Saturday, 30 September 2017

புதிய பாடத்திட்டத்தில் பணி வாய்ப்பு | 40000 கம்ப்யூட்டர் ஆசிரிய பட்டதாரிகள் எதிர்பார்ப்பு.

விரைவில் அமலாகும் புதிய பாடத்திட்டத்தில், பி.எட்., படித்து காத்திருக்கும், 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கணினி ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற, எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.தமிழகத்தில், சமச்சீர் கல்வித்திட்டம் அமல்படுத்திய போது, அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை, கணினி அறிவியல் பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், ஆசிரியர்கள் யாரும் பணிக்கு அமர்த்தவில்லை. அடுத்த ஆண்டே, கணினி கல்வி பாடத்திட்டம், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முடக்கப்பட்டது. கணினி கல்வி முடித்த பட்டதாரிகள் பலகட்டமாக, போராட்டம் நடத்தியும், அரசு கண்டுக் கொள்ளவில்லை.மேலும், 1999ல், மேல்நிலை வகுப்புகளில், முக்கிய பாடப்பிரிவுகளில், கணினி அறிவியல் பாடம் இணைக்கப்பட்டது. இப்பாடத்தை கையாள கணினி சார் சான்றிதழ் படிப்பு முடித்த, 1,800 ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். இதை எதிர்த்து, பி.எட்., முடித்த கணினி பட்டதாரிகள் போராடியதால், பணியில் அமர்த்திய கணினி ஆசிரியர்களுக்கு, போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில், 1,200 ஆசிரியர்கள் தேர்ச்சியடைந்து, பணி நியமனம் செய்யப்பட்டனர். இதற்கு பின், கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்ப, எவ்வித அறிவிப்பும் இல்லை.கடந்த 2006க்கு பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில், கணினி அறிவியல் பாடத்திட்டம் இல்லை. கணினி அறிவியல் பாடத்தை, கல்லுாரிகளில் முக்கிய பாடப்பிரிவாக தேர்வு செய்து படித்து, பி.எட் முடித்து, வேலையில்லாமல், 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். இவர்களுக்கு பணி வாய்ப்பு அளிக்க, அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மத்திய அரசு கொண்டுவந்த, புதிய பாடத்திட்டம் அமலானால், படித்து வேலையில்லாமல் காத்திருக்கும், கணினி பட்டதாரிகளுக்கு, பணி வாய்ப்பு கிடைக்கும் என, கணினி ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க மாநில செயலாளர் குமரேசன் கூறுகையில், ''பள்ளிகளில் அலுவலகம் சார் பணிகளுக்கு கூட, பி.எட்., முடித்த கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.தற்போது பொறியியல் மாணவர்களும், பி.எட்., படிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. புதிய பாடத்திட்டம் அமலானால், கூடுமானவரை கணினி ஆசிரியர்கள் பணியிடம் உருவாக்கப்படும். பள்ளிகளில் 3ம் வகுப்பிலிருந்து கணினி கல்விக்கு முக்கியத்துவம் தருவதை வரவேற்கிறோம்,'' என்றார்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 29 September 2017

3 ஆண்டு சட்டப் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு கலந்தாய்வு அக்.9-ல் தொடங்குகிறது

3 ஆண்டு சட்டப் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு கலந்தாய்வு அக்.9-ல் தொடங்குகிறது | அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை சட்டப் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு அக்டோபர் 9-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளரும் (பொறுப்பு), சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தலைவருமான பேராசிரியர் வி.பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு- அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்பில் (எல்எல்பி) மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலும், கட் ஆப் மதிப்பெண்ணும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விவரங்களை சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tndalu.ac.in) தெரிந்துகொள்ளலாம். இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாக கட் ஆப் மதிப்பெண் விவரம் வருமாறு:- ஓசி - 77.781 பிசி - 71.670 பிசி (முஸ்லிம்) - 69.200 எம்பிசி, டிஎன்சி - 70.247 எஸ்சி (அருந்ததியர்) - 64 எஸ்சி - 69.917 எஸ்டி - 60.347 கலந்தாய்வு பொதுப்பிரிவினருக்கு அக்டோபர் 9 மற்றும் 10-ம் தேதியும், எஸ்சி, எஸ்சி (அருந்ததியர்), எஸ்டி வகுப்பினருக்கு 11-ம் தேதியும், எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு 12-ம் தேதியும், பிசி (முஸ்லிம்) வகுப்பினருக்கு 13-ம் தேதியும் பிசி பிரிவினருக்கு 13 மற்றும் 14-ம் தேதியும் நடைபெறும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 28 September 2017

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொறியியல் படிப்பை முடிக்காதவர்களுக்கு கடைசியாக 2 வாய்ப்புகள் அளிக்கப்படும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொறியியல் படிப்பை முடிக்காதவர்களுக்கு கடைசியாக 2 வாய்ப்புகள் அளிக்கப்படும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு | 2010-ம் ஆண்டு வரையில் பொறியியல் படிப்பை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (7 ஆண்டுகளுக்குள்) முடிக்காதவர்களுக்கு கடைசியாக 2 வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று தூய்மை இந்தியா பணி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு நிருபர்களுக்கு அமைச்சர் அன்பழகன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொறியியல் படிக்கும் மாணவர்கள் 7 ஆண்டுகளுக்குள் படிப்பை முடித்துவிட வேண்டும் என்பது விதிமுறை. இந்த நிலையில், இந்த காலக்கெடுவுக்குள் பொறியியல் முடிக்காத மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்க கூடுதல் காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்று முதல்வருக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். அவர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த அரசு, அவர்களுக்கு இறுதியாக 2 வாய்ப்புகள் அளிக்க முன்வந்துள்ளது. அதன்படி, 2010-ம் ஆண்டு வரையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொறியியல் படிப்பை முடிக்காதவர்களின் நிலைமையை சிறப்பு நிகழ்வாக கருதி, அவர்களுக்கு இன்னும் 2 பருவ காலங்களில் (2018-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு) மட்டும் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும். அவர்களுக்கான தனி தேர்வுக்கால அட்டவணை, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம் செலுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். இந்த சிறப்பு தேர்வுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இடத்தில் மட்டும் நடத்தப்படும். இனிமேலும் இதுபோன்ற கூடுதல் வாய்ப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்படாது. இதை மனதில்கொண்டு மாணவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த 2 தேர்வு வாய்ப்புகளையும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு அனைத்துப் பாடங்களிலும் தேர்வெழுதி தேர்ச்சிபெற்று படிப்பை முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 2011-ம்முதல் தேர்வு எழுவோருக்கு காலக்கெடு 7 ஆண்டுகள் மட்டுமே. இந்த கூடுதல் காலஅவகாசம் மூலம் ஏறத்தாழ 40 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அமைச்சர் அன்பழகன் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு அக். 20-ம் தேதி முதல் நேர்காணல்

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு அக். 20-ம் தேதி முதல் நேர்காணல் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட குரூப் 2 எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட குரூப் 2 எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் நீண்ட நாட்களாகியும் வெளியாகவில்லை. இதனால் தேர்வு எழுதியவர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெ. ஷோபனா நேற்று வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 2-ல் அடங்கிய துணை வணிகவரி அலுவலர், 2-ம் நிலை சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி மற்றும் நிதி தணிக்கைத் துறையில் உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களில் முதுநிலை ஆய்வாளர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையில் மேற்பார்வையாளர், இளநிலை கண்காணிப்பாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 18 வகையான பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 2,169 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு வரும் அக்டோபர் 20-ம் தேதி முதல் நவம்பர் 3-ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன அறிவிப்பு

வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன அறிவிப்பு | தமிழ் வழியில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன முறையில் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இக்காலியிடங்களில், தமிழ்வழியில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர்-தட்டச்சர் பதவியில் 129 காலியிடங்களை நேரடியாக நிரப்ப ஆன்லைனில் (www.jat.tnausms.in) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் ஹையர் கிரேடு அல்லது ஏதேனும் ஒன்றில் ஹையர் கிரேடு, மற்றொன்றில் லோயர் கிரேடு முடித்திருக்க வேண்டும். தொழில்நுட்பக் கல்வி இயக்கம் நடத்திய 'ஆபீஸ் ஆட்டோமேசன்' என்ற கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30. பிசி, எம்பிசி, டிஎன்சி, எஸ்சி, எஸ்டி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு (தட்டச்சு தேர்வு), நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். எழுத்துத்தேர்வில் பொது அறிவு பகுதியில் 60 கேள்விகள், நுண்ணறிவுத் திறன், கணிதத்திறன் பகுதியில் 20 வினாக்கள், பொது தமிழ், ஆங்கிலம் பகுதியில் 20 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், தட்டச்சு தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதற்கு 20 மதிப்பெண். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இதற்கு 30 மதிப்பெண். எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம் www.jat.tnausms.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள 129 காலியிடங்களில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துவிட்டு, அதன் பிரிண்ட் அவுட் பிரதியை தேர்வுக் கட்டணத்துக்குரிய டிமாண்ட் டிராப்ட் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் கோவையில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு அக்டோபர் மாதம் 31-ம் தேதிக்குள் பதிவு தபால் மூலமாக அனுப்ப வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செப்.30-க்குள் அமல்படுத்த தமிழக அரசு தீவிரம்


அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செப்.30-க்குள் அமல்படுத்த தமிழக அரசு தீவிரம் | மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை பின்பற்றி, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 8-வது ஊதியக் குழுவை அமல்படுத்த அமைக்கப்பட்ட நிபுணர் குழு, முதல்வர் கே.பழனிசாமியிடம் அறிக்கையை வழங்கியது. நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஊதியக்குழு பரிந்துரைப்படி, அரசு ஊழியர்களின் ஊதியம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு மத்திய அரசு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தியது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் புதிய ஊதிய விகிதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டது. மத்திய அரசின் 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தும்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்படும் ஊதிய முரண்பாடுகளை களையும் விதமாக, அவர்களின் கருத்துகளை கேட்டு அரசுக்கு பரிந்துரைக்க நிதித்துறை செயலர் கே.சண்முகம் தலைமையில் நிபுணர் குழுவை தமிழக அரசு கடந்த ஏப்ரலில் அமைத்தது. இந்தக் குழு முதலில் அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களை அழைத்து அவர்களின் கோரிக்கைகளை பெற்றது. அதன்பின், தொடர்ந்து, பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது. இருப்பினும் நிபுணர் குழுவின் அறிக்கை அளிப்பது தாமதமாகி வந்தது. இதையடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை தொடங்கியது. அமைச்சர்கள் குழுவினர், ஜாக்டோ -ஜியோ நிர்வாகிகளிடம் பேசினர். தொடர்ந்து முதல்வர் பழனிசாமியும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஊதியக்குழு பரிந்துரைகளை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பெற்று அமல்படுத்துவதாகவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது தொடர்பான குழு பரிந்துரையை நவம்பர் 30-க்குள் பெற்று நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை ஜாக்டோ- ஜியோவின் ஒரு பிரிவினர் ஏற்றுக்கொண்டு போராட்டத்தை அக்டோபர் 15-க்கு தள்ளி வைத்தனர். மற்றொரு பிரிவினர் கடந்த 11-ம் தேதி முதல் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, போராட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஜாக்டோ- ஜியோவின் ஒரு பிரிவினர் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைத்தனர். அதன்பின், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவித்தார். அப்போது, அக்டோபர் 13-ம் தேதிக்குள் ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஊதியக்குழு தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவரும் நிதித் துறை செயலருமான கே.சண்முகம், 7- வது ஊதியக்குழு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம் தலைமைச் செயலகத்தில் நேற்று சமர்ப்பித்தார். அப்போது, துணை முதல்வர் .பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர். ஏற்கெனவே நீதிமன்றத்தில் தெரிவித்தபடி, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு அமல்படுத்தும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கு ஜாக்டோ - ஜியோ கிராப் அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று நடந்த இந்த அமைப்பின் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், உத்தரவாதம் அளித்தவாறு செப்.30-ம் தேதிக்குள் 7-வது ஊதியக்குழு அறிக்கையை அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதேபோல பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை நவம்பர் 30-க்குள் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தாவிட்டால் 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 'நீதிமன்ற தலையீட்டால் கண்டிப்பான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டபின், தற்போது முதன்முறையாக சொன்ன காலவரையறைக்குள் அலுவலர் குழு தனது பரிந்துரையை சமர்ப்பித்துள்ளது. இது காலதாமதமாக சமர்ப்பிக்கப்பட்டாலும், அறிக்கையில் வழங்கப்பட்ட பரிந்துரைகள் என்னவென்று தெரியாத போதும், நீதிமன்ற உத்தரவுக்குப்பின் குறித்த நாளுக்குள் வெளியிடப்பட்டுள்ளது உண்மையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி ஆகும்' என கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 26 September 2017

