கோடை விடுமுறையில்  சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை 

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தனி யார் பள்ளிகளுக்கு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் தனியார் பள்ளி கள், மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்காமல் தொடர்ந்து சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதனால் மாணவர்கள் மனஉளைச்சலில் தவிப்பதுடன், உடல் உபாதை களாலும் பாதிக்கப்பட நேரிடும் என புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக 'இந்து தமிழ்' நாளி தழில் செய்தி வெளியானது. இதை யடுத்து கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்பு களை நடத்தக்கூடாது என்று அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கண்ணப்பன், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவர்கள் நலன் கருதி கோடை விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது. ஆனால், இப் போது தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்கள் வருகின்றன. இன்றைய பருவநிலை மாறுபாட்டால் கோடை யில் வெப்ப அளவு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மாணவர்களுக்கு வெப்பம் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும். இதுதவிர கோடை விடுமுறை காலங்களில்தான் மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று உறவினர்களுடன் பழகவும், உறவுகளின் அவசியத்தை அறிந்து கொள்ளவும் நல்ல வாய்ப்பாக உள்ளது. இதன்மூலம் அவர்களின் வாழ்வியல் விழுமியம் மேம்படும். எனவே, கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என தனியார் பள்ளி முதல்வர்களுக்கு திட்டவட்டமாக அறிவித்து, முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், இதுதொடர்பான புகார்கள் மீது காலதாமதமின்றி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment