Tuesday, 24 October 2017

எழு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை

எழு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் | மடிக்கணினி எல்லாம் கொடுத்துஅரசுப்பள்ளி மாணவர்களைஹைடெக்காகமாற்ற நினைக்கும்அரசு பாராட்டுக்குரியதுதான்.ஆனால்,மாணவர்களுக்குக் கணினிகொடுத்த அரசு கணினி வழிக்கல்வியைக் கற்றுக் கொடுக்கஆசிரியர்களை நியமிக்காமல்இருப்பது ஏன்? இதனால், கணினிவழிகல்வி போதிக்கும் பல பட்டதாரிஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது என்று வேதனையுடன் கூறுகிறார்கள் கணினி வழிக் கல்வி பயின்ற பி.எட் ஆசிரியர்கள்.தனியார் பள்ளிகளுக்குநிகராக அரசுப்பள்ளி மாணவர்களும்உயர வேண்டும் என்று சமச்சீர் கல்விமுறையை 2011ஆம் ஆண்டுஅறிமுகப்படுத்தியது அரசு.அதில்,ஒன்றாம் வகுப்பு முதல்பத்தாம் வகுப்பு வரை கணினிஅறிவியல் புத்தகங்கள்கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல் இரண்டு வருடம் மட்டும்புத்தகங்கள் கொடுக்கப்பட்டு,அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது.ஆனால், கடந்த ஆறுவருடங்களாக கணினி அறிவியலில்பி.எட். படித்த ஆசிரியர்களை பணி நியமனம்செய்யவில்லை.கடந்த 15ஆண்டுகளாக கணினி அறிவியல்பட்டதாரிகள் பலர் வேலையில்லாமல்தவிக்கின்றனர். இந்தப் பட்டதாரிகள் ஒருங்கிணைந்து 2014-ஆம் ஆண்டுகணினி அறிவியல்வேலையில்லாபட்டதாரிகள்சங்கத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.இச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் குமரேசன் கூறுகையில், 1992-ஆம் ஆண்டுல இருந்தேகம்ப்யூட்டர் சயின்ஸ் பி.எட். இருக்கு.நான் படிச்சது பி.எட். ஆனா,டெக்ஸ்டைல்ல வேலை பாத்துட்டு இருக்கேன். இதுவரைக்கும் கிட்டத்தட்ட 39,019கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள்வேலை இல்லாமஇருக்காங்க.ஒரு படிப்புனு இருந்தா அதுக்கானவேலை வாய்ப்பு இருக்கணும்.வருஷாவருஷம் ஆயிரக்கணக்கானபேர் படிச்சுட்டு வெளியே வராங்க.ஆனா,ஏற்கெனவே படிச்சுவேலைவாய்ப்பு அலுவலகத்திலபதிவு செய்திருக்கிறயாருக்குமே வேலை இல்லை. பின்ன ஏன் இந்தப்படிப்ப இன்னும் வச்சிருக்காங்கன்னு புரியல" என்றுகுமுறுகிறார்.கம்ப்யூட்டர் சயின்ஸ்லபி.எட். படிச்ச நாங்க பலவகையில் நசுக்கப்பட்டவங்க. மற்றஆசிரியர்பயிற்சி முடித்தவர்கள் கலந்துகொள்ளும் டெட், டிஆர்பி எக்ஸாம் போன்றவற்றில் கூட கலந்துகொள்ள எங்களுக்குஅனுமதி கிடையாது" என்று விரக்தியுடன் பேசுகிறார்கள்கணிப்பொறி ஆசிரியர்கள்.2006-ஆம்ஆண்டுக்குப் பிறகுதரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகள்எதிலும் கணிப்பொறி ஆசிரியர்கள்நியமிக்கப்படவில்லை.கடந்தவருடத்தில் கூட 407 பள்ளிகள்தரம்உயர்த்தப்பட்டதாக கூறியிருக்கிறார்.ஆனால் அந்தப்பள்ளிகள் எதிலும் கணிப்பொறிவழிக் கல்வி கிடையாது.கம்யூட்டர்சயின்ஸ் டீச்சர் இல்லாமல்தான் பலபள்ளி மாணவர்கள் தானாவே கற்றுக்கொள்கிறார்கள். 2011 இல் சமச்சீர் கல்வி கொண்டுவந்தார்கள் அதில் கணினிஅறிவியல் பாடத்திட்டம்இருந்தது.ஆனால்,அந்த புத்தகங்களும் அரசு அலுவலகங்களில் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.மாணவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.பட்டதாரிஆசிரியர்களுக்கும் வேலைவழங்கவில்லை.வருடந்தோறும் மத்திய அரசு கோடி கணக்கில் நிதிஒதுக்கி வருகிறது.வருடத்திற்க்கு 250 கோடி ரூபாய் வருகிறது.2011-இல்முதல்கட்டமாக 43கோடி ரூபாய்கொடுத்தார்கள்.ஆனால் எதையும்செயல்படுத்தாமல்வீணாக்குகிறார்கள்"என்று மாநிலசெயலாளர் குமரேசன் வருத்தத்துடன் பேசுகிறார். தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில்ஆர்ப்பாட்டமும் போராட்டமும்நடத்தியிருக்கிறோம்.ஒவ்வொரு மாவட்ட ஆட்சியிர் அலுவலகத்திலும் கருணை மனுகொடுத்திருக்கிறோம். 67முறை சென்னைக்கு வந்து மனுசெய்திருக்கிறோம்.36முறை கல்வி அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம். அரசு அதிகாரிகள் அரசியல்தலைவர்கள் பலரையும் சந்தித்து எங்கள் கோரிக்கையைமுன் வைத்திருக்கிறோம். எல்லா இடங்களிலும் சொல்லிவைத்தது போல் அரசின் கொள்கைமுடிவுக்கு உட்பட்டது என்ற பதில்தான் வருகின்றது. தனியார் பள்ளிகளில் ஒன்றாம்வகுப்பு முதலே கணினி வழிக்கல்வி இருக்கிறது.அதை இன்னும்மேம்படுத்த அரசும்ஊக்குவிக்கிறது.ஆனால் அரசுப்பள்ளிகளில் ப்ளஸ் ஒன்,ப்ளஸ் டூக்குமட்டுமே அதுவும் பாதி பள்ளியில்ஆசிரியர்கள் இல்லாமல் படிக்கிறார்கள்" ... திரு வெ.குமரேசன், 9626545446, மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரிஆசிரியர்கள் சங்கம் 655/2014.

