தமிழகத்தில் 12 நகரங்களில் 100 டிகிரி வெயில் பதிவு 2 நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும்

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் கடல் காற்று வலுவாக இல்லாததால், காற்றில் ஈரப்பதம் குறைவாக உள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப நிலை இயல்பைவிட 7 முதல் 10 டிகிரி வரை அதி கரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், கரூர், திருச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய 12 மாவட்டங் களில் அனல் காற்று வீசும். புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்ப நிலை அளவுகளின்படி அதிகபட்ச மாக வேலூரில் 107 டிகிரி, திருத் தணி, திருச்சி, மதுரை தெற்கு, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் தலா 106 டிகிரி, பாளை யங்கோட்டையில் 104 டிகிரி, கரூர் பரமத்தி, சென்னை விமான நிலையம் ஆகிய இடங்களில் 103 டிகிரி, சேலத்தில் 101 டிகிரி, கடலூர், நாமக்கல், சென்னை நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி பதிவாகியுள்ளது. வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மேற் கூறிய மாவட்டங்கள் மற்றும் தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய மழை ஓரிரு இடங்களில் பெய்யக்கூடும். புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் பீளமேட்டில் 6 செமீ, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டபுரம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் 4 செமீ, பாலக்கோடு, நீலகிரி மாவட்டம் நடுவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், தருமபுரி, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

No comments:

Post a Comment