TRB MUSIC EXAM ANSWER KEY DOWNLOAD | VADUVUR DR.K,DHINESH KUMAR | CLICK HERE

TRB MUSIC EXAM ANSWER KEY DOWNLOAD | VADUVUR DR.K,DHINESH KUMAR,M.A.,M.PHIL.,PH.D., NET [MUSIC] DOWNLOAD ANSWER KEY CLICK HERE TRB MUSIC EXAM ANSWER KEY | EMAIL : VADUVURDRDHINESH@GMAIL.COM

  1. TRB MUSIC EXAM ANSWER KEY DOWNLOAD | VADUVUR DR.K,DHINESH KUMAR,M.A.,M.PHIL.,PH.D., NET [MUSIC] DOWNLOAD ANSWER KEY CLICK HERE TRB MUSIC EXAM ANSWER KEY | EMAIL : VADUVURDRDHINESH@GMAIL.COM  | CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

CLASS 12 MATHS TAMIL MEDIUM STUDY MATERIALS DOWNLOAD | WAY TO SUCCESS

CLASS 12 MATHS TAMIL MEDIUM STUDY MATERIALS DOWNLOAD | WAY TO SUCCESS | CLASS 11 | +1 - HSC SECOND YEAR - MATHS TAMIL MEDIUM STUDY MATERIALS FOR FAST REVISION - MARCH 2018 - WAY TO SUCCESS | CLICK HERE
  1. CLASS 12 MATHS TAMIL MEDIUM STUDY MATERIALS DOWNLOAD | WAY TO SUCCESS | CLASS 11 | +1 - HSC SECOND YEAR - MATHS TAMIL MEDIUM STUDY MATERIALS FOR FAST REVISION - MARCH 2018 - WAY TO SUCCESS  | CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

CLASS 12 MATHS TAMIL MEDIUM STUDY MATERIALS DOWNLOAD | WAY TO SUCCESS | CLICK HERE

CLASS 12 MATHS TAMIL MEDIUM STUDY MATERIALS DOWNLOAD | WAY TO SUCCESS | CLASS 11 | +1 - HSC SECOND YEAR - MATHS TAMIL MEDIUM STUDY MATERIALS FOR FAST REVISION - MARCH 2018 - WAY TO SUCCESS | CLICK HERE
  1. CLASS 12 MATHS TAMIL MEDIUM STUDY MATERIALS DOWNLOAD | WAY TO SUCCESS | CLASS 11 | +1 - HSC SECOND YEAR - MATHS TAMIL MEDIUM STUDY MATERIALS FOR FAST REVISION - MARCH 2018 - WAY TO SUCCESS  | CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

RTE ADMISSION | தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

25 % ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர அக்.10 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு | தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர), வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் இந்த இடங்களை நிரப்புவதற்கு ஆன்லைன் விண்ணப்ப முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரையில் 82 ஆயிரத்து 909 குழந்தைகள் தனியார் பள்ளிகளில் இடம் கிடைக்கப்பெற்று பயன் அடைந்துள்ளனர். இந்த இடஒதுக்கீட்டில் காலியாகவுள்ள 41 ஆயிரத்து 832 இடங்களில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 25-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ஆன்லைனில் விண்ணப்பிபதற்கான கடைசி தேதி அக்டோபர் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ஒதுக்கீட்டில் சேர www.dge.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலர், மாவட்ட கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, உதவி தொடக்கக்கல்வி அதிகாரி, வட்டார வள மேய மேற்பார்வையாளர் ஆகியோரின் அலுவலகங்களில் எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக ஆன்லைனில் விண்ணப்பிக் கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

744 சிறப்பு மருத்துவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் சுகாதாரத் துறை அமைச்சர் தகவல் | மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் சுகாதாரத் துறைக்கு என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களை வெளிப்படையாக உடனுக்குடன் நிரப்பி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல்வர் கே.பழனிசாமி கடந்த ஜூலை 13-ம் தேதி இந்த தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட 516 செவிலியர்களுக்கும், கடந்த 13-ம் தேதி 1,013 உதவி டாக்டர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார். 10,790 மருத்துவர்கள் மற்றம் சிறப்பு மருத்துவர்கள், 9,706 செவிலியர்கள் உட்பட 23,571 பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தற்போது 744 சிறப்பு மருத்துவர்கள் தேர்வு செய்து பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் கடந்த 20-ம் தேதி வெளியிடப்பட்டது. அக்.10-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 25 September 2017

PLUS ONE COMPUTER SCIENCE ENGLISH MEDIUM VOLUME – II CHAPTER – 1 STUDY MATERIAL DOWNLOAD | D.EASWARAN. MSC.B.ED COMPUTER INSTRUCTOR RAMJAYAM VIDYAA MANDIR MATRIC HR SEC SCHOOL . CUMBUM

PLUS ONE COMPUTER SCIENCE ENGLISH MEDIUM VOLUME – II CHAPTER – 1 STUDY MATERIAL DOWNLOAD | D.EASWARAN. MSC.B.ED COMPUTER INSTRUCTOR RAMJAYAM VIDYAA MANDIR MATRIC HR SEC SCHOOL . CUMBUM | HIGHER SECONDARY FIRST YEAR STUDY MATERIAL VOLUME – II CHAPTER – 1 INTRODUCTION TO WINDOWS XP BY D.EASWARAN. MSC.B.ED COMPUTER INSTRUCTOR RAMJAYAM VIDYAA MANDIR MATRIC HR SEC SCHOOL . CUMBUM . THENI DISTRICT CELL:8760324704
  1. PLUS ONE COMPUTER SCIENCE ENGLISH MEDIUM VOLUME – II CHAPTER – 1 STUDY MATERIAL DOWNLOAD | D.EASWARAN. MSC.B.ED COMPUTER INSTRUCTOR RAMJAYAM VIDYAA MANDIR MATRIC HR SEC SCHOOL . CUMBUM | HIGHER SECONDARY FIRST YEAR STUDY MATERIAL VOLUME – II CHAPTER – 1 INTRODUCTION TO WINDOWS XP BY D.EASWARAN. MSC.B.ED COMPUTER INSTRUCTOR RAMJAYAM VIDYAA MANDIR MATRIC HR SEC SCHOOL . CUMBUM . THENI DISTRICT CELL:8760324704  | CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 24 September 2017

PLUS TWO ACCOUNTANCY TAMIL MEDIUM STUDY MATERIALS DOWNLOAD | D.SRINIVASAN

PLUS TWO ACCOUNTANCY TAMIL MEDIUM STUDY MATERIALS DOWNLOAD | D.SRINIVASAN | 12TH ACCOUNTANCY 4TH LESSON FORMULA | D.SRINIVASAN. M.COM, M.ED., P.G.D.C.A, P.G.D.I.T, K.G.S. MATRIC. HR. SEC. SCHOOL. TIRUPUR-1 12 – ACCOUNTANCY CHAPTER – 4 RATIO ANALYSIS I. LIQUIDITY RATIOS 1. CURRENT RATIO: CURRENT ASSETS CURRENT RATIO CURRENT LIABILITIES.
  1. PLUS TWO ACCOUNTANCY TAMIL MEDIUM STUDY MATERIALS DOWNLOAD | D.SRINIVASAN | 12TH ACCOUNTANCY 4TH LESSON FORMULA | D.SRINIVASAN. M.COM, M.ED., P.G.D.C.A, P.G.D.I.T, K.G.S. MATRIC. HR. SEC. SCHOOL. TIRUPUR 1 12 – ACCOUNTANCY CHAPTER – 4 RATIO ANALYSIS  | CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB SPECIAL TEACHER (SEWING) 2017 - ANSWER KEY DOWNLOAD - TEACHERS CARE ACADEMY, KANCHEEPURAM

TRB SPECIAL TEACHER (SEWING) 2017 - ANSWER KEY DOWNLOAD - TEACHERS CARE ACADEMY, KANCHEEPURAM | TEACHER'S CARE ACADEMY KANCHIPURAM TNPSC–TRB–TET-SPECIAL TEACHER - COACHING CENTER DR.P.S.SRINIVASAN MPL HR.SEC. SCHOOL, KANCHIPURAM-631501 K.A.P.VISVANATHAM HR. SEC. SCHOOL, THILLAI NAGAR, TIRUCHIRAPALLI - 620018 CELL: 9566535080, 9952167782, 9786269980

  1. TRB SPECIAL TEACHER (SEWING) 2017 - ANSWER KEY DOWNLOAD - TEACHERS CARE ACADEMY, KANCHEEPURAM | TEACHER'S CARE ACADEMY KANCHIPURAM TNPSC–TRB–TET-SPECIAL TEACHER - COACHING CENTER DR.P.S.SRINIVASAN MPL HR.SEC. SCHOOL, KANCHIPURAM-631501 K.A.P.VISVANATHAM HR. SEC. SCHOOL, THILLAI NAGAR, TIRUCHIRAPALLI - 620018 CELL: 9566535080, 9952167782, 9786269980  | CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB POLYTECHNIC MATHS KEY ANSWER DOWNLOAD | TRUE MATHS ACADEMY (NET/ SET), COIMBATORE

TRB POLYTECHNIC MATHS KEY ANSWER DOWNLOAD | TRUE MATHS ACADEMY (NET/ SET), COIMBATORE | TRB POLYTECHNIC EXAM 2017 - SUBJECT : MATHEMATICS TRUE MATHS ACADEMY (NET/ SET), COIMBATORE - 9442582453, 9095309165, 9894684101 BOOKLET A PART A BOOKLET C PART A BOOKLET D
  1. TRB POLYTECHNIC MATHS KEY ANSWER | TRUE MATHS ACADEMY (NET/ SET), COIMBATORE | TRB POLYTECHNIC EXAM 2017 - SUBJECT : MATHEMATICS TRUE MATHS ACADEMY (NET/ SET), COIMBATORE - 9442582453, 9095309165, 9894684101 BOOKLET A PART A BOOKLET C PART A BOOKLET D  | CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SSLC SCIENCE ENGLISH MEDIUM PRACTICAL MANUAL – 2017-18 PREPARED BY M.G.RAYMOND M.Sc., B.Ed., DEPARTMENT OF BIOLOGICAL SCIENCE, ST.PAUL’S MAT. HR. SEC. SCHOOL, BLOCK -4, NEYVELI – 607801

SSLC SCIENCE ENGLISH MEDIUM PRACTICAL MANUAL – 2017-18 PREPARED BY M.G.RAYMOND, M.Sc., B.Ed., DEPARTMENT OF BIOLOGICAL SCIENCE, ST.PAUL'S MAT. HR. SEC. SCHOOL, BLOCK -4, NEYVELI – 607801 9442980841 / 9629705161 A.JOHNSONPRABHU, M.Sc., B.Ed. DEPARTMENT OF PHYSICAL SCIENCE ST.PAUL'S MAT. HR. SEC. SCHOOL, BLOCK -4, NEYVELI, CUDDALORE DT.
  1. SSLC SCIENCE ENGLISH MEDIUM PRACTICAL MANUAL – 2017-18 PREPARED BY M.G.RAYMOND, M.Sc., B.Ed., DEPARTMENT OF BIOLOGICAL SCIENCE, ST.PAUL'S MAT. HR. SEC. SCHOOL, BLOCK -4, NEYVELI – 607801 9442980841 / 9629705161 A.JOHNSONPRABHU, M.Sc., B.Ed. DEPARTMENT OF PHYSICAL SCIENCE ST.PAUL'S MAT. HR. SEC. SCHOOL, BLOCK -4, NEYVELI, CUDDALORE DT.  | CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB SPECIAL TEACHER _PHYSICAL SCIENCE _ TENTATIVE ANSWER KEY - 2017 - SHIVALAYA ACADEMY VILLUPURAM | Dr J.MANOHAR-Dr A.SURESH-Dr V.MANIVANNAN.

TRB SPECIAL TEACHER _PHYSICAL SCIENCE _ TENTATIVE ANSWER KEY - 2017 - SHIVALAYA ACADEMY VILLUPURAM | Dr J.MANOHAR-Dr A.SURESH-Dr V.MANIVANNAN.Mobile No: 9597026162, 7845595520
  1. TRB SPECIAL TEACHER _PHYSICAL SCIENCE _ TENTATIVE ANSWER KEY - 2017 - SHIVALAYA ACADEMY VILLUPURAM | Dr J.MANOHAR - Dr A.SURESH - Dr V.MANIVANNAN Mobile No: 9597026162, 7845595520  | CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB SPECIAL EXAM ANSWER KEY DOWNLOAD | தையல், ஓவியம், உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வு 94 சதவீதம் பேர் பங்கேற்பு.

தையல், ஓவியம், உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வு 94 சதவீதம் பேர் பங்கேற்பு | அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் காலியிடங்களை நிரப்ப நேற்று எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,325 சிறப்பாசிரியர் இடங்களை நிரப்ப செப். 23-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தவர் களில், 37,951 பேருக்கு நுழைவு சீட்டு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தேர்வை நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது. இந்த தடை நேற்று முன்தினம் விலக்கப்பட்டதையடுத்து, திட்டமிட்டபடி நேற்று தேர்வு நடைபெற்றது. மொத்தம் 11 மாவட்டங்களில் 106 மையங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தி.நகர் சாரதா வித்யாலயா பள்ளி, ஹோலி ஏஞ்சல்ஸ் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம் பதிப்பகச்செம்மல் கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நுங்கம்பாக்கம் வித்யோதயா பள்ளி உள்பட 14 மையங்களில் தேர்வு நடைபெற்றது. நேற்று காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்ற தேர்வில் நுழைவுச் சீட்டு பெற்றவர்களில் 94 சதவீதம் பேர் பங்கேற்றனர். "கேள்வித்தாள் கடினமாக இல்லை, அதே வேளையில் சுலபமாகவும் இல்லை" என தேர்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். தேர்வு முடிவுகள் வெளியான பிறகு 1 காலியிடத்துக்கு 2 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பின்னர் பதிவு மூப்பு, இடஒதுக்கீடு அடிப்படையில் பணி வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்துவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னர் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்களை மாற்றுவது என பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு கூட்டத்தில் (அகடெமிக் கவுன்சில்) முடிவு செய்யப் பட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டம் மாற்றம் | சென்னை பல்கலைக்கழக கல்விக் குழு முடிவு | 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்களை மாற்றுவது என பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு கூட்டத்தில் (அகடெமிக் கவுன்சில்) முடிவு செய்யப் பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பி. துரைசாமி பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு பி.துரைசாமி தலைமை தாங்கினார். கல்விக் குழுவின் உறுப்பினர்கள், பல்கலைக்கழக பதிவாளர் எஸ். கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியபடி, தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்கள் கல்லூரி முடிந்து 2 ஆண்டுகளுக்குள் வெற்றி பெற வேண்டும் என்ற விதியை அமல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. விபத்து, குழந்தைப்பேறு போன்ற தவிர்க்க முடியாத சமயங்களில் கூடுதலாக 1 ஆண்டு நீட்டிப்பு வழங்கப்படும். மேலும் பாடத்திட்டத்தில் ஒழுக்கம், ஊழல் தடுப்பு, ஊழல் தடுப்பு அமைப்புகளின் செயல்பாடுகள், சிபிஐ செயல்பாடு ஆகியவற்றை சேர்க்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுக்கும் வகையில் குறைந்தது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், 2019-19 கல்வியாண்டு முதல் பல்கலைக்கழக ஆராய்ச்சி துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பின்னர் உறுப்பினர்கள் கொண்டுவந்த தனி தீர்மானங்கள் மீது விவாதம் நடத்தப்பட்டது. அப்போது வணிகவியல் பாடத்தில் ஜிஎஸ்டி தொடர்பான பாடங்களை சேர்க்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக் கொண்ட துணைவேந்தர், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 23 September 2017

G.O (3D)29 DSE Date:20.09.2017- Direct Recruitment- Tamil Nadu School Educational Service- Post of District Educational Officer- TNPSC 2012-Approval of Selected Candidates to the post District Educational officer

G.O (3D)29 DSE Date:20.09.2017- Direct Recruitment- Tamil Nadu School Educational Service- Post of District Educational Officer- TNPSC 2012-Approval of Selected Candidates to the post District Educational officer
  1. G.O (3D) 29 DSE Date:20.09.2017- Direct Recruitment- Tamil Nadu School Educational Service- Post of District Educational Officer- TNPSC 2012-Approval of Selected Candidates to the post District Educational officer  | CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB-PHYSICAL EDUCATION TEACHERS 2017 ANSWER KEY | DR.S.SAMSUDEEN - KSR ACADEMY - MADURAI - TRB-PHYSICAL EDUCATION TEACHER ANSWER KEY KSR ACADEMY - MADURAI DR.S.SAMSUDEEN

TRB-PHYSICAL EDUCATION TEACHERS 2017 ANSWER KEY | DR.S.SAMSUDEEN - KSR ACADEMY - MADURAI - TRB-PHYSICAL EDUCATION TEACHER ANSWER KEY KSR ACADEMY - MADURAI DR.S.SAMSUDEEN
  1. TRB-PHYSICAL EDUCATION TEACHERS 2017 ANSWER KEY | DR.S.SAMSUDEEN - KSR ACADEMY - MADURAI - TRB-PHYSICAL EDUCATION TEACHER ANSWER KEY KSR ACADEMY - MADURAI DR.S.SAMSUDEEN  | CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB SPECIAL TEACHER _PHYSICAL SCIENCE QUESTION PAPER AND ANSWER KEY - 2017 - VEERAN PHYSICAL DIRECTOR

TRB SPECIAL TEACHER _PHYSICAL SCIENCE QUESTION PAPER AND ANSWER KEY - 2017 - VEERAN PHYSICAL DIRECTOR

  1. TRB SPECIAL TEACHER _PHYSICAL SCIENCE QUESTION PAPER AND ANSWER KEY - 2017 - VEERAN PHYSICAL DIRECTOR 9884634347  | CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB SPECIAL TEACHER (DRAWING) 2017 - ANSWER KEY - TEACHERS CARE ACADEMY, KANCHEEPURAM

TRB SPECIAL TEACHER (DRAWING) 2017 - ANSWER KEY - TEACHERS CARE ACADEMY, KANCHEEPURAM |TEACHER'S CARE ACADEMY KANCHIPURAM TNPSC–TRB–TET-SPECIAL TEACHER - COACHING CENTER DR.P.S.SRINIVASAN MPL HR.SEC. SCHOOL, KANCHIPURAM-631501 K.A.P.VISVANATHAM HR. SEC. SCHOOL, THILLAI NAGAR, TIRUCHIRAPALLI - 620018 CELL: 9566535080, 9952167782, 9786269980

  1. TRB SPECIAL TEACHER (DRAWING) 2017 - ANSWER KEY - TEACHERS CARE ACADEMY, KANCHEEPURAM |TEACHER'S CARE ACADEMY KANCHIPURAM TNPSC–TRB–TET-SPECIAL TEACHER - COACHING CENTER DR.P.S.SRINIVASAN MPL HR.SEC. SCHOOL, KANCHIPURAM-631501 K.A.P.VISVANATHAM HR. SEC. SCHOOL, THILLAI NAGAR, TIRUCHIRAPALLI - 620018 CELL: 9566535080, 9952167782, 9786269980  | CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PLUS ONE COMPUTER SCIENCE TAMIL MEDIUM QUARTERLY EXAMINATION SEPTEMBER 2017 FULL ANSWER KEY DOWNLOAD | M.Tamilarasan

PLUS ONE COMPUTER SCIENCE TAMIL MEDIUM QUARTERLY EXAMINATION SEPTEMBER 2017 FULL ANSWER KEY DOWNLOAD | M.Tamilarasan | QUARTERLY EXAMINATION-2017 FULL ANSWER KEY - M.Tamilarasan M.C.A.,B.Ed.,M.Phil.,Computer Instructor,Govt Boys Hr Sec School,Mariammankoil ,Tanjavur Dist-613501.Cel:98 43 47 0024 | EMAIL : mekalaimtamilmca@gmail.com
  1. PLUS ONE COMPUTER SCIENCE TAMIL MEDIUM QUARTERLY EXAMINATION SEPTEMBER 2017 FULL ANSWER KEY DOWNLOAD | M.Tamilarasan | QUARTERLY EXAMINATION-2017 FULL ANSWER KEY - M.Tamilarasan M.C.A.,B.Ed.,M.Phil.,Computer Instructor,Govt Boys Hr Sec School,Mariammankoil ,Tanjavur Dist-613501.Cel:98 43 47 0024 | EMAIL : mekalaimtamilmca@gmail.com  | CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 22 September 2017

அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதியம் அக். 13-க்குள் முடிவு எடுக்க தமிழக அரசுக்கு கெடு | அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் | வேலைநிறுத்த நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது | நீதிபதிகள் உத்தரவு

§பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் டி.சேகரன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிமன்ற தடை உத்தரவை ஏற்று அரசு ஊழியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தனர். இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கே.கே. சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
§அப்போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜரானார். அரசு தரப்பு கருத்துகளை அறிக்கையாக சமர்ப்பித்தார்.

நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:

§ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு அரசிடம் செப். 30-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
§அந்த அறிக்கையை ஏற்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக தமிழக அரசு அக்டோபர் 13-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்.
§அதற்குள் முடிவு எடுக்காவிட்டால், ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
§வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும்.
§வேலைநிறுத்த நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது. அதற்கு பதிலாக சனிக்கிழமைகளில் வேலைக்குச் சென்று வேலைநிறுத்த காலத்தை சமன் செய்ய அனுமதிக்க வேண்டும்.
§அடுத்த விசாரணை அக்டோபர் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளில் ஒருவரான கே.கே.சசிதரன் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாறுதலாகி செல்வதால், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்க இரு தரப்பும் தலைமை நீதிபதியிடம் மனு அளிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE
Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.