Sunday, 2 July 2017

www.tndalu.ac.in | சட்டப்படிப்புக்கு ஜூலை 14 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சட்டப் படிப்புக்கு ஜூலை 14 வரை விண்ணப்பிக்கலாம் | சட்டப்படிப்புக்கு ஜூலை 14 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் 3 ஆண்டு கால ஆனர்ஸ் சட்டப் படிப்பு (எல்எல்பி-ஆனர்ஸ்) வழங்கப்படுகிறது. இப்படிப்பில் பட்டதாரிகள் சேரலாம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் 55 சதவீதம் போதும். 2017-18-ம் கல்வி ஆண்டில் 3 ஆண்டு ஆனர்ஸ் சட்டப் படிப்பில் சேர மே 31 முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டு வந்தது. இதற்கான கடைசி தேதி ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், மாணவர் களின் நலனை கருத்தில் கொண்டு விண்ணப்பம் வாங்கவும், பூர்த்தி செய்த விண்ணப்பம் வாங்கிடவும் கடைசி தேதி ஜூலை 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ.1000. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.500 மட்டும். சென்னையில் உள்ள சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் விண் ணப்பங்களை வாங்கலாம். தபால் மூலம் பெற விரும்பு வோர் கூடுதலாக ரூ.100-க்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து அனுப்பி பெற்றக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களை சட்டப் பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் (www.tndalu.ac.in) தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.