Tuesday, 16 May 2017

எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்படும் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா உறுதி

எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்படும் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா உறுதி | மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ். இடங்களை அதி கரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித் துள்ளார். மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங் களை அதிகரிக்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலி யுறுத்தி வருகின்றனர்.இது குறித்து திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: நாட்டில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. பல்வேறு துறைகளில் மருத்து வர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. இந்த குறையைப் போக்க மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களை அதி கரிக்க ஆராய்ந்து வருகிறோம். அதன்படி இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிக்கப்படும். மருத்துவப் படிப்புகளுக்காக 'நீட்' பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவப் படிப்பு சேர்க்கையில் முறைகேடுகள் தடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.