உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Monday, May 27, 2019

2009 & TET போராட்டக்குழு அவசர ஆலோசனை கூட்டம்

மாநில அளவிலான 2009 & TET போராட்டக்குழு அவசர ஆலோசனை கூட்டம் திங்கட்கிழமை 27/5/2019 காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டும் மதுரை காலேஜ் ஹவுஸ் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. (மதுரை ரயில் நிலையம் எதிரே & பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து100மீ தொலைவில் கூட்ட அரங்கு அமைந்துள்ளது.) தமிழக அரசு அங்கன்வாடிகளில் LKG/UKG வகுப்பிற்கு நம்முடைய இ.நி.ஆசிரியர்களை உடனடியாக நியமிப்பதில் செயல்முறைகள் போட்டு முழுவீச்சில் போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே நாமும் உடனடியாக அடுத்த கட்ட சட்ட மேல் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம். (அனைத்து ஒருங்கிணைப்பாளர்களின் பெரும்பான்மையான கருத்து அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்). எனவே மேல் நடவடிக்கைக்கு தங்கள் வட்டாரத்தில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட அங்கன்வாடியில் தொடங்கப்படவுள்ள LKG / UKG வகுப்பிற்கு தேர்வு செய்யப்பட்ட 2009 TET போராட்டக்குழு சார்ந்த ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்தும், அடுத்தகட்ட மேல் நடவடிக்கைகளுக்கு அவர்களது விருப்பத்தினையும் கேட்டு பட்டியலுடன் கூட்டத்தில் அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும் அவசியம் கலந்து கொள்ளுமாறு கொள்ளப்படுகிறது. மேலும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் "சமவேலைக்கு சம ஊதியம்" வழக்கின் இன்றைய நிலை மற்றும் அடுத்த கட்ட நிகழ்வுகள் குறித்தும் முடிவு எடுக்க வேண்டியுள்ளதால் அனைத்து வட்டார / மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் அவசியம் கலந்து கொள்ளுமாறு மாநில போராட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. ✒✒2009 & TET மாநில போராட்டக்குழு

No comments:

Post a Comment