Wednesday, 17 May 2017

பிளஸ் 1ம் வகுப்புக்கும் அடுத்தாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது

பிளஸ் 1ம் வகுப்புக்கும் அடுத்தாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு போன்று, பிளஸ் 1ம் வகுப்புக்கும் அடுத்தாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும். பாடத்திட்டம் குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும். ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் புதிய புத்தகங்கள் வாங்கப்படும். யோகா உள்ளிட்ட திட்டங்களை பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். 32 மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., படிப்பிற்காக நூலகங்களுக்கு ரூ.2.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.