5 comments:

 1. Replies
  1. உதயசந்திரன் தாக்கல் செய்த பதில் மனு:கல்வி தரத்தை உயர்த்தவும், நுழைவு தேர்வுகளை மாணவர்கள் அச்சமின்றி எழுதும் வகையிலும், பாடத்திட்டத்தை மாற்ற, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தலைமையில், உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கலைத்திட்டம் மற்றும் தேர்வு சீரமைப்புக்காக, மூன்று துணை குழுக்களும் அமைக்கப்பட்டு, அறிக்கை பெறப்பட்டுள்ளது. ஒன்று முதல் பிளஸ் 2 வரை, பல ஆண்டுகள் பழமையான பாடத்திட்டத்தை மாற்ற வேண்டிய தேவையுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மற்றும் இதர பாட வாரிய திட்டங்களை விட, மேலான பாடத்திட்டம் தயாரிக்க வேண்டும் என, கூட்டத்தில் முடிவானது. தொழிற்கல்வியில், 12 வகை பாடப்பிரிவுகளுக்கும், பாடத்திட்டத்தை மாற்ற வேண்டியுள்ளது.ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, கணினி பாடத்தை சேர்க்கவும், பிளஸ் 1க்கு பொது தேர்வு கொண்டு வரவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1க்கு, 2018 - 19 மற்றும் பிளஸ் 2வுக்கு, 2019 - 20ல், புதிய பாடத்திட்டம் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ.,யை விட தரமான, பாட புத்தகங்கள் வழங்கப்படும். அதற்காக, அண்ணா பல்கலையின் முன்னாள் துணை வேந்தர், எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில், 10 பேர் இடம் பெற்ற, கலைத்திட்ட தயாரிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது

   Delete
 2. அரசை கேள்வி கேட்கும் நேரம்

  ReplyDelete
 3. தனியார் பள்ளிகளுக்கு இனையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவு கிடைக்க, ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக சேர்க்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் அறிவியல் ஒரு பகுதியாக துறை பாடமாக சேர்த்து அதை மாணவர்களுக்கு சிறப்பாக கற்றுக் கொடுக்க B.ed கணினி ஆசிரியர்களை மாணவர்கள் எண்ணிக்கை ஏற்ப ஒவ்வொரு பள்ளிகளிலும் பட்டதாரி ஆசிரியர்கள் ஊதியத்தில் அல்லது குறைந்த பட்சம் நிதி நிலைமை மற்றும்கா லத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் காக்க பட வேண்டும்.

  ReplyDelete

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.