Friday, 20 January 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் அரசு ஊழியர் சங்கங்கள் தகவல்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் அரசு ஊழியர் சங்கங்கள் தகவல் | ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு, கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் வலு வடைந்து வருகிறது. மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர் பார்த்து இளைஞர்கள், மாணவர் கள் என லட்சக்கணக்கானவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடை யடைப்பு, லாரிகள் இயக்கம் நிறுத்தம் என தானாக முன்வந்து பல சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக, தமிழக அரசு ஊழியர்களும் பல் வேறு போராட்டங்களை அறி வித்து வருகின்றனர். தமிழக தலைமைச் செயலக சங்க தலைவர் ஜெ.கணேசன் கூறுகையில்,'' நாங்கள் 20-ம் தேதி கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வருகிறோம். பணிக்கு வந்த பின் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்படும்'' என்றார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப் பில்,''நியாயமான மக்கள் போராட் டத்தில் தமிழ்நாடு அரசுப் பணி யாளர் சங்கமும் பங்கேற்கும் வகையில் 20-ம் தேதி மாலை அனைத்து மாவட்ட தலைநகர் களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப் படை பணியாளர்கள் மாநில மையச் சங்க தலைவர் கே,கணசன்,'' சங்க உறுப்பினர்கள் அனைவரும் 20-ம் தேதி (இன்று) ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து, மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவளிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார். இதே முடிவை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜனும் அறிவித்துள்ளார். ''மாணவர்கள் போராட்டத்துக்கு தமிழக அரசு அலுவலர் சங்கம் ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது. மேலும், போராட்டத்தில் அரசு அலுவலர்கள் பங்கேற்கும் வகை யில், ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட முடிவெடுக்கப் பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார். இதேபோல பல்வேறு சங்கங் களும் அவசர கூட்டம் கூட்டி, போராட்டத்தை அறிவித்து வருகின்றன. கடையடைப்பு, லாரிகள் இயக்கம் நிறுத்தம் என தானாக முன்வந்து பல சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரம் அடைகிறது ஆதார்அட்டை, ரேஷன்கார்டுகளை ஒப்படைப்போம் என அறிவிப்பு

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரம் அடைகிறது ஆதார்அட்டை, ரேஷன்கார்டுகளை ஒப்படைப்போம் என அறிவிப்பு | சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் போராட்டம் தீவிரம் அடைகிறது. ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவைகளை ஒப்படைப்போம் என அறிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 17-ந் தேதி மாணவர்கள், இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டம் மாலையில் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் போராட்டம் விடிய விடிய நடைபெற்றதுடன் 3-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. போராட்டம் பற்றிய தகவல் சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ- மாணவிகளுக்கும் பரவியதையடுத்து அவர்களும் மெரினா கடற்கரைக்கு லாரி, டெம்போ, பஸ், வேன்களில் புறப்பட்டு வந்தனர். கல்லூரி மாணவ- மாணவிகள் குவிந்ததால் மெரினாவில் எங்கும் மனித தலைகளாக காட்சியளித்தது. வாடிவாசல் திறக்கும்வரை இதனால் போராட்டத்தின் வேகம் சூடுபிடித்தது. காமராஜர் சாலையே ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள் போலீசாருடன் இணைந்து சாலைக்கு வரும் மாணவர்களை போராட்டக்களத்துக்குள் செல்லுமாறு அறிவுறுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். கடந்த 2 நாட்களாக போராட்டக்குழுவினரிடம் போலீசார் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தினாலும், வாடிவாசல் திறந்து ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்ற அறிவிப்பை மத்திய-மாநில அரசு தரப்பில் இருந்து எங்களுக்கு உத்தரவாதம் கொடுக்கும்வரை நாங்கள் இந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் என்று தெரிவித்துவிட்டனர். போராட்டம் தீவிரம் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் நரேந்திரமோடி சந்திப்பில் நல்ல முடிவு கிடைக்கும் என்று போராட்டக்காரர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் பிரதமர் நரேந்திரமோடி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருப்பதால் தற்போது எதுவும் செய்ய இயலாது என்று தெரிவித்துவிட்டார். இதையடுத்து போராட்டக் குழுவினர் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர். போராட்டக்குழுவினர் போராட்டக்காரர்கள் மத்தியில் பேசும்போது, "முதல்- அமைச்சர், பிரதமர் சந்திப்புக்கு பிறகாவது ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எந்த முடிவும் கிடைக்கவில்லை. இருப்பினும் நம்முடைய கோரிக்கையான வாடிவாசல் திறந்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். அந்த அறிவிப்பு வரும்வரை நம்முடைய போராட்டத்தை தொடருவோம்" என்றனர். கமிஷனர் பார்வையிட்டார் இதற்கிடையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், விவேகானந்தர் இல்லத்துக்கு இரண்டு முறை வந்து போராட்டம் நடைபெறும் இடத்தையும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களையும் விவேகானந்தர் இல்லத்தின் மாடியில் இருந்து பார்வையிட்டார். அவர் போலீஸ் அதிகாரிகளிடம் மட்டும் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் போராட்டக்குழுவினர் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் 2 முறை பேசினார்கள். முதலில் மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணனிடமும், அடுத்து கூடுதல் கமிஷனர் தாமரைகண்ணனிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆதார் அட்டை, ரேஷன்கார்டு அவசர சட்டம் பிறப்பிக்க இயலாது என்று பிரதமர் கூறியதை தொடர்ந்து போராட்டக்குழுவினர் நிருபர்களிடம் கூறியதாவது:- நாங்கள் 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் எங்களுக்கு இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. முதல்- அமைச்சர், பிரதமர் சந்திப்பில் சரியான முடிவு எதுவும் கிடைக்கவில்லை. வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டால் மட்டுமே நாங்கள் இந்த இடத்தைவிட்டு புறப்படுவோம். அதுவரைக் கும் நாங்கள் புறப்படமாட்டோம். மாபெரும் போராட்டமாக நாங்கள் நடத்திக்கொண்டு இருக்கிறோம். இந்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மக்கள் போராட்டமாக மாறப்போகிறது. எங்களுடைய ஆதார் அட்டை, வாக் காளர் அடையாள அட்டை, ரேஷன்கார்டு ஆகியவற்றை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்து நாங்கள் இந்தியாவில் வாழ தகுதி இல்லாதவர்கள் என்பதை வெளிப்படுத்தப்போகிறோம். கருப்பு பேட்ஜ் அணியுங்கள் அரசு போக்குவரத்து பணியாளர்கள், ஆட்டோ மற்றும் கால்டாக்சி டிரைவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடும் எங்களை ஆதரித்து ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு ஆதரவு தாருங்கள். அப்போது தான் இந்த மாபெரும் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும். போராட்டம் தொடரும். போலீசாருக்கு ஒரு வேண்டுகோள். 3 நாட்களாக நல்ல ஆதரவு தந்தீர்கள். எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று ஒரு நாள் கருப்பு 'பேட்ஜ்' அணிந்து உங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டுகிறோம். உங்களுக்கு எங்கள் இளைஞர்கள் சார்பிலும், தமிழர்கள் சார்பிலும் நன்றியை தெரிவிக்கிறோம். ஆதரவு பெருகுகிறது எங்களுக்கு ஐ.டி. பணியாளர்கள், வணிகத்துறையினர், லாரி உரிமையாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள், ஆசிரியர் சங்கத்தினர், மருத்துவர்கள், சினிமாத்துறையினர் ஆதரவுகள் தெரிவித்துவிட்டனர். ஜல்லிக் கட்டுக்கு ஆதரவு பெருகுகிறது. இவ்வாறு அவர் கூறினர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு: தமிழகம் முழுவதும் இன்று 20-ந் தேதி வியாபாரிகள் கடையடைப்பு உண்ணாவிரதம்- ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு: தமிழகம் முழுவதும் இன்று வியாபாரிகள் கடையடைப்பு உண்ணாவிரதம்- ஆர்ப்பாட்டம் அறிவிப்பு | ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இன்று கடையடைப்பு ஜல்லிக்கட்டை காப்பாற்றியாக வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ-மாணவிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் நாளை (இன்று) தமிழகம் முழுவதும் ஒரு நாள் கடைகளை அடைப்பது என்று வணிகர் பேரவை முடிவு எடுத்திருக்கிறது. கடைகளை அடைப்பதுடன் தங்கள் பகுதியில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களை வியாபாரிகள் நடத்துவார்கள். நல்ல குடிநீர் கிடைக்காமல், கொசுக்கடி, சுற்றுச்சூழல் கேடு என்று நாளும் வதைப்படும் மக்களை பற்றி கவலைப்படாமல் மிருகங்களுக்காக வாதாடுவதாக சொல்லி தேவையற்ற விதத்திலும், அன்னிய ஆதிக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வணிகர் பேரவை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். விக்கிரமராஜா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாணவர்கள், இளைஞர்கள் நடத்தும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவு குறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எனது தலைமையில் நடந்தது. கூட்டத்தில், ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள்-இளைஞர்கள் நடத்தும் போராட்டத்துக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு அளிக்கிறது. இப்பிரச்சினையில் மத்திய அரசு தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் உடனடியாக சட்டப்பூர்வமான அறிவிப்பை வெளியிட வேண்டும். இன்று (நேற்று) மாலைக்குள் மத்திய அரசு சட்டபூர்வமான முடிவை அறிவிக்கவில்லை என்றால், மாணவர்கள்-இளைஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தமிழக வணிகர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும் 20-ந்தேதி (இன்று) தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும் என்று 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு அவர் கூறியுள்ளார். தமிழ்நாடு அனைத்து மளிகை பொருட்கள் வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 20-ந் தேதி (இன்று) 4,500 வியாபாரிகள் சங்கங்களும், 10 லட்சம் வணிகர்களும் கடைகளை அடைத்து தங்களது ஆதரவை தெரிவிப்பார்கள் என்று கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது மத்திய அரசின் தலைமை வக்கீல் கருத்து

ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது மத்திய அரசின் தலைமை வக்கீல் கருத்து | ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் அவசர சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அரசின் தலைமை வக்கீல் கூறி உள்ளார். இதுகுறித்து மத்திய அரசின் தலைமை வக்கீல் (அட்டார்னி ஜெனரல்) முகுல் ரோகத்கி அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஜல்லிக்கட்டு போட்டியை ஒழுங்குபடுத்துவது குறித்து மாநில அரசு புதிதாக சட்டம் இயற்றலாம். அப்படி சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கூற முடியாது. மாநில அரசுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் கிடையாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறாததால், தமிழக அரசு இது குறித்த சட்டத்தை கொண்டு வரலாம். ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டு என்பதால் அவசர சட்டம் பிறப்பிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஜல்லிக்கட்டு நடத்துவது பற்றிய அவசர சட்டத்தை மாநில அரசு பிறப்பிக்கும் அதே வேளையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் கருத்தில் கொண்டு காளைகளுக்கு தீங்கு இழைக்கப்பட்டால் அதற்குரிய தண்டனை அல்லது அபராதத்தை மாநில அரசு பரிந்துரைக்கலாம். வரையறைகள் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் முன்பு நான் ஆஜராகி இருக்கிறேன். இந்த விளையாட்டில் மிருகங்களுக்கு எதிரான கொடுமை எதுவும் கிடையாது. ஸ்பெயின் நாட்டில் காளைகளை கொல்வது போன்ற கொடூரம் எல்லாம் இங்கு கிடையாது. எனவே, சில வரையறைகளை வகுத்துக்கொண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஏறுதழுவுதல் திருவிழாவை நடத்த மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் இயற்றக்கோரி பொதுநல வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

ஏறுதழுவுதல் திருவிழாவை நடத்த மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் இயற்றக்கோரி பொதுநல வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை | ஏறுதழுவுதல், மஞ்சுவிரட்டு, மாடு பிடி திருவிழா போன்ற விளையாட்டுகளை தமிழகத்தில் நடத்தும்விதமாக மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. பொதுநல வழக்குகள் மையத்தின் நிர்வாக அறங்காவலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது:- பாரம்பரிய விளையாட்டு ஏறுதழுவுதல், மஞ்சுவிரட்டு, மாடு பிடி திருவிழா ஆகியவை கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடத்தப்பட்டுவரும் பாரம்பரிய, கலாசார விளையாட்டுகளாகும். இதுகுறித்து தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் குறிப்புகள் உள்ளன. ஏறுதழுவுதல், மஞ்சுவிரட்டு, மாடு பிடி திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் மாடுகள் துப்புறுத்தப்படுவதில்லை. சித்ரவதை செய்யப்படுவதும் இல்லை. இந்த உண்மை தகவல்களை மறைத்து, பீட்டா என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை உத்தரவை பெற்றுள்ளது. இதனால், நடப்பாண்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோல மாடுகளை வைத்து விளையாடும் விளையாட்டுகள் உலகம் முழுவதும் நடைபெறுகிறது. ஸ்பெயின் நாட்டில் மாடுகளை வைத்து விளையாட்டு நடத்தப்படுகிறது. இந்த விளையாட்டின் இறுதியில் பங்கேற்கும் மாடுகள் கொல்லப்படுகின்றன. ஆனால், அதுபோன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் ஒரு நாளும் நடந்தது இல்லை. சிறப்பு சட்டம் ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்துள்ளதால், இந்த மண்ணில் பூர்வீக காளைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் இந்த கலாசார விளையாட்டுகளை நடத்த ஏதுவாக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த 16-ந் தேதி மனு அளித்துள்ளேன். இதற்கு எந்த பதிலும் இல்லை. எனவே, எனது மனுவை பரிசீலித்து ஏறுதழுவுதல், மஞ்சுவிரட்டு, மாடுபிடி திருவிழா நடத்த ஏதுவாக சிறப்பு சட்டத்தை இயற்றும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை நர்சரி, மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை நர்சரி, மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு | ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பள்ளி வாகனங்கள் ஓடாததால் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக நர்சரி, மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலைப்பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறியதாவது:- தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்துச்செல்லும் வாகனங்கள், ஆட்டோக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து நர்சரி பள்ளிகள், பிரைமரி பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை விடப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் இளங்கோவனும் இன்று அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக தெரிவித்து உள்ளார். அரசு பள்ளிகள் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்று பள்ளி கல்வி இயக்குனர் ச.கண்ணப்பனிடம் கேட்டதற்கு, 'திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார். அதேபோல் மற்ற மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாமா? என்பதை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்' என்று தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 19 January 2017

INDIAN OIL RECRUITMENT 2017 | INDIAN OIL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - TECH ASST / ENGI ASST | NO. OF VACANCIES 4 | LAST DATE 17.02.2017

>>>>>>>
>>Employment Type:Govt Job
>>Application:OFFLINE
>>Website:https://www.iocl.com/
>>Name of the Post:TECH ASST / ENGI ASST
>>கல்வித் தகுதி:AS PER NORMS
>>காலியிடங்கள்:4
>>சம்பளம்:11900-32000
>>தேர்வு செய்யப்படும் முறை:MERIT
>>கடைசித் தேதி:17.02.2017
>>தேர்வு நாள்:




விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆவின் பால் நிறுவனத்தின் ஈரோடு மாவட்ட பிரிவில் 17 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 08-02-2017

ஆவின் : ஆவின் பால் நிறுவனத்தின் ஈரோடு மாவட்ட பிரிவில் மேனேஜர் மற்றும் டெபுடி மேனேஜர் பணிக்கு 4 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மற்றொரு அறிவிப்பின்படி ஜூனியர் எக்சிகியூட்டிவ் ஆபீசர், ஹெவி வெகிகிள் டிரைவர், டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு 17 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை பற்றிய விரிவான விவரங்களை www.aavinmilk.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி, தேவையான சான்றுகளை இணைத்து, 8-2-2017-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்பலாம்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி.இ.எல்) நிறுவனத்தில் 15 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 04-02-2017

பி.இ.எல். : பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி.இ.எல்) நிறுவனத்தில் ஹவில்தார் பணிகளுக்கு 15 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். இது முன்னாள் படைவீரர்களுக்கான பணியிடங் களாகும். விண்ணப்பதாரர் 28 வயது பூர்த்தியாகி இருப்பதுடன், குறிப்பிட்ட வருடம் படைவீரராக பணியாற்றியிருக்க வேண்டும். இது பற்றிய விவரங்களை www.bhelindia.com/careers என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் 4-2-2017-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.





விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை லாரிகள் ஓடாது

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை லாரிகள் ஓடாது | ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை (வெள்ளிக்கிழமை) லாரிகள் ஓடாது என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து சம்மேளன தலைவர் குமாரசாமி கூறியதாவது:- தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க கோரியும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகளை இயங்குவது இல்லை என முடிவு செய்து உள்ளோம். இதன்படி தமிழகம் முழுவதும்  சுமார் 4½ லட்சம் லாரிகள் ஓடாது. தமிழர்களின் பாரம்பரியத்தை மீட்க நடைபெறும் இந்த போராட்டத்திற்கு அனைத்து லாரி உரிமையாளர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலியாக கல்லூரிகளுக்கு விடுமுறை.

ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலியாக அரசு கலைக்கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை சட்டக்கல்லூரிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை | ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளுக் கும் இன்று (வியாழக்கிழமை) முதல் காலவரையற்ற விடுமுறை விடப்படுகிறது. அரசு சட்டக்கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கலைக்கல்லூரிகளுக்கு விடுமுறை தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்க கோரி அனைத்து கல்லுரி மாணவர்களும் போராடி வருகிறார்கள். இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு கல்லூரிகளின் இயக்குனர் மஞ்சுளா கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் அந்தந்த கல்லூரி முதல்வர்கள் விடுமுறை விடலாம். அதாவது திங்கட்கிழமை வரை அல்லது பிரச்சினை தீரும் வரை காலவரையற்ற விடுமுறை விடலாம். இது அந்தந்த கல்லூரி முதல்வர்களின் முடிவை பொறுத்தது" என்று தெரிவித்தார். பொறியியல் கல்லூரிகள் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, கட்டிடக் கல்லூரி, குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரிக்கு இன்றும், நாளையும் விடுமுறைவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக அந்தந்த கல்லூரி முதல்வர்கள் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள அரசு காயிதே மில்லத் கல்லூரி, பாரதி பெண்கள் கல்லூரி, டாக்டர் அம்பேத்கர் கலைக்கல்லூரி, மாநில கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி, புதுக் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, செல்லம்மாள் பெண்கள் கல்லூரி, டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி உள்பட 31 கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறைவிடப்பட்டுள்ளது. சட்டக்கல்லூரிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்டக்கல்லூரிகளுக்கும், சட்டக்கல்லூரிகளின் விடுதிகளுக்கும் இன்றும், நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது என்று சட்டக்கல்வி இயக்குனர் சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் சீர்மிகு சட்டக்கல்லூரிக்கும் இன்றும், நாளையும் விடுமுறைவிடப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு அந்தந்த பகுதி நிலைமைக்கு ஏற்ப விடுமுறைவிட கல்லூரியின் முதல்வர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் 32 மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்து அரசாணை வெளியீடு

தமிழகத்தில் 32 மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்து அரசாணை வெளியீடு | பருவமழை பொய்த்து போனதையடுத்து தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து மாவட்ட வாரியாக அமைச்சர்கள் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழுவினர் களஆய்வு செய்து கடந்த 9-ந்தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். இதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், வடகிழக்கு பருவ மழை குறைவாக தமிழகத்தில் பெய்துள்ளதால், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைபடி வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க தகுதி இருக்கிறது என்று கூறி அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரியும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதுதவிர அனைத்து துறைகள் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு 32 மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்து அரசாணையை வெளியிட்டு உள்ளது.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நாளை கடை அடைப்பு போராட்டம் த.வெள்ளையன் பேட்டி

நாளை கடை அடைப்பு போராட்டம் த.வெள்ளையன் பேட்டி | ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், ஜல்லிக் கட்டை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் வணிகர்கள் அமைப்புகள் நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதிலும் கடைகளை அடைத்து போராட்டத்தை நடத்த உள்ளனர். இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக நாங்கள் 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதிலும் கடைகளை அடைக்க இருக்கிறோம். மேலும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களையும் நாங்கள் மேற்கொள்கிறோம். தமிழகம் முழுவதிலும் 40 லட்சம் கடைகள் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை.

அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: நாளை முதல் தமிழ்நாட்டில் மழை பெய்யும் வானிலை இயக்குனர் பேட்டி | அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் ஸ்டெல்லா தெரிவித்தார். பனி பெய்கிறது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிந்து இப்போது இரவில் பனிபெய்து வருகிறது. அதிகாலையிலும் குளிர் அதிகமாக இருப்பதால் சென்னை புறநகர் பகுதிகளில் மக்கள் தீ மூட்டி குளிர் காய்கிறார்கள். இந்த நிலையில் தாய்லாந்து அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்று வானிலை மையம் அறிவித்த, மக்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது. வானிலை நிலவரம் குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் ஸ்டெல்லா கூறியதாவது;- தாய்லாந்து அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நேற்று முன்தினம் உருவானது. அது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக அந்தமான் அருகே உள்ளது. நாளை முதல் மழை பெய்யும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற வாய்ப்பில்லை. இருப்பினும் தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மழை பெய்யும். நாளை தமிழ்நாட்டில் தென்கடலோர பகுதியில் பெய்யும். அதைத்தொடர்ந்து 21 மற்றும் 22 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும். அதற்கு பின்னர் மழை பெய்வது குறித்து இப்போதைக்கு எதுவும் கூறக்கூடாது. இருந்தாலும் தமிழகத்தில் 19-ந்தேதி வறண்ட வானிலைதான் நிலவும். இவ்வாறு ஸ்டெல்லா தெரிவித்தார்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சினிமா படப்பிடிப்புகள் ரத்து

சினிமா படப்பிடிப்புகள் ரத்து | திரைப்பட கூட்டமைப்பு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு மற்றும் வீரத்தின் அடையாளமாக விளங்குவது ஜல்லிக்கட்டு. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்திலும், தமிழ் கூறும் மக்களாலும் நடத்தப்பட்டு வரும் ஏறுதழுவுதல் என்ற இந்த வீர விளையாட்டு தொன்மையான நம் ரத்தத்தில் ஊறிய நிகழ்வு. இந்த வீர விளையாட்டை நடத்த விடாமல் தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்திய அன்னிய நிறுவனம் பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தியும் இந்தியாவின் எதிர்காலமாகவும், நாளைய தேசமாகவும் இருக்கும் இளைய பாரதத்தினர், மாணவர்களை ஆதரித்தும் இன்று (19-ந் தேதி) அடையாள வேலை நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு சின்னத்திரை கூட்டமைப்பு, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் ஆகியவை இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இன்று திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்பான எந்த பணிகளும் நடைபெறாது என்று தெரிவித்துக்கொள்கிறோம்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பானிபட் சுத்திகரிப்பு ஆலையில் 32 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 29-1-2017

இந்தியன் ஆயில் : இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பானிபட் சுத்திகரிப்பு ஆலையில் ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் பணிக்கு 32 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பயர்சேப்டி, இன்ஸ்ட்ருமென்டேசன், பவர்யூடிலிட்டிஸ், ஆபரேசன் அண்ட் மெயின்டனன்ஸ், மெக்கானிக்கல் பிட்டர், புரொடக்சன் போன்ற பிரிவுகளில் பணிகள் உள்ளன. 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. விரிவான விவரங்களை www.iocrefrecruit.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 29-1-2017-ந் தேதி.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பி.சி.பி.எல் நிறுவனத்தில் டெக்னீசியன் மற்றும் கிராஜூவேட் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி.விண்ணப்பிக்க கடைசி நாள் 31-1-2017

பி.சி.பி.எல்: பிரமபுத்ரா கிராக்கர் அண்ட் பாலிமர் லிமிடெட் (பி.சி.பி.எல்.) எனப்படும் பொதுத்துறை நிறுவனத்தில் டெக்னீசியன் மற்றும் கிராஜூவேட் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 39 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். என்ஜினீயரிங்/டெக்னாலஜி பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விரிவான விவரங்களை www.bcplonline.co.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 31-1-2017-ந் தேதியாகும்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ரிட்ஸ் நிறுவனத்தில் 43 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 16-1-2017

