத்துத் தேர்வுகளைத் தொடர்ந்து, ஒரு பதவிக்கு 5 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்க ளில் பணிக்குத் தேர்வான 300 பேரின் பட்டியலை நேற்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டது. அதில் தன்னுடைய பெயர் இருக்கிறதா என்று பார்த்த பொறியி யல் பட்டதாரிகள் அதிர்ச்சியடைந்த னர். தேர்வான 300 பேரில் 36 பேர் பிற மாநிலத்தவர்கள் ஆவர். அது மொத்தப் பணியிடங்களில் 12 சதவிகிதம். ஏற்கெனவே, கடந்த 2017-ல் அஞ்சல் துறையில் தமிழே தெரியாத வட இந்திய மாணவர்கள் தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற தாக தேர்வு செய்யப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து, ரயில்வே பணியிடங்களில் தமிழகத்துக்கென ஒதுக்கப்பட வேண்டிய இடங் களில் வட இந்தியர்கள் நியமன மானார்கள். இது பெரிய பிரச்சினையாகி, நீதிமன்ற வழக்கு, போராட்டம் என்று உருமாறியது. இந்த நிலையில் நேர டியாக தமிழக அரசு பணியிலேயே, 38 பேர் அதுவும் அதிகாரிகளாக பணியமர்த்தப்பட்டிருப்பது பிரச் சினைக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தத் தகவலையும், தேர்வா னோர் பட்டியலையும் நமக்கு அனுப் பிய பெயர் வெளியிட விரும்பாத மின்வாரிய அதிகாரி மேலும் கூறியது: முன்பெல்லாம் மின்வாரிய உதவி பொறியாளர் (மின் மற்றும் சிவில்) பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாகத் தான் பணியாளர்கள் தேர்வு செய் யப்பட்டார்கள். தமிழக பணியிடங்களில் வெளி மாநிலத்தவர்களையும், நேபாளம், பாகிஸ்தான், பூடான் போன்ற நாடுக ளில் இருந்து வந்தவர்களையும் பணியமர்த்தும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு சட்ட திருத்தம் செய்தது. அதன் விளைவுதான் இந்த நேரடிப் பணி நியமனம். இது வெறுமனே வேலை வாய்ப்பு பிரச்சினை மட்டுமல்ல. தகவல் பரிமாற்றத்தின்போது மொழிப் பிரச்சினையால் விபத்து கள் கூட நிகழலாம். இடஒதுக்கீடு ரீதியாக பிரச்சினை வந்துவிடக்கூடாது என்பதற்காக 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதிக் காத வகையில், இவர்களை பொதுப் பிரிவின் கீழ் தேர்வு செய்துள் ளது அரசு. அது பொதுப்பிரிவின ருக்கும், சிறப்பாக தேர்வு எழுதிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். இதுபற்றி விளக்கம் கேட்க மின்துறை அமைச்சர் தங்கமணியை தொடர்பு கொள்ள இயலவில்லை. மணியரசன் கண்டனம் இதுகுறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணி யரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மின்பொறியாளர் தேர்வில் ஆந்திரா, கேரளா, உத்தரப்பிர தேசம், பிஹார், கர்நாடகம், ராஜஸ் தான், டெல்லி, சத்தீஸ்கர் ஆகிய வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர் களுக்கு பணி ஆணை வழங்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு மாத ஊதியம் ரூ.50 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே அதிக பொறி யாளர்களைக் கொண்ட தமிழ்நாட் டில், சுமார் 1 கோடி பேர் வேலையில் லாமல் தவித்துவரும் நிலையில் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத் தில் செயல்படும் தமிழ்நாடு அரசு, அரசுப் பணிகளில் வெளி மாநிலத்த வரை பணியமர்த்துவது தமிழ் மக்களுக்கு இழைக்கும் துரோகம். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment