ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல வழிகாட்டுதல்கள் வெளியீடு 

ஆசிரியர்கள் வெளிநாடு செல் வதற்கு அனுமதி பெறுவது தொடர் பான வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள் ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப் பிய சுற்றறிக்கையில், ''வெளிநாடு செல்ல அனுமதி கோரும் ஆசிரியர் கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தவறுவதால் பரிந்துரை செய்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஆசிரியர் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும்போது தலைமை ஆசிரியர் பரிந்துரை, பயண விவரம், விடுப்பு தகுதிச் சான்று, பாஸ்போர்ட் நகல், பயண நோக்கம், 2 ஆசிரியர்களி்ன் உத்தரவாத பத்திரம், பயண செலவுக்கான நிதி, வட்டார காவல் நிலைய சான்று உள்ளிட்ட ஆவணங்களை பூர்த்தி செய்து முதன்மை கல்வி அலுவலகம் வழியே பள்ளி கல்வி இயக்குநரிடம் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும். வெளிநாடு செல்வதற்கான அனுமதியை 3 மாதங்களுக்கு முன்பே இயக்குநரிடம் பெற வேண்டும். வெளிநாடு சென்று வந்த பின்னர் முதன்மை கல்வி அதிகாரியின் ஒப்புதல் பெற்றுதான் பணியில் சேர முடியும். அதற்கு மாறாக அனுமதி பெறாமல் வெளிநாடு சென்று வந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக் கப்படும். இதற்கான அறிவுரைகளை ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment