தமிழகம் முழுவதும் இந்த ஆண்டில் அங்கீகாரம் பெறுவதற்காக 2,915 பள்ளிகள் விண்ணப்பம் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் தகவல்

அரசு அங்கீகாரம் பெறுவதற்காக மாநிலம் முழுவதும் இந்த ஆண்டில் 2,915 தனியார் பள்ளிகள் விண்ணப்பித் துள்ளதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளி யிட்ட அறிவிப்பு: தனியார் மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது. தொடர் அங்கீகாரம் பெற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அங்கீகாரம் வேண்டி மாநிலம் முழு வதும் இந்த ஆண்டில் 2,915 தனியார் பள்ளிகள் விண்ணப்பித்துள்ளன. விண்ணப்பித்துள்ள பள்ளி களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் ஜூன் மாதம் பள்ளிகள் திறந்த பிறகு, நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு தேவையான ஆவணங்களை சரி பார்த்து, அறிக்கையை 2 நகல்களாக தயாரிக்க வேண்டும். அதில் ஒன்றை முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு பரிந்துரை செய்து அனுப்பி, மற் றொரு நகலை கோப்பில் பராமரிக்க வேண்டும். அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட பள்ளிகளின் சான்றுகளை கருத்தில் கொண்டு, நடைமுறை விதிகளின்படி அங்கீகாரத்தை புதுப்பித்து ஆணை வழங்கலாம். அல்லது, குறைகள் இருந்தால் அதை சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்து அனுப்பலாம். அரசாணைப்படி, உரிய அமைப்பிடம் இருந்து, பள்ளி கட்டிட அனுமதி பெறாத பள்ளிகளின் தற்காலிக தொடர் அங்கீகாரம் 2020 மே 31-ம் தேதி வரை நீட்டிக் கப்பட்டுள்ளது. எனவே, அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த பள்ளிகளுக்கு அடுத்த ஆண்டு வரை தொடர் அங்கீகாரம் வழங்க வேண்டும். ஒப்புதல் பெற்றிருந்தால் 3 ஆண்டு காலத்துக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். பெரும்பாலான பள்ளிகளுக்கு வரும் 31-ம் தேதியுடன் அங்கீகாரம் முடிய உள்ளது. எனவே, தனி கவனம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பிக்க அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அறிவுரை வழங்கப்படுகிறது. அவ்வாறு விண் ணப்பிக்கும் பள்ளிகளுக்கு உடனுக் குடன் அங்கீகாரம் வழங்க முதன் மைக் கல்வி அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஜூன் இறுதிக்குள் இந்த பணிகளை முடித்து, அனைத்து பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றவையாக செயல் படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது. Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

No comments:

Post a Comment