அனைத்து பள்ளிகளையும் ஜூன் 3ல் திறக்க பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

கோடை கால விடுமுறை முடிந்து வருகிற ஜூனில் பள்ளி கூடங்கள் திறக்கப்படுவது வழக்கம். புது சீருடைகளை அணிந்து, புத்தகங்களை சுமந்து கொண்டு மாணவ மாணவியரும் ஆர்வமுடன் பள்ளிக்கு செல்வார்கள். இதுபற்றி பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறும்பொழுது, மாணவ மாணவியர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கி, கற்பித்தல் பணியை துவங்க வேண்டியுள்ளது. இதனால் அனைத்து வகை பள்ளிகளையும் ஜூன் 3ல் திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

No comments:

Post a Comment