Thursday, 25 May 2017

கேள்வித்தாள் பாரபட்சமாக இருந்ததாக வழக்கு ‘நீட்’ தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கேள்வித்தாள் பாரபட்சமாக இருந்ததாக வழக்கு 'நீட்' தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு | நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்த மதுரை ஐகோர்ட்டு, இதுதொடர்பாக ஜூன் 7-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிட்டது. திருச்சியை சேர்ந்த சக்திமலர்கொடி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- 'நீட்' தேர்வு இந்தியாவில் மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி காண் நுழைவுத்தேர்வு (நீட்) கடந்த 2012-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2013-ல் நீட் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 45 மதிப்பெண் வீதம் மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது நீட் தேர்வுக்கு எதிராக 115 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ஏற்று, நீட் தேர்வை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து பல்வேறு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி நீட் தேர்வு நடத்த உத்தரவிட்டது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு அவசர சட்டம் இயற்றப்பட்டது. இதையடுத்து கடந்த 7-ந் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்தது. இந்த தேர்வை ஆங்கிலத்தில் நான் எழுதினேன். கேள்வித்தாளில் பாரபட்சம் இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு நடந்தது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நீட் தேர்வு நடக்கும்போது பிராந்திய மொழிகளில் வழங்கப்பட்ட வினாத்தாள்களில் ஒரே மாதிரியான வினாக்கள் கேட்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக நீட் தேர்வில் பிராந்திய மொழி வினாத்தாள்களில் வெவ்வேறு வகையில் வினாக்கள் இடம் பெற்றிருந்தன. நீட் தேர்வில் வெவ்வேறான கேள்விகளுடன் கூடிய வினாத்தாளின் அடிப்படையில் மருத்துவம், பல் மருத்துவ மாணவ சேர்க்கையை மேற்கொள்வது சட்டவிரோதம். குஜராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் நடந்த தேர்வில் மட்டும் எளிமையான வினாக்களும், ஆங்கிலம் உள்பட மற்ற மொழித்தேர்வுகளில் கடினமான கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் ஆங்கிலத்தில் நடந்த தேர்வில் ஒருமாதிரியான வினாத்தாளும், தமிழில் இருந்த கேள்வித்தாளில் வேறு வகையான கேள்விகளும் இடம் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. வாய்ப்பு பறிபோகும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியான கேள்வித்தாள் வழங்கப்படும் என அறிவிக்கப்படவும் இல்லை. கன்னடம், மராத்தி, வங்காள மொழிகளில் தேர்வு எழுதியவர்களும் இதே பிரச்சினையை சந்தித்து உள்ளனர். இந்த பாகுபாட்டை அனுமதித்தால் ஒரு பிரிவினர் பயனடைவார்கள். மற்றொரு பிரிவினர் பாதிக்கப்படுவார்கள். நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கு திறமையான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் பறிபோவதை ஏற்க முடியாது. ரத்து செய்ய வேண்டும்

1 comment:


  1. ஒரு பிரிவினர் பயனடையவும் மற்றொரு பிரிவினர் பாதிக்கப்படவும் மற்றவர்களுக் குரியவைகளையும் மாணவர்களின் இடங்களையும் அடித்துப் பிடுங்கவுமே இத்தகைய TET NEET போன்ற தேர்வுகளைப் பயன்படுத்தவே அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசிடம் குவித்து வைத்துக்கொண்டு வேண்டிய மாநிலங்களுக்குத் துணை போகவும் மற்ற மாநிலத்தவரை கையேந்த வைக்கவும் மட்டுமே இதுபோன்ற தேர்வுகள் பயன் படுத்தப்படவே உதவுகின்றன.எல்லா விதத்திலும் மத்திய மாநில அரசுகள் ஆண்டான் அடிமை போன்ற வழிகளிலேயே செயல்பட முடிவெடுத்து விட்டதைத்தான் இவை போன்றவைகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.வலியவன் மேலும் வலுப் பெறவும் எழியவன் மேலும் தாழ்ந்த நிலையை அடைந்து கொண்டே இருக்க வேண்டுமென்றே திட்டமிட்டே செயற்படுத்தப் படுகின்றன.ஆண்டவன்தான் மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

    ReplyDelete

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.