Friday, 26 May 2017

விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரத்தில் புதிய சட்டக் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு முடிவு

விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரத்தில் புதிய சட்டக் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு முடிவு இந்த கல்வியாண்டிலேயே மாணவர் சேர்க்கை | தமிழகத்தில் விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரத்தில் அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும். இக்கல்லூரிகளில் 3 ஆண்டு, 5 ஆண்டு படிப்புகளில் இந்தக் கல்வியாண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை நடக்கும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் கே.பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்காசியாவில் முதன் முதலாக சட்டக் கல்விக்கு என தனியாக தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் நிறுவப்பட்டது. இதன் கீழ் தற்போது 7 அரசு சட்டக் கல்லூரிகள், ஒரு தனியார் சுயநிதி சட்டக் கல்லூரி இயங்கி வருகின்றன. மேலும், ரங்கத்தில் ரூ.100 கோடியில் தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியும் திறக்கப்பட்டது. இந்நிலையில், குறைந்த செலவில் தரமான சட்டக் கல்வியை மாநிலம் முழுவதும் உள்ள மாண வர்களுக்கு வழங்கும் வகையில், தமிழகத்தில் படிப்படியாக போதிய எண்ணிக்கையில் அரசு சட்டக் கல்லூரிகள் நிறுவ தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. விழுப்புரம், தருமபுரி, ராமநா தபுரம் மாவட்டங்கள் மற்றும் அருகே உள்ள பிற மாவட்டங்களில் அரசு சட்டக் கல்லூரி எதுவும் இல்லை. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த தகுதிவாய்ந்த மாண வர்கள் சட்டம் பயில ஏதுவாக விழுப்புரம், தருமபுரி, ராமநாத புரத்தில் தலா ஒரு சட்டக் கல்லூரி இந்தக் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும். இந்தப் புதிய அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்புக்கு 80 மாண வர்களும், 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு 80 மாணவர்களும் தமிழ் நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் மூலம் இந்தக் கல்வியாண்டு முதல் சேர்க்கப்படுவார்கள். இதற்கான ஆரம்பகட்டப் பணி களை மேற்கொள்ள ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு தனி அலுவலர் நியமிக்கப்படுவார். இக்கல்லூரி களுக்குத் தேவையான ஆசிரி யர்கள், பிற ஊழியர்கள் நியமனம், நூலகப் புத்தகங்கள், அறை கலன்கள் மற்றும் இதர தேவை களுக்காக தலா ரூ.2.27 கோடி வீதம், 3 கல்லூரிகளுக்கும் ரூ.6.81 கோடி செலவு ஏற்படும். புதிய அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்புக்கு 80 மாணவர்களும், 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு 80 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள்.

No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.