Wednesday, 15 November 2017

COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு

COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும். தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு மட்டும் கூடுதலாத குறிப்பிட்ட தொழில்நுட்ப தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கான தகுதிகள், வயது வரம்பு, தேர்வுமுறை, கட்டணச் சலுகை, பாடத்திட்டம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) விளக்கமாக தெரிந்து கொள்ளலாம். டிஎன்பிஎஸ்சி இணையதளத்தைப் பயன்படுத்தி டிசம்பர் 13-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் (நேர்முகத் தேர்வு கிடையாது). தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசு பணிகளில், 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு நியமனங்களுக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். வழக்கமாக, டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வும், விஏஓ தேர்வும் தனித்தனியாக நடத்தப்படுவது வழக்கம். தற்போது முதல்முறையாக இரு தேர்வுகளும் சேர்த்து ஒருங்கிணைந்த தேர்வாக நடத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. | DOWNLOAD | HELPCENTRE |

No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.