சென்னை பல்கலை. தொலைதூர கல்வி தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி தொடங்கும் இணையதளத்தில் அட்டவணை வெளியீடு

ஜூன் 1 முதல் தொடங்க இருந்த தொலைதூரக்கல்வி படிப்புகளுக் கான தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி தொடங்கும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் இராம. சீனுவாசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: தொலைதூரக்கல்வி நிறுவனத் தின் இளங்கலை, முதுகலை மற்றும் தொழில்படிப்புகளுக்கான தேர்வுகள் ஜூன் 1-ம் தேதி தொடங் குவதாக இருந்தது. தற்போது தேர்வுகள் (A18, C19 பேட்ஜ் தவிர) ஜூன் 1-ம் தேதிக்குப் பதில் ஜூன் 15-ம் தேதி தொடங்கும். திருத்தப்பட்ட புதிய தேர்வுக்கால அட்டவணை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு விரைவில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதுவரை ஜூன் மாத தேர்வுகளுக்கு விண்ணப்பிக்காதவர்கள் (A18, C19 பேட்ஜ் தவிர)மே 28, 29 ஆகிய இரு நாட்களில் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment