பிளஸ்-2 தேர்வு முடிவு: திட்டமிட்டப்படி 19-ந் தேதி வெளியீடு

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி தொடங்கி, 19-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வு முடிவு வருகிற 19-ந் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுவதாலும், வேறு சில காரணங்களுக்காகவும் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த தேதியில் இருந்து முன்னதாகவே வெளியிடப்படும் என்று வதந்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை நம்பி சில மாணவர்களும், பெற்றோரும் அரசு தேர்வுத்துறை இணையதளத்துக்கு சென்று தேர்வு முடிவு தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகி இருக்கிறதா? என்றும் தேடி பார்த்தனர். இந்த நிலையில் அரசு தேர்வுத்துறை, 'ஏற்கனவே அறிவித்த நாளில்(வருகிற 19-ந் தேதி) பிளஸ்-2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி வெளியிடப்படும் என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், தேர்வு முடிவு தேதி எக்காரணத்தை கொண்டும் மாற்றப்படாது' என்றும் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது.

No comments:

Post a Comment