Saturday, 27 May 2017

தமிழகத்தில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு

கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளிவைப்பு அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு | தமிழகத்தில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அறிவித்தார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்பட்டு கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து ஜுன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகம் முழவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது. வடமாவட்டங்களில் சராசரியாக 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. மேலும் பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என, அரசுக்கு அனைத்துத் தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. பல்வேறு ஆசிரியர் சங்கங் களும் அரசை வலியுறுத்தின. தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டா) ஒருங்கிணைப் பாளர் பி.கே.இளமாறன் தலைமையில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் அமைச்சர் செங்கோட்டை யனை தலைமைச் செயலகத்தில் கடந்த 25-ம் தேதி சந்தித்த னர். பள்ளிகள் திறப்பு தேதியை 2 வாரங்களுக் காவது தள்ளிவைக்க வேண்டும் என்று அப்போது அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிவடைய உள்ள நிலையில், திட்டமிட்டபடி ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா அல்லது தள்ளி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மத்தியில் இருந்து வந்தது. இதனிடையே, அரசு பள்ளிகளின் உட்கட்ட மைப்புகளை அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினரின் பங்களிப் போடு மேம்படுத்துவது தொடர்பான நிகழ்ச்சி சென்னை அம்பத்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையனிடம் பள்ளி திறப்பு தேதி குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்து அவர் கூறியதாவது: பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று, ஜூன் 2 அல்லது 3-ம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் ஜூன் 7-ம் தேதி திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கியுள்ளார். ஆகவே, முதல்வர் உத்தரவின்பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 7-ம் தேதி (புதன்கிழமை) திறக்கப்படும். கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைக்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கும் நாள் அன்றே மாண வர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். தொடர்ந்து ஒரு வாரத்தில் இலவச பஸ் பாஸ் வழங்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.