உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Sunday, May 6, 2018

NEET 2018 QP AND ANSWER KEY DOWNLOAD | கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்த நீட் தேர்வு. தேர்வு முடிவுகள் ஜூன் 15-ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ திட்டம்.


NEET 2018 QP AND ANSWER KEY DOWNLOAD | கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்த நீட் தேர்வு. தேர்வு முடிவுகள் ஜூன் 15-ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ திட்டம் | மாணவ, மாணவிகளிடம் நடத்தப்பட்ட சோதனைகளால் அதிருப்தி கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்த நீட் தேர்வு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு நாடுமுழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள், சோதனைகளுடன் நீட் தேர்வு நடந்து முடிந்தது. சுமார் 3 மணி நேரம் பெற்றோர் வெயி லில் காத்திருந்தனர். நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகள் மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்பவருக்கும் நீட் தேர்வு கட்டாயமாக் கப்பட்டுள்ளது. அதன்படி, நாடுமுழுவதும் 2018-19 கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நேற்று நடந்தது. தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் 136 நகரங்களில் 2,255 மையங்களில் நடந்த நீட் தேர்வை விண்ணப்பித்திருந்த 13 லட்சத்து 26,725 மாணவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் தமிழகத்தில் 10 நகரங்களில் 170 மையங்களில் 1 லட்சத்து 7,288 மாணவர்களில், 1 லட்சம் பேர் தேர்வு எழுதினர். காலை 6 மணி முதல் மாணவர் கள் தேர்வு மையத்தின் வாயிலில் காத்திருந்தனர். மையத்தின் வா யில் மற்றும் உள்பகுதி என 2 இடங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைக்கு பின்னரே தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக மாணவிகளை பொது இடங்களில் வைத்து சோதனை செய்தது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. இதற்கு பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவிகள் அணிந்து வந்திருந்த கம்மல், மூக்குத்தி, கொலுசு, வளையல்கள் அகற்றப்பட்டன. மாணவ, மாணவிகள் கை களில் கட்டியிருந்த சாமி கயிறு கள் அறுத்தெறியப்பட்டன. பிளேடுகளை வைத்து அறுத்ததால் ஒரு சில மாணவர்களின் கைகளில் காயமும் ஏற்பட்டது. மாணவிகளின் தலைமுடிகளை களைந்தும் காதுகளில் டார்ச் லைட் அடித்தும் சோதனை செய்தனர். கடுமையான கட்டுப்பாடுகளாலும் சோதனைகளாலும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவ, மாணவிகள் பதற்றத்துடனேயே தேர்வு எழுதினர். 9.30 மணிக்கு பின்னர் வந்தவர்களுக்கு அனு மதி மறுக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் அதிகாரிகளுடன் வாக்குவாதமும் போராட்டமும் நடைபெற்றது. சென்னையில் 49 மையங்களில் தேர்வு நடைபெற்றது. பெரும்பாலும் திருச்சி, மதுரை, தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னையில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. கோபாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளி யில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் அதிகாரிகள் ஆதார் கார்டு இருந் தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்களும் பெற்றோர்களும் "ஹால் டிக்கெட் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மட் டும் கொண்டுவர வேண்டும். மற்ற எதுவும் தேர்வு மையத்துக்குள் அனுமதியில்லை என்று தெளி வாக சொல்லப்பட்டுள்ளது. பின் எதற்காக ஆதார் கார்டு கேட்கிறீர்கள் " என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகே மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். கேரள மாணவி கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அஹிசா என்ற மாணவிக்கு சென்னை கோபாலபுரம் தனியார் பள்ளியில் தேர்வு மை யம் ஒதுக்கப்பட்டிருந்தது. தந்தை ஷாஜியுடன் மலப்புரத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்தார். அதிகாலை 5.40 மணிக்கு வர வேண்டிய ரயில், அரக்கோணத்தில் நடக்கும் தண்டவாளம் சீரமைப்பு பணியால் தாமதமாக காலை 9.40 மணிக்கு வந்தது. அங்கிருந்து காரில் தேர்வு மையத்துக்கு 9.50 மணிக்கு வந்தார். ஆனால், அவரை அனுமதிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அங்கிருந்த பொதுமக்கள் எவ்வளவு சொல்லியும் சாலை மறி யல் போராட்டம் நடத்தியும் அனுமதிக்கவில்லை. இதனால் தேர்வு எழுத முடியாமல் மாணவி கதறி அழுத சம்பவம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது. கோவை மாணவருக்கு மறுப்பு இதேபோல் கோவையைச் சேர்ந்த மாணவர் அர்ஷாத் அக மது என்பவருக்கு சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. 9.35 மணிக்கு வந்த மாணவரை 5 நிமிடம் தாமதமாகிவிட்டது என்று கூறி தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் அந்த மாணவர் கண் கலங்கியபடி சென்றார். 5 மணி நேரம் தாமதம் மதுரை நரிமேடு நாய்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 720 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத காலை 9.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டனர். அனைவருக் கும் வினாத்தாள்கள் தேர்வு கண்காணிப்பாளரால் வழங்கப்பட்டன. இதில் 120 பேருக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்கள் தமிழ், ஆங்கிலத்தில் இல்லாமல் இந்தி மொழியில் இருந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் தேர்வு கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தேர்வு மைய அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து தமி்ழ், ஆங்கிலம் வினாத்தாள்களை வழங்கினர். இதனால் 5 மணி நேர தாமதத்துக்குப் பிறகே மாணவர்கள் தேர்வை எழுதத் தொடங்கினர். நீட் தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடந்தது. பெற்றோர் மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் சாலைகளிலும் தெருக்களிலும் வெயிலில் காத்திருத்தனர். தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. தமிழக அரசு மற்றும் பல் வேறு தனியார் அமைப்புகளின் உதவியால் மிகுந்த சிரமத்துக்கிடையே ரயில்கள், பேருந்துகளில் சென்று மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் 15-ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.   DOWNLOAD QP  DOWNLOAD BIOLOGY KEY   DOWNLOAD CHEMISTRY KEY   DOWNLOAD PHYSICS KEY

No comments:

Post a Comment



முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.