பிளஸ் 2 தாவரவியல் பாடநூலில் நெல் ஜெயராமனின் சாதனைகள் பாடமாக சேர்ப்பு

தமிழக அரசின் பிளஸ் 2 தாவரவி யல் பாடநூலில் நெல் ஜெயராம னின் சாதனைகள் பாடமாக சேர்க் கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் கட்டி மேட்டைச் சேர்ந்த ஜெயராமன், ‘நமது நெல்லை காப்போம்’ என்ற இயக்கம் மூலம் பாரம்பரிய விவ சாயத்தை போற்றிப் பாதுகாத்து வந்தார். நெல் தொடர்பான சேவை கள் என்பதால் ‘நெல்’ ஜெயராமன் என்றே அனைவராலும் கொண் டாடப்பட்டவர். பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாப்பதில் ‘நெல்’ ஜெயராமன் ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டி, தமிழக அரசு அவருக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கியது. யாரும் எதிர்பாராத வகையில் அவரைப் புற்றுநோய் தாக்கி, சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது சாதனைகள் பிளஸ் 2 தாவரவியல் பாடநூலில், புகைப்படத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கிரியேட் என்ற அமைப்பின் தலைவர் பி.துரை சிங்கம் நிருபர்களிடம் சென்னை யில் நேற்று கூறியதாவது: நெல் ஜெயராமன், ‘நமது நெல்லை காப்போம்’ என்ற இயக் கத்தின் மாநில ஒருங்கிணைப்பாள ராக இருந்து, அவரது கடின முயற்சியால் 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்துள்ளார். அவரது சேவையை பாராட்டி, தமிழக அரசின் பிளஸ் 2 தாவர வியல் பாடநூலில் அவரது வாழ்க்கை குறிப்பு மற்றும் சாத னைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதற் காக தமிழக முதல்வர் பழனிசாமி, பள்ளிக்கல்வி அமைச்சர் செங் கோட்டையன் ஆகியோருக்கு கிரியேட் அமைப்பு சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். நெல் ஜெயராமன் ஆண்டு தோறும் நெல் திருவிழாவை திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டியில் கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வந்தார். அவரது சேவையை தொடரும் விதமாக 13-வது தேசிய நெல் திருவிழா, திருத்துறைப்பூண்டி, ஏ.ஆர்.வி.தனலட்சுமி திருமண அரங்கத்தில் ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அந்த விழாவில், நெல் ஜெய ராமன் வழங்கியது போன்றே, சுமார் 4 ஆயிரம் விவசாயிகளுக்கு தலா 2 கிலோ பாரம்பரிய நெல் ரகம் இலவசமாக வழங்கப்படும். இதை விவசாயிகள் விளைவித்து, அடுத்த ஆண்டு நெல் திருவிழா வில் திருப்பித்தர வேண்டும். இந்த ஆண்டு முதல் முறை யாக, இயற்கை வேளாண் துறை யில் வெற்றிபெற்ற விவசாயிகளின் அனுபவப் பகிர்வு இடம்பெறும். மேலும் இயற்கை விவசாயிகள் விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்துவது குறித்த ஆலோசனை வழங்கப்படும். விழாவில் வேளாண் செயலர் ககன்தீப் சிங் பேடி, கோவை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் என்.குமார், நபார்டு வங்கி தலைமை பொதுமேலாளர் பத்மா ரகுநாதன் உள்ளிட்டோர் பங்கேற் பர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மருத்துவர் ஜி.சாய் ரமணன், எக்ஸ்னோரா இன்டர்நேஷ னல் அமைப்பின் தலைவர் செந்தூர் பாரி, மண் வாசனை அமைப்பைச் சேர்ந்த மேனகா ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment