பிளஸ் 2 மாணவர்களுக்கு அசல் சான்றிதழ்கள் ஜூன் 3 முதல் வழங்கப்படும் அரசு தேர்வுத் துறை அறிவிப்பு

பிளஸ் 2 மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை ஜூன் 3-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறி்ப்பு: பிளஸ் 2 தேர்வெழுதிய மாண வர்கள் அசல் மதிப்பெண் சான்றி தழ்களை (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு உட்பட) அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமும், தனித்தேர்வர்கள் தாங் கள் தேர்வெழுதிய மையங்கள் வழி யாகவும் ஜூன் 3-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங் கப்படும். அதேநேரம் தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண் களை பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக மட்டுமே வழங்கப்படும். அந்த மாணவர்கள் அனைத்து பாடங் களிலும் தேர்ச்சி பெற்ற பின்னர் அவர்களுக்கு தனித்தனி மதிப் பெண் சான்றிதழ்கள் வழங்கப் படும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment