Saturday, 22 July 2017

புதிய பாடத்திட்டங்கள் எப்போது நடைமுறைக்கு வரும்? அதிகாரிகள் விளக்கம்

Image result for புதிய பாடத்திட்டங்கள்
2-வது நாளாக ஆலோசனை புதிய பாடத்திட்டங்கள் எப்போது நடைமுறைக்கு வரும்? அதிகாரிகள் விளக்கம் | புதிய பாடத்திட்டங்கள் எப்போது நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ஆலோசனை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையினர் புதிய பாடத்திட்டங்களை வடிவமைப்பது தொடர்பான ஆலோசனையை நேற்று முன்தினம் கருத்தரங்கம் நடத்தி தொடங்கினார்கள். இந்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் ஆலோசனை நடந்தது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 22 அறைகளிலும், கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் 2 அறைகளிலும் என மொத்தம் 24 அறைகளில் இந்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கலைத்திட்டம் (கரிகுலம்), பாடத்திட்டம் (சிலபஸ்), பாடநூல்கள் (டெஸ்ட் புக்) வடிவமைப்பு பணிகளை எவ்வாறு மேற்கொள்வது? என்பது தொடர்பாக தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (புதுடெல்லி), இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம் (மைசூரு) உள்பட பல்வேறு நிறுவனங்களில் இருந்து வந்திருந்த கல்வியாளர்கள் ஆலோசனை வழங்கினார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் கலைத்திட்டம் எப்படி உருவாக்கப்பட வேண்டும்? அதை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் தனி அறையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தேசிய அளவிலான கலைத்திட்டத்தின் துறை தலைவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கலைத்திட்டம் உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை வழங்கினார்கள். பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி எவ்வாறு நடைபெறுகிறது? வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் எப்போது நடைமுறைக்கும் வரும் என்பது குறித்து தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- இந்த ஆலோசனை கூட்டத்தில் பாடவாரியாக கலைத்திட்டத்தை எப்படி உருவாக்குவது? 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை என்னென்ன பாடத்திட்டங்களை கொண்டுவர வேண்டும்? மாணவர்களின் வயதுக்கேற்ப எந்தெந்த பாடங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்? என்பது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. இந்த ஆலோசனைகள் முடிந்த பிறகு, முதலில் கலைத்திட்டம் வடிவமைக்கப்படும். பின்னர், அந்த கலைத்திட்டம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் 40 நாட்களுக்குள் வெளியிடப்படும். அதை கல்வியாளர்கள் பார்த்து அவர்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம். அவர்களுடைய கருத்துகள் ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில் மாற்றம் கொண்டு வருவோம். அதன்பிறகு, பாடத்திட்டங்கள், பாடநூல்கள் தயாரிக்கப்படும். அடுத்த கல்வியாண்டில் (2018-2019) 1, 6, 9, பிளஸ்-1 ஆகிய வகுப்புகளுக்கும், 2019-2020-ம் கல்வியாண்டில் 2, 7, 10, பிளஸ்-2 ஆகிய வகுப்புகளுக்கும், 2020-2021-ம் கல்வியாண்டில் 3, 4, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.