Wednesday, 19 April 2017

அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆய்வக உதவியாளர் பணிநியமன ஆணை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆய்வக உதவியாளர் பணிநியமன ஆணை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் | அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆய்வக உதவியாளர் பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆய்வக உதவியாளர்கள் நியமனம் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 24-ந் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கேற்ப 1:5 விகிதாச்சாரப்படி, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர்களால் வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், நடைமுறையில் உள்ள இனசுழற்சி அடிப்படையிலும் தகுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டு தெரிவுப்பட்டியல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் கடந்த 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டது. மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, உரிய பணிநியமன ஆணை வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் அரியலூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, தேனி, திருவாரூர், திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விழுப்புரம் ஆகிய 21 மாவட்டங்களில் 2,444 பணிநாடுநர்களுக்கு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. மீதமுள்ள மாவட்டங்களை சேர்ந்த 1,678 பணியிடங்களில் பலருக்கு நேற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் தேர்வு ஆணை மற்றும் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. 2 மாவட்டங்களுக்கு இன்று (புதன்கிழமை) கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. முதல்-அமைச்சர் வழங்கினார் தேர்வு செய்யப்பட்டவர்களில் 6 பேருக்கு ஆய்வக உதவியாளர்களுக்கான பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியின்போது, பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.