பொறியியல் படிப்புக்கு இதுவரை 1.25 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை கடைசி

சென்னை பொறியியல் படிப்புக்கு இதுவரை 1 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லை னில் விண்ணப்பிக்க நாளை (மே 31) கடைசி நாள் ஆகும்.

தமிழகத்தில் 539 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.

இக்கல்லூரிகளில் வழங்கப் படும் பிஇ, பிடெக் படிப்புகளில் 2 லட் சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். இவை பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படும். கடந்த ஆண்டு வரை பொறியியல் கலந் தாய்வை தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இந்த ஆண்டு முதல் முறையாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் கலந்தாய்வை நடத்த உள்ளது.

2019-2020-ம் கல்வி ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் பதிவு மே 2-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் முதலே மாணவ-மாணவியர் மிகுந்த ஆர்வத் தோடு விண்ணப்பிக்கத் தொடங் கினர்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட படி, பொறியியல் படிப்புக்கு ஆன் லைனில் விண்ணப்பிக்க நாளை (மே 31) கடைசி நாள் ஆகும். நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 1 லட்சத்து 22 ஆயிரம் பேர் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்திருப்ப தாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்தார்.

பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.tnea online.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி, நாளை (வெள்ளிக் கிழமை) நள்ளிரவு வரை ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம்.

மதிப்பெண் தகுதியைப் பொறுத்தவரையில், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் பொதுப்பிரிவினர் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப் பெண்ணும், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் (பிசி, பிசி (முஸ்லிம்), எம்பிசி, டிஎன்சி, எஸ்சி, எஸ்சி (அருந்ததியர்) மற்றும் எஸ்டி) எனில் 40 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment