இபிஎப்ஓ அலுவலகம் சார்பில்  சென்னையில் ஜூன் 10-ல் குறைதீர்ப்பு கூட்டம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில், வரும் 10-ம் தேதி குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெறுகிறது. மண்டல தொழிலாளர் வருங் கால வைப்பு நிதி ஆணையர்-1 சலீல் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில், குறைதீர்ப்புக் கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், ஓய்வூதிய தாரர்கள், சந்தாதாரர்கள், உறுப் பினர்கள் மற்றும், தொழிற்சாலை, நிறுவன உரிமையாளர்கள் தங்க ளுக்கு நீண்ட நாட்களாகத் தீர்க் கப்படாமல் உள்ள குறைகளுக்குத் தீர்வு காணலாம். மேலும், தொழிலாளர் வருங் கால வைப்பு நிதி அலுவலகத்தின் சேவையை மேம்படுத்தும் வகையில் ஆலோசனைகளையும் இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம். காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை ஓய்வூதியதாரர்கள், உறுப்பினர்கள் மற்றும் சந்தாதாரர்களுக்கும், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை தொழிற்சாலை மற்றும் நிறுவன உரிமையாளர்களுக்கும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை ராயப்பேட்டை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 3-ம் தேதிக்குள் பதிவு எனவே, இக்கூட்டத்தில் பங் கேற்க விரும்புவோர் தங்களுடைய பெயர்கள் மற்றும் குறைகளை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் உள்ள மக்கள் தொடர்பு அதிகாரியிடம் வரும் 3-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment