சென்னை மாநகராட்சி பள்ளிகளில்  மாணவர்கள் எண்ணிக்கையை 1.50 லட்சமாக உயர்த்த நடவடிக்கை வீடு வீடாக விளக்கும் ஆசிரியர்கள்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக் கையை ஒன்றரை லட்சமாக உயர்த்த, பள்ளிகளின் சிறப்புகள் குறித்து வீடு வீடாக ஆசிரியர்கள் விளக்கி வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் தொடக்கப்பள்ளிகள், நிடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி கள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் 3 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அனைத்து வகுப்புகளும் சேர்த்து 85 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். பெற்றோருக்கு வேண்டுகோள் தற்போது ஏழை குழந்தைகளும் அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளை நாடுவதால், மாநகராட்சி பள்ளிகளில் மாண வர்களின் எண்ணிக்கை குறை கிறது. அதனால் மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களின் எண் ணிக்கையை உயர்த்தும் விதமாக அனைத்து மாநகராட்சி பள்ளி களின் தலைமையாசிரியர்கள், அப்பள்ளிகளின் சிறப்புகளை, வீடு வீடாக சென்று விளக்கி, துண்டு பிரசுரங்களை விநியோ கித்து, குழந்தைகளை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்குமாறு பெற் றோருக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சி பள்ளி களில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதி கள், கல்வித் தரம் ஆகியவை உள்ளன. மேலும் 48 வகையான மாணவர் நல திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதில் சென்னை மாநகராட்சியில் மட்டும் 34 வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இப்பள்ளிகளில் படித்து, அரசு நடத்தும் கலந்தாய்வு மூலம் பொறியியல், மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மாநகராட்சி நிர்வாகமே ஏற்கிறது. இவைகளை கூறி, மாநகராட்சி பள்ளிகளில் சேர, அழைப்பு விடுத்து வருகிறோம். இப்பணியில் அனைத்து மாநகராட்சிப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி பள்ளிகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அதனால் அதையே இலக்காக வைத்து மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகி றோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment