Thursday, 27 April 2017

G.O.(Ms) No.105 Dt: April 26, 2017 | ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st January 2017 – Orders – Issued.


G.O.(Ms) No.105 Dt: April 26, 2017  | ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st January 2017 – Orders – Issued.Date from which payable Rate of Dearness Allowance (per month) 1st January, 2017 136 per cent of Pay plus Grade Pay. CLICK
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

G.O.(Ms) No.106 Dt: April 26, 2017 | ALLOWANCES - Dearness Allowance in the pre-2006 scales of pay - Enhanced Rate of Dearness Allowance from 1st July, 2016 and 1st January 2017- Orders - Issued.


G.O.(Ms) No.106 Dt: April 26, 2017  | ALLOWANCES - Dearness Allowance in the pre-2006 scales of pay - Enhanced Rate of Dearness Allowance from 1st July, 2016 and 1st January 2017- Orders - Issued. click
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

G.O.No.102, DATED.25.04.2017 (Hevilambi, Chithirai 12, Thiruvalluvar Aandu 2048) PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period 01.04.2017 to 30.06.2017 – Orders – Issued.


G.O.No.102, DATED.25.04.2017 (Hevilambi, Chithirai 12, Thiruvalluvar Aandu 2048) PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period 01.04.2017 to 30.06.2017 – Orders – Issued. click
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC GROUP-2A 1953 POST NOTIFICATION | நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கான குரூப்–2 ஏ தேர்வு அறிவிப்பு கல்விச்சோலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி நாள் 26.05.2017 தேர்வு நாள் 06.08.2017


TNPSC GROUP-2A 1953  POST NOTIFICATION | நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கான குரூப்2 ஏ தேர்வு அறிவிப்பு கல்விச்சோலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி நாள் 26.05.2017 தேர்வு நாள் 06.08.2017

DOWNLOAD


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 26 April 2017

DGE G.O NO 270 DT 24.04.2017 - தேர்வுக் காலப் பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் முகாம் பணிகள் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உழைப்பூதியம் / மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் - அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டது.


பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை / இடைநிலை / எட்டாம் வகுப்பு / தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் - தேர்வுக் காலப் பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் முகாம் பணிகள் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உழைப்பூதியம் / மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் - அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வி (ஜிஇ(1)துறை அரசாணை (1டி) எண்.270, நாள்: 24.04.2017 விரைவில் நிலுவைத்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

DOWNLOAD G.O

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழக அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு : முதல்வர் அறிவிப்பு | தமிழக அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழக அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படியானது 4% உயர்த்தப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வானது ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு அமல் செய்யப்படும். இதன் மூலம் தற்பொழுது பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு ரூ.244 முதல் ரூ.3080 வரையும், ஓய்வு ஊதியதாரர்களுக்கு ரூ.122 முதல் ரூ.1540 வரையும் ஊதிய உயர்வு கிடைக்க உள்ளது. இதன் மூலம் 18 லட்சம் அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் ஆகியோர் பயன் பெறுவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இளநிலை அறிவியல் அலுவலர், சுகாதார புள்ளியியலாளர் உட்பட 3 டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு


இளநிலை அறிவியல் அலுவலர், சுகாதார புள்ளியியலாளர் உட்பட 3 டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு | இளநிலை அறிவியல் அலுவலர், வட்டார புள்ளியியலாளர் உள்ளிட்ட 3 டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மே மாதம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பணியில் 30 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எழுத்துத் தேர்வு நடத்தப் பட்டது. இத்தேர்வில் 4,413 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு 65 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மே 5-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். தமிழ்நாடு மருத்துவ சார் நிலைப் பணியில் அடங்கிய வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியில் 173 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 4,270 பேர் எழுதினர். இதில் நேர்காணலுக்கு 342 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மே 15 முதல் 19-ம் தேதி வரை நடைபெறும். குரூப்-3 ஏ தேர்வில் அடங்கிய கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியில் 24 காலியிடங்களை நிரப்ப கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் 46 ஆயிரத்து 797 பேர் கலந்துகொண்டனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு (பட்டியல்-5) 34 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மே 8-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தெரிவு செய் யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

187 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை நாடு முழுவதும் 2022-ம் ஆண்டுக்குள் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தகவல்.


