Wednesday, 2 August 2017

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசின் அவசர சட்ட நகல் மத்திய அரசிடம் வழங்கப்பட்டது.

'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசின் அவசர சட்ட நகல் மத்திய அரசிடம் வழங்கப்பட்டது | தமிழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்விற்கு (நீட்) விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்காக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உள்பட தமிழக அமைச்சர்கள் குழு டெல்லிக்குச் சென்று பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பிரதமர் நரேந்திர மோடியை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தினார். அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர் கடந்த ஜூலை 31-ந் தேதியன்று முதல் டெல்லிக்குச் சென்று அங்கு முகாமிட்டு, மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவை ஒரே நாளில் மூன்று முறை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். பிரதம மந்திரி அலுவலகத்திற்கான இணை மந்திரி (தனி பொறுப்பு) ஜிதேந்திர சிங்-கையும் சந்தித்துப் பேசினார். இந்த நிலையில், 1-ந் தேதியன்று (நேற்று) டெல்லி அக்பர் சாலையில் உள்ள மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் வீட்டுக்கு பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை மற்றும் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று சந்தித்தனர். அப்போது, தமிழகத்திற்கு 'நீட்' தேர்விலிருந்து விலக்களிப்பது தொடர்பாக மீண்டும் கோரிக்கை வைத்தனர். இந்த சந்திப்பின்போது டெல்லி முதன்மை உள்ளுரை ஆணையர் நா.முருகானந்தம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். இதற்கிடையே நீட் தேர்வில் இருந்து தமிழகத்தில் விலக்கு அளிப்பதற்கான அவசர சட்டத்தை இயற்றி மத்திய அரசுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி அவசர சட்டத்திற்கான நகல் மத்திய அரசுக்குஅனுப்பி வைக்கப்பட்டது. இந்த அவசர சட்டம் குறித்து மனிதவள மேம்பாட்டு துறையிடமும், சுகாதாரத்துறையிடமும் மத்திய அரசு கருத்து கேட்கும். அவர்கள் இந்த சட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக அவசர சட்டம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை தொடர்ந்து தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அவசர சட்டத்திற்கான உத்தரவை பிறப்பிப்பார். அதே நேரத்தில், கடந்த 2 முறை தமிழகத்தின் சார்பில் மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்ட போது மனிதவள மேம்பாட்டு துறையும், சுகாதாரத்துறையும் அந்த மசோதாக்களை நிராகரித்து விட்டது. தமிழகத்திற்கு விலக்கு கொடுக்கப்பட்டால் மற்ற மாநிலங்களும் தமிழகத்தை முன் உதாரணம் காட்டி விலக்கு கேட்டால் என்ன செய்வது என்பது தான் இதற்கு காரணமாக பேசப்படுகிறது. எனவே தற்போது அனுப்பப்பட்டு இருக்கிற அவசர சட்ட நகலுக்கு இந்த துறைகள் ஒப்புதல் அளிக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. இதற்கிடையே பிரதமர் நரேந்திரமோடியை இன்று (புதன்கிழமை) காலையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து, அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்த இருக்கிறார். பிரதமர் தமிழகத்திற்கு சாதகமான முடிவு எடுக்கும் பட்சத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

1 comment:

  1. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

    2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு
    பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,
    போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

    அனைவரும் வாரீர்!


    நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
    நேரம்: காலை 10:30
    இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
    திருச்சி

    🙏 தமிழாசிரியனே! தன்மானம் காக்க வா!
    தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றது தப்போ!
    நீ போராடுவது எப்போ!
    சோழநாடு பாண்டியனிடம் முறையிட்டது அப்போ!
    பாண்டியநாட்டில் ஆரம்பித்து
    சோழநாட்டில் முறையிடுவோம் இப்போ!

    🙏 ஆங்கில ஆசிரியனே!
    சேக்ஸ்பியர் சொன்னால்தான் உன்செவியேறுமா?
    செவனே என இருந்தால் உன்நிலை மாறுமா?
    உன் காயம் ஆறுமா?
    ஆறனுமா?
    அணிவகுத்து கிளம்புமா!

    🙏 கணித ஆசிரியனே!
    எந்த விதியை கண்டும் கலங்காதவனே!
    உன் விதியை மாற்றுவது யார்?
    கண்ணீரை உதிரமாக மாற்றியவனே!
    காவிரி மண்ணிற்கு வா! -உன்
    கண்ணீரை கழுவிவிட்டு போ!

    🙏அறிவியல் ஆசிரியனே!
    நீயுட்டன் விதியை மறந்து விட்டாயா?
    ஒவ்வொரு வினைக்கும்
    அதற்கு சமமான எதிர்வினை உண்டு.
    நீ ஏதேனும் வினை புரிந்தாயா? -எந்த
    போராட்டத்திற்கும் துணைநின்றாயா?
    நான்கு பிரிவாய் பிரிந்தவனே!
    நான்காண்டு துன்பம் கண்டவனே!
    நான்கு கோரிக்கை கொண்டவனே!
    நான்கெழுத்து ஊருக்கு வா!
    இதயத்திற்கு நான்கு அறை.
    இனியும் தாமதித்தால் எப்போது போவாய்
    கல்விதுறை.
    கனலாய் வா!

    🙏சரித்திர ஆசிரியனே!
    வரலாற்றில் எத்தனையோர் படையெடுத்தான்.
    நீ மட்டும் ஏன் கடையடைத்தாய்.
    சரித்திரத்தை மாற்றிய திருச்சியில்
    உன்
    கரு திரத்தை பதிவு செய்!
    உனக்கான பணியை உறுதி செய்!

    🙏 அனைவரும் வாருங்கள் ஆதரவு தாருங்கள்

    இடைநிலை ஆசிரியரை விட்டு விட்டு
    அழைப்பு விடுக்கிறான்
    என யாரும் கருத வேண்டாம்.
    அழைப்பதே இடைநிலை ஆசிரியர் தான்.
    நன்றி
    ம.இளங்கோவன்MA MPhil Bed Dted, DSS ,TPT ,

    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி
    பெற்றோர் கூட்டமைப்பு.




    மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
    வடிவேல் சுந்தர் 8012776142.
    இளங்கோவன் 8778229465
    மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
    கோவை திரு கார்த்திகேயன்.📞8870452224

    தேனி திரு.தினகரன் 📞9585655579

    திருவண்ணாமலை
    திரு.ஏகாம்பரம் 📞9025342468

    தஞ்சாவூர் திரு பிரேம்குமார் 📞9597200610

    கடலூர் திரு பிரகாஷ் 📞9976977210

    சேலம் திரு ரமேஷ்கார்த்திக் 📞8344941224

    நெல்லை திரு முருகேசன் 📞 9500959482

    திருவாரூர் திரு பிராபாகரன் 📞9047294417

    சென்னை திரு ஆசிக் 📞7010717988

    விருதுநகர் சங்கர் 📞9626580093

    புதுக்கோட்டை திரு பழனியப்பன்📞9787481333

    வேலூர் திரு தினேஷ் 📞9025938592

    குமரி & தூத்துகுடி
    திரு ஜான் சாமுவேல் 📞9123586458

    காஞ்சிபுரம் திரு.ராமராசு 📞9952439500
    & ரவிவர்மன் 📞9884987851.

    மதுரை & திரு சங்கர் 📞9626580093
    ராமநாதபுரம் சிவ கங்கை

    நாகபட்டினம் திரு ராதாகிருஷ்ணன் 📞8248087664

    ReplyDelete

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.