தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஆசிரியர் பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஓவிய ஆசிரியர் பணி நியமனம் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஓவிய ஆசிரியர், தையல் பயிற்சி ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்வில் பங்கேற்றவர்களின் சுமார் 80 பேர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், 'தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த ஒதுக்கீட்டில் கீழ் தங்களுக்கு பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், 'இந்த ஆசிரியர்கள் பணிக்கு ஆன்-லைன் மூலம் சமர்ப்பித்த விண்ணப்பித்திலும், சான்றிதழ் சரிபார்ப்பு படிவத்திலும் தமிழ் வழியில் படித்ததாக குறிப்பிட்டிருந்தவர்களுக்கு மட்டும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டில் தேர்வு செய்து, உரிய நடைமுறைகளை பின்பற்றி அவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். அதேசமயம், தமிழ் வழியில் படித்த விவரத்தை தெரிவிக்காதவர்களுக்கு, இந்த இடஒதுக்கீட்டை வழங்கக்கூடாது' என்று உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment