Monday, 15 May 2017

B.V.Sc COURSE | வருகிற கல்வி ஆண்டில் அறிமுகம் கால்நடை மருத்துவப்படிப்பு 5½ வருடம் ஆகிறது

வருகிற கல்வி ஆண்டில் அறிமுகம் கால்நடை மருத்துவப்படிப்புவருடம் ஆகிறது | வருகிற கல்வி ஆண்டு முதல் கால்நடை மருத்துவப்படிப்பிற்கான காலம் 5 வருடத்தில் இருந்துவருடம் ஆகிறது என்றும், புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் துணைவேந்தர் டாக்டர் திலகர் தெரிவித்தார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் தந்தி டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாடத்திட்டம் மாற்றம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் அவ்வப்போது மாணவர்களின் பாடத்திட்டத்தை மாற்றி வருகிறது. கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் கால்நடை இளநிலை மருத்துவ படிப்பான பி.வி.எஸ்.சி. என்ற படிப்புக்கு பாட வல்லுனர்களை கொண்டு புதிய தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்புக்கு ஏற்ப புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பாடத்திட்டம் வருகிற கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 6 மாதம் அதிகரிப்பு மேலும் தற்போது பி.வி.எஸ்.சி. படிப்பிற்கான காலம் 5 வருடம் என்று உள்ளது. அது வருகிற கல்வி ஆண்டில் இருந்து 6 மாதம் அதிகரித்துவருடமாக மாறுகிறது. இவ்வாறு டாக்டர் திலகர் தெரிவித்தார். எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காதவர்கள் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில்தான் கால்நடை மருத்துவ படிப்பு என்று அறிவிக்கப்பட்டதால் இந்த வருடம் கால்நடைமருத்துவ படிப்பின் மாணவர் சேர்க்கைக்கு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் மோதுவார்கள் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.