தமிழ் வளர்ச்சி துறையால் நடத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் ஜூலை 31-ந் தேதி கடைசி நாள்

தமிழ் வளர்ச்சி துறையால் நடத்தப்பெறும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு போட்டிக்கு 2018-ம் ஆண்டில் (1.1.2018 முதல் 31.12.2018 வரை) வெளியிடப்பட்ட நூல்கள் 33 வகைப்பாடுகளின் கீழ் வரவேற்கப்படுகின்றன. போட்டியில் ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஒரு நூல் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, நூலாசிரியருக்கு ரூ.30 ஆயிரமும், அந்த நூலை பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூ.10 ஆயிரமும் என பரிசுகள் வழங்கப்படும். பரிசு போட்டிக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-600008 என்ற முகவரியில் நேரிலோ, 28190412, 28190413 என்ற தொலைபேசி எண்கள் வாயிலாகவோ தெரிந்து கொள்ளலாம். மேலும் www.tam-i-lv-a-l-a-r-c-h-it-hu-r-ai.com இணையதளம் மூலமோ விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை பதிவிறக்கம் செய்யலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் 31.7.2019 ஆகும். மேற்கண்ட தகவல் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment