300 பேருக்கு இலவச உயர் கல்வி பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் அறிவிப்பு

பெரம்பலூர் தொகுதி எம்.பி. பாரிவேந்தர் திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த 300 பேருக்கு (சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலா 50 பேர்) எஸ்ஆர்எம் கல்விக் குழுமத்தில் இலவசமாக பிடெக், கலை, அறிவி யல், பிஎட், நர்சிங், பிஸியோதெரபி, பிபிஏ, எம்பிஏ, டிப்ளமோ ஆகிய படிப்புகள் முற்றிலும் இலவசமாக பயிற்றுவிக்கப்படும். விடுதி மாணவர்களுக்கு தங்குமிடம், உணவு ஆகியனவும் இலவசமாக வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை www.ijkparty.org என்ற முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து, ஜூன் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாணவ - மாணவிகள் தேர்வு வெளிப்படையாக மேற் கொள்ளப்படும். 300 பேருக்கு வேலைவாய்ப்பு அதேபோல, சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலா 50 பேர் வீதம் மொத்தம் 300 பேருக்கு கல்வித் தகுதிக்கேற்ப எஸ்ஆர்எம் குழுமத் தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளும் விரைவில் தொடங்கும். பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையைக் களைய உடனடி நடவடிக்கையாக சொந்த செலவில் சுமார் 100 கிராமங்களைத் தேர்வு செய்து, அவற்றுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவையான இடங் களில் ஆழ்குழாய்க் கிணறுகளும் அமைக்கப்படும். மக்களவை உறுப்பினர் என்ற முறையில் நீண்ட நாள் கோரிக்கை யான அரியலூர், பெரம்பலூர், துறையூர், நாமக்கல் ஆகிய பகுதி களை இணைக்கும் வகையில் ரயில் சேவை தொடங்க உறுதியான நடவடிக்கை எடுப்பேன். பெரம்பலூர் தொகுதியில் வேலைவாய்ப்பின்மையை களை யும் வகையில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment