Thursday, 6 July 2017

ஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி - ஜூலை 10-ல் தொடங்குகிறது | கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் எஸ்எஸ்ஏ, ஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பாடவாரியாக வழங்கப்படும் இப்பயிற்சி அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 10-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைவருக்கும் கல்வி இயக்கமும் (எஸ்எஸ்ஏ), அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கமும் (ஆர்எம்எஸ்ஏ) இணைந்து ஆசிரியர்களுக்குப் பணியிடைப்பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் (2017-2018) அனைத்துப்பாட ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கும் வகையில் மண்டல அளவிலான கருத்தாளர் பயிற்சி ஜூன் 19 முதல் 23-ம் தேதி வரை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, அனைத்து மாவட்டங்களிலும் அறிவியல், கணிதம், ஆங்கிலம், சமூக அறிவியல், தமிழ் ஆசிரியர்களுக்குப் பாடவாரியாக 5 நாட்கள் பாடக்கருப்பொருட்கள் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி நாள் விவரம் வருமாறு: அறிவியல் - ஜூலை 10 முதல் 14 வரை, கணிதம் - ஜூலை 17 முதல் 21 வரை, ஆங்கிலம் - ஜூலை 24 முதல் 28 வரை, சமூக அறிவியல் - ஜூலை 31 முதல் ஆகஸ்டு 4 வரை, தமிழ் - ஆகஸ்டு 7 முதல் 11 வரை நடைபெறும்.

1 comment:

  1. for od book its mere waste of time and money. the must understand without any of your training, the private school teachers are doing better performance. please use your mind. these days students are unmanned in their class room. this is reason for misbehaviour.

    ReplyDelete

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.