Tuesday, 17 October 2017

மாநில தொழிலாளர் நல வாரியத்தின் கல்வி உதவி பெற விண்ணப்பிக்க அழைப்பு

மாநில தொழிலாளர் நல வாரியத்தின் கல்வி உதவி பெற விண்ணப்பிக்க அழைப்பு தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் பிளஸ் 1 முதல் முதுகலைப் பட்டம் வரை படிக்கும் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்க நிதியுதவி வழங்கப்படுகிறது. பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், ஆசிரியர் பயிற்சி, உடற்பயிற்சி ஆசிரியர் ஆகியவற்றில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்பு, தொழிற் பயிற்சிக் கல்வி, மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதுதவிர 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10 மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகைகளைப் பெற, ''செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தபால் பெட்டி எண் 718, தேனாம்பேட்டை, சென்னை - 6'' என்ற முகவரிக்கு வரும் 31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இது தொடர்பான விவரங்களை 044 - 2432 1542 என்ற தொலைபேசி எண் அல்லது www.labour.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறியலாம். இவ்வாறு தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் நேற்று வெளியிட்ட கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. Hai....I'm a secondary grade panchayat school teacher,working at Madurai city....I need mutual transfer to chennai..pls if any one interested feel free to reply here...my no 8608267890

    ReplyDelete

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.