உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Sunday, April 7, 2019

மக்களவை தேர்தலை முன்னிட்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தள்ளிவைப்பு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 20, 21-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி தள்ளவைத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தின் செயலாளர் நந்தக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 20, 21-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகளுக்கான தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஜவுளி தொழில்நுட்பத்துறையில் முதுநிலை மற்றும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற இருந்த எழுத்துத் தேர்வு மே 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், ஏப்ரல் 21-ம் தேதி நடைபெற இருந்த வேதியியலர், இளநிலை வேதியியலர் (தொழில் மற்றும் வணிகத்துறை), உதவி புவியியலர், புவி வேதியியலர் (பொதுப்பணித்துறை) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் (சமூக நலத்துறை) ஆகிய பணிகளுக்கான எழுத்துத் தேர்வானது மே 5-ம் தேதிக்கு தள்ளி வைக்கப் படுகிறது. இந்த தேர்வுகள் ஏற்கெனவே அறிவித்தபடி சென்னை, மதுரை, மற்றும் கோவை மாவட்டங்களில் நடைபெறும். கணக்கு அலுவலர் தேர்வு ஏற்கெனவே அறிவித்தபடி மே 5-ம் தேதி கணக்கு அலுவலர் (கருவூலத்துறை) பதவிக் கான எழுத்து தேர்வும் மே 11, 12-ம் தேதிகளில் அரசு குற்றவியல் உதவி வழக்குரைஞர் பணிக்கான முதன்மை எழுத்து தேர்வும் நடைபெறும். அதில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது. முதுநிலை மற்றும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற இருந்த எழுத்துத் தேர்வு மே 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது

1 comment:

 1. Usually I never comment on blogs but your article is so convincing that I never stop myself to say something about it. You’re doing a great job Man and Thanks for the post,Interesting stuff to read. Keep it up.
  One Machine Learning
  One data science
  www.bexteranutrition.com
  www.digital marketingfront.com
  designing info.in
  www.https://www.hindimei.net

  ReplyDelete