ரெயில்வே : ரெயில்வே அமைப்பின் துணை நிறுவனங்களில் ஒன்றான ரிட்ஸ் நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயர் பணிக்கு 28 பேர் தேர்வுசெய்யப்படுகிறார்கள். 32 வயதுக்கு உட்பட்ட, மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்த விண்ணப்பதாரர்கள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அத்துடன் தேவையான சான்றுகளை கொண்டு சென்று தேர்வில் பங்கேற்கலாம். விண்ணப்பிக்க 16-1-2017 கடைசி நாளாகும். 21-1-2017-ந் தேதி எழுத்துத் தேர்வு, 22-1-2017-ந் தேதி நேர்காணலும் நடைபெறுகிறது. இது பற்றிய விவரங்களை www.rites.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஏற்றுமதி ஆய்வுக்கழகத்தில் (EIC) 44 பணிகள்.விண்ணப்பிக்க கடைசி நாள்17-2-2017

ஏற்றுமதி ஆய்வு கழகம்: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏற்றுமதி ஆய்வுக்கழகத்தில் (EIC) 44 பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டெக்னிக்கல் ஆபீசர் பணிக்கு 35 இடங்கள், செக்சன் ஆபீசர் பணிக்கு 7 இடங்கள், அக்கவுண்ட்ஸ் ஆபீசர் பணிக்கு 2 இடங்கள் உள்ளன. என்ஜினீயரிங்/ டெக்னாலஜி படித்தவர்கள் மற்றும் இதர பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை www.eicindia.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பம் உள்ளவர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்தி 10-2-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். நகல் விண்ணப்பம் 17-2-2017-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி : கல்லூரிகளுக்கு விடுமுறை

ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி: அனைத்து சட்டக் கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை | ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி: அனைத்து சட்டக் கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், சென்னையில் உள்ள அரசு, தனியார் கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிப்பதாக கல்லூரி நிர்வாகங்கள் அறிவித்தன. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு பள்ளிகளுக்கு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோவை அரசு கல்லூரிக்கும் நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அனைத்து துறைகளுக்கும் 22-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, விடுதியை விட்டு வெளியேற மாணவ, மாணவிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், கல்லூரிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை அறிவிப்பு வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜல்லிக்கட்டு | மோடி நல்ல செய்தி சொல்லாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்: போராட்டக் குழுவினர் திட்டவட்டம்

மோடி நல்ல செய்தி சொல்லாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்: போராட்டக் குழுவினர் திட்டவட்டம் | பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பன்னீர் செல்வம் இடையிலான சந்திப்புக்கு பிறகு நல்ல பதில் கிடைக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என்று ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மோடி நல்ல செய்தி சொல்லாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்: போராட்டக் குழுவினர் திட்டவட்டம் சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு தமிழக முதல்வர் அழைப்பு விடுத்து இருந்தார். சென்னையில் உள்ள முதல்வர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்புக்கு பிறகு பிரதமரை சந்திப்பதற்காக முதலமைச்சர் டெல்லிக்கு புறப்பட்டு சென்று விட்டார். பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் போராட்டக் குழுவினர் பேசியதாவது:- முதல்வர் பன்னீர் செல்வத்துடன் சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தனது இல்லத்தில் உள்ள 4 காளைகளை பார்க்குமாறு எங்களை வற்புறுத்தி கூறினார். நாங்கள் அந்த காளை மாடுகளை பார்த்தோம். அந்த காளைகளை பார்க்கையில் மிகவும் வியப்பாக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பன்னீர் செல்வம் இடையிலான சந்திப்புக்கு பிறகு நல்ல பதில் கிடைக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மேலும் பெருமளவில் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPL RECRUITMENT 2017 | TNPL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - GENERAL MANAGER | NO. OF VACANCIES 2 | LAST DATE 02.02.2017

>>>>>>>
>>Employment Type:Govt Job
>>Application:OFFLINE
>>Website:http://www.tnpl.com/
>>Name of the Post:GENERAL MANAGER
>>கல்வித் தகுதி:AS PER NORMS
>>காலியிடங்கள்:2
>>சம்பளம்:Rs 2,06,700
>>தேர்வு செய்யப்படும் முறை:MERIT
>>கடைசித் தேதி:02.02.2017
>>தேர்வு நாள்:




விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPL RECRUITMENT 2017 | TNPL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - DIRECTOR | NO. OF VACANCIES 2 | LAST DATE 02.02.2017

>>>>>>>
>>Employment Type:Govt Job
>>Application:OFFLINE
>>Website:http://www.tnpl.com/
>>Name of the Post:DIRECTOR
>>கல்வித் தகுதி:AS PER NORMS
>>காலியிடங்கள்:2
>>சம்பளம்:Rs 2,59,100
>>தேர்வு செய்யப்படும் முறை:MERIT
>>கடைசித் தேதி:02.02.2017
>>தேர்வு நாள்:




விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 18 January 2017

CLASS 12 - MATHS TM - SEPTEMBER 2016 GOVT QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 12-HSC-12TH - PLUS TWO - MATHS TM - SEPTEMBER 2016 - GOVT QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040 - EMAIL enquiry@surabooks.com | CALL 044 4265 5644

CLASS 12 - MATHS TM - SEPTEMBER 2016 GOVT QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 12-HSC-12TH - PLUS TWO -   MATHS TM - SEPTEMBER 2016 - GOVT QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040 - EMAIL  enquiry@surabooks.com | CALL 044 4265 5644
CLASS 12 - MATHS TM - SEPTEMBER 2016 GOVT QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 12-HSC-12TH - PLUS TWO -   MATHS TM - SEPTEMBER 2016 - GOVT QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040 - EMAIL  enquiry@surabooks.com | CALL 044 4265 5644



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

CLASS 12 - TAMIL - SEPTEMBER 2016 GOVT QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 12-HSC-12TH - PLUS TWO - TAMIL - SEPTEMBER 2016 - GOVT QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040 - EMAIL enquiry@surabooks.com | CALL 044 4265 5644

CLASS 12 - TAMIL - SEPTEMBER 2016 GOVT QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 12-HSC-12TH - PLUS TWO - TAMIL - SEPTEMBER 2016 - GOVT QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040 - EMAIL  enquiry@surabooks.com | CALL 044 4265 5644
CLASS 12 - TAMIL - SEPTEMBER 2016 GOVT QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 12-HSC-12TH - PLUS TWO - TAMIL - SEPTEMBER 2016 - GOVT QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040 - EMAIL  enquiry@surabooks.com | CALL 044 4265 5644



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

CLASS 12 - ENGLISH - SEPTEMBER 2016 GOVT QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 12-HSC-12TH - PLUS TWO - ENGLISH - SEPTEMBER 2016 - GOVT QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040 - EMAIL enquiry@surabooks.com | CALL 044 4265 5644

CLASS 12 - ENGLISH - SEPTEMBER 2016 GOVT QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 12-HSC-12TH - PLUS TWO -  ENGLISH - SEPTEMBER 2016 - GOVT QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040 - EMAIL  enquiry@surabooks.com | CALL 044 4265 5644
CLASS 12 - ENGLISH - SEPTEMBER 2016 GOVT QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 12-HSC-12TH - PLUS TWO -  ENGLISH - SEPTEMBER 2016 - GOVT QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040 - EMAIL  enquiry@surabooks.com | CALL 044 4265 5644



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

CLASS 12 - PHYSICS EM - SEPTEMBER 2016 GOVT QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 12-HSC-12TH - PLUS TWO - PHYSICS EM - SEPTEMBER 2016 - GOVT QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040 - EMAIL enquiry@surabooks.com | CALL 044 4265 5644

CLASS 12 - PHYSICS EM - SEPTEMBER 2016 GOVT QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 12-HSC-12TH - PLUS TWO -   PHYSICS EM - SEPTEMBER 2016 - GOVT QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040 - EMAIL  enquiry@surabooks.com | CALL 044 4265 5644
CLASS 12 - PHYSICS EM - SEPTEMBER 2016 GOVT QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | CLASS 12-HSC-12TH - PLUS TWO -   PHYSICS EM - SEPTEMBER 2016 - GOVT QUESTION PAPER WITH ANSWERS BY SURA BOOKS - SURA BOOKS PVT. LTD-1620 J-Block-16th Main Road-Annanagar-Chennai - 600040 - EMAIL  enquiry@surabooks.com | CALL 044 4265 5644



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE
Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.