பிளஸ் 2 முடித்தவர்கள் நேரடியாக சேரும் வகையில் 5 ஆண்டு எம்.ஏ. தமிழ் இலக்கியம் படிப்பு  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அறிமுகம்

பிளஸ் 2 முடித்தவர்கள் நேரடியாக சேரும் வகையில் ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால எம்.ஏ. தமிழ் இலக்கியம் படிப்பை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சேர ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விஜயராகவன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை தரமணியில் அமைந் துள்ளது. இது தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல் லியல் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஒரு தன்னாட்சி மிக்க நிறுவனம். இங்கு சுமார் 2 லட்சம் நூல்களைக் கொண்ட நூலகம், சுவடிகளைப் பற்றிய அறிவைப் பெறும் வகையில் சுவடிப் பாதுகாப்பு மையம், இலக்கணத்தை அறிந்து கொள்ளும் வகையில் தொல்காப்பிய ஆய்விருக்கை, பழந்தமிழர்களின் வாழ்வியலை உணர்ந்து தெளிந்திட பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம், திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடம், மொழியியல் ஆய்வுக்கூடம் ஆகியவை ஒருசேர உள்ளன. இதன்மூலம் இலக்கியம், மொழி யியல், அயல்நாட்டு சமூகவியல் புலங்களின் ஊடே உயர் தமிழறிவினை மாணவர்கள் பெறு வதற்கான வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. மாணவ - மாணவியருக்கு தனித் தனி விடுதி வசதி உள்ளது. உயர் தமிழாய்வில் அனைத்து உள்கட்டமைப்புகளுடன் திகழும் வரலாற்றுச் சிறப்புமிக்க உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் 2019-2020-ம் கல்வியாண்டில் முழு நேர படிப்பாக ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் படிப்பு தொடங் கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பத்தை நேரில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.ulakaththamizh.in) பதிவிறக் கம் செய்தும் பயன்படுத்தலாம். ஜூன் 20-ல் நுழைவுத்தேர்வு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை ஜூன் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். நுழைவுத் தேர்வு ஜூன் 20-ம் தேதி நடத்தப்பட உள்ளது. வகுப்புகள் ஜூலை 1-ம் தேதி தொடங்கும். கூடுதல் விவரங்களுக்கு, இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2-வது முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் (சென்ட்ரல் பாலிடெக்னிக் கேம்பஸ்) தரமணி, சென்னை 600 113 என்ற முக வரியை அணுகலாம். மேலும் 044-22542992, 22540087 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment