பொறியியல் படிப்பில் சேர 1.32 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 6-ல் தொடங்குகிறது

இந்த ஆண்டு பொறியியல் படிப் பில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் சேர ஒரு லட்சத்து 32 ஆயிரம் மாணவ-மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள் ளனர். இதை்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 6-ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் 539 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரி களில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஏறத்தாழ ஒரு லட்சத்து 80 ஆயிரம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப் பட உள்ளன. இதற்கான கலந் தாய்வை தமிழக அரசு சார்பில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்த இருக்கிறது. இதற்கான ஆன்லைன் பதிவு மே 2-ம் தேதி தொடங்கி நேற்று நள்ளிரவு முடிவடைந்தது. ஆன்லைன் பதிவு தொடங்கிய நாள் முதல் மாணவ-மாணவிகள் மிகுந்த ஆர்வத்தோடு விண்ணப்பித்தனர். நேற்று மாலை 5 மணி நிலவரப் படி, ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 442 பேர் ஆன்லைனில் விண்ணப் பித்துள்ளதாக தமிழ்நாடு பொறியி யல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்தார். நள்ளிரவு வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் அளிக்கப்பட்டதால் இந்த எண்ணிக்கை சற்று அதிகரிக் கக்கூடும். கடந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேர் விண்ணப்பித் திருந்தனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாண வர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 27 ஆயிரம் அளவுக்கு குறைந்திருக்கிறது என்பது குறிப் பிடத்தக்கது. அரசு ஒதுக்கீட்டின் கீழ் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயி ரம் இடங்கள் இருப்பதால், விண் ணப்பித்துள்ள அனைவருக்கும் இடம் கிடைப்பது உறுதி. மாண வர்கள் எதிர்பார்க்கும் கல்லூரி கள், விருப்பமான பாடப்பிரிவு கிடைக்குமா என்பது கலந்தாய்வின் போது தெரியவரும். தொழில்நுட்பக் கல்வி இயக்க கம் ஏற்கெனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு விண்ணப் பித்த மாணவர்களுக்கு ஜூன் 3-ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும். இதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 6-ல் தொடங்கி 11 வரை தமிழகம் முழு வதும் 42 மையங்களில் நடை பெறும். அதன்பிறகு தரவரிசை பட்டி யல் ஜூன் 17-ல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு 20-ல் தொடங்கும்.

No comments:

Post a Comment