187 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை நாடு முழுவதும் 2022-ம் ஆண்டுக்குள் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தகவல் | நாடு முழுவதும் 2022-ம் ஆண் டுக்குள் புதிதாக 187 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளதாக மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். சென்னை போரூர் ராமச் சந்திரா பல்கலைக்கழகத்தின் 25-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடந்தது. பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் விழாவுக்கு தலைமை தாங்கி னார். துணைவேந்தர் டாக்டர் ஜே.எஸ்.என்.மூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, சிறந்து விளங்கிய மாணவ - மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினார். எம்பிபிஎஸ் மாணவி உமா ரவிசங்கர் 5 தங்கப் பதக்கங்களை பெற்றார். வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் 365 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது: கொல்கத்தா மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி 1835-ம் ஆண்டு தொடங் கப்பட்டன. 1985-ம் ஆண்டு வரை பெரும்பாலும் அரசு மருத்துவக் கல்லூரிகளே செயல்பட்டு வந்தன. கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடுகளில் தனியார் பங்களிப்பு இல்லாமல் மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்குவது கடினம். தொலைநோக்குப் பார்வையுடன் என்.பி.வி.ராமசாமி உடையார் இந்த மருத்துவக் கல்வி மையத்தை தொடங்கியுள்ளார். தனியார் மருத்துவக் கல்லூரி தேவை என்பதை உணர்ந்துதான் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இதற்கு அனுமதி கொடுத்துள்ளார். திறமையுடன் மனிதாபிமானம், அர்ப்பணிப்பு உணர்வுள்ள டாக்டர்களை மருத்துவக் கல்லூரிகள் உருவாக்க வேண்டும். வளர்ந்த நாடுகளில் 10 ஆயிரம் பேருக்கு 20 டாக்டர்கள் உள்ளனர். இந்தியாவில் 10 ஆயிரம் பேருக்கு 6 டாக்டர்கள் மட்டுமே இருக்கின்றனர். இந்தியாவில் 10.5 லட்சம் டாக்டர்கள் இருக்க வேண்டும். ஆனால், 6.5 லட்சம் டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். உலக சுகாதார நிறுவனம் 1,000 பேருக்கு ஒரு டாக்டர் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. இந்தியாவில் 1,700 பேருக்கு ஒரு டாக்டர் உள்ளார். நாடு முழுவதும் 2022-ம் ஆண்டுக்குள் புதிதாக 187 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். நிலையான ஆளுநர் விழா முடிவில் நிருபர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், ''யாராக இருந்தாலும் முதலில் அவரவர் தாய்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு பல மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறு இல்லை. படிக்கும்போதே ஆங்கில மொழிய கற்றுக் கொள்கிறோம். இந்தியையும் கற்றுக்கொள்வதில் தவறு இல்லை. தமிழகத்துக்கு விரைவில் நிலையான ஆளுநர் நியமிக்கப்படுவார்'' என்றார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாணவர்கள் நலன் கருதி 6 ஆயிரம் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பள்ளிக்கல்வி துறை செயலாளர் உத்தரவு


மாணவர்கள் நலன் கருதி 6 ஆயிரம் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பள்ளிக்கல்வி துறை செயலாளர் உத்தரவு | தமிழகத்தில் நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அங்கீகாரம் கேட்டு தொடக்கப்பள்ளி இயக்குனர், மெட்ரி குலேஷன் பள்ளிகள் இயக்குனர் ஆகியோருக்கு விண்ணப்பித்து உள்ளன. இதில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இட வசதி போதாத பள்ளிகள் 740 உள்ளன. இந்த பள்ளிகள் தவிர 3 ஆயிரம் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அங்கீகாரம் கேட்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகத்துக்கும், 3 ஆயிரம் நர்சரி, பிரைமரி பள்ளிகள் தொடக்கப்பள்ளி இயக்குனருக்கும் அங்கீகாரம் கேட்டு விண்ணப்பங்கள் அனுப்பி உள்ளன. அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத அந்த பள்ளிகள் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்பதாலும், அவர்கள் பெறும் கல்வி சான்றிதழ் தகுதி உடையதாக இருக்க வேண்டும் என்பதாலும் தகுதி உடைய பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க பள்ளிக்கல்வி துறை முடிவு செய்தது. எனவே தகுதி உடைய நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு 2018 மே 31-ந்தேதி வரை அங்கீகாரம் வழங்க பள்ளிக்கல்வி துறை செயலாளர் த.உதயச்சந்திரன் உத்தரவிட்டார். அதன்படி மாணவர்கள் நலன் கருதி 3 ஆயிரம் நர்சரி, பிரைமரி பள்ளிகள் மற்றும் 3 ஆயிரம் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என மொத்தம் 6 ஆயிரம் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட உள்ளன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 25 April 2017

PG REGULARAISATION ORDER | 2013-14 மற்றும் 2014-15 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட முதுகலையாசிரியர்கள் பணி நியமனம், முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது


PG REGULARAISATION ORDER - BATCH 2013-14, 2014-15 | 2013-14 மற்றும் 2014-15 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட முதுகலையாசிரியர்கள் பணி நியமனம்,  முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது. PG REGULARAISATION ORDER - BATCH 2013-14, 2014-15 | முதுகலையாசிரியர்கள் நேரடி நியமனம் - 2013-14 மற்றும் 2014-15 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவர்கள் – பணி நியமனம் பெற்று முதுகலை ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்களாக பணிபுரிபவர்கள் – முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல் | 1. அரசாணை (நிலை) எண்.47, பள்ளிக்கல்வித் (சி2) துறை, நாள். 20.03.2013 அரசாணை (நிலை) எண்.110 பள்ளிக் கல்வி பக 2(1) துறை நாள்.02.07.2013 மற்றும் அரசாணை (நிலை) எண்.348 பள்ளிக்கல்வி (வ.செ.2) துறை நாள்.10.12.2013 2. அரசாணை(2டி) எண்.54 பள்ளிக் கல்வி பக 2(1) துறை நாள்.27.08.2014 மற்றும் அரசாணை (நிலை) எண்.148 பள்ளிக் கல்வி (மேநிக) துறை நாள்.22.09.2014 3. சென்னை-6, பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.1974/டபிள்யு3/இ3/2012 நாள்.14.10.2014 மற்றும் 03.03.2015 4. சென்னை 6, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரின் செயல்முறைகள் ந.க.எண்.9287/ஆ1/2013, நாள்.27.02.2015 மற்றும் 20.05.2015 5. இவ்வியக்கக கடிதம் ந.க.எண். 18444/டபிள்யு3/இ3/2015, நாள். 23.03.2015 6. அரசு கடித எண்.11018/பக2(1)-15-4, நாள்.22.09.2015

DOWNLOAD ORDER

 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி துறையில் மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் சார்ந்த இயக்குநர்கள் வெளியிட்ட இப்புதிய பொது மாறுதல் கோரும் விண்ணப்பத்தினை பயன்படுத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா ? விரிவான தகவல்கள்...


பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி துறையில் மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் சார்ந்த இயக்குநர்கள் வெளியிட்ட இப்புதிய பொது மாறுதல் கோரும் விண்ணப்பத்தினை பயன்படுத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா ? பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி துறையில் மாறுதலுக்கு விண்ணப்பிப்போர் இந்த 3 பக்க விண்ணப்பத்தை பயன்படுத்த இயக்குநர் உத்தரவு.

DSE NEW TRANFER APPLICATION 2017 - PDF

DSE NEW TRANFER APPLICATION 2017 - EDITABLE

DEE NEW TRANFER APPLICATION 2017 - PDF


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளி கல்வித்துறையில் இயக்குநர் நிலையில் மாற்றம் | பள்ளிக்கல்வி இயக்குநராக இளங்கோவன் நியமனம். தொடக்கக்கல்வி இயக்குநராக கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளார்.விரிவான தகவல்கள்


பள்ளி கல்வித்துறையில் இயக்குநர் நிலையில் மாற்றம் | பள்ளிக்கல்வி இயக்குநராக இளங்கோவன் நியமனம். தொடக்கக்கல்வி இயக்குநராக கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளார்.விரிவான தகவல்கள் 1. பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், ஆர்எம்எஸ்ஏ இயக்குநராக மாறுதல். 2. தொடக்க கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன், பள்ளி கல்வித்துறை இயக்குநராக மாறுதல். 3. ஆர்.எம.எஸ்.ஏ இயக்குநர் அறிவொளி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக மாறுதல். 4. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ராமேஸ்வர முருகன், முறைசாரா கல்வி இயக்குநராக மாறுதல். 5. முறைசாரா கல்வி இயக்குநர் பழனிசாமி, பாடநூல் கழகத்தில் செயலராக மாறுதல். 6. பாடநூல் கழக செயலாளர் கார்மேகம், தொடக்க கல்வித்துறை இயக்குநராக மாறுதல்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 23 April 2017

சிபிஎஸ்இ இணையதளத்தில் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு


சிபிஎஸ்இ இணையதளத்தில் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு | மே 7-ல் நடக்கும் நீட் தேர்வுக் கான ஹால்டிக்கெட் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோயம் புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 104 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடக்க உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு முடிவு ஜூன் 8-ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக் கான ஹால்டிக்கெட் (அனுமதி சீட்டு) இணையதளத்தில் (cbseneet.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் மாண வர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதி, பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்த விலக்கு அளிக்க வகைசெய்யும் மசோதா, சட்டப்பேரவையில் பிப்ரவரி 1-ல் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. நாடு முழுவதும் பொதுவாக நடத்தப்படும் தேர்வுக்கு தமிழகத் துக்கு மட்டும் விலக்கு அளிக்க இயலாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.CLICK

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 22 April 2017

தொடக்கக் கல்வி - DEE NEW TRANSFER APPLICATION 2017 - 2018 NEW APPLICATION FORM PDF.


தொடக்கக் கல்வி - DEE NEW TRANSFER APPLICATION 2017 - 2018 NEW APPLICATION FORM PDF  | தொடக்கக்கல்வி | பொது மாறுதல் 2017 - 2018 ஆம் கல்வி ஆண்டில் | | ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் | | பொது மாறுதல் - கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: 20.04.2017) | |தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: 20.04.2017) | | புதிய மாறுதல் விண்ணப்ப படிவம் விரைவில் வெளியிடப்படும் - தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு | தொடக்க கல்வி துறை ஆசிரியர்கள் புதிய விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்CLICK HERE

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு ஏப். 24 முதல் விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு ஏப். 24 முதல் விண்ணப்பிக்கலாம் | அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இடமாறுதல் கோரி ஏப்ரல் 24 முதல் மே 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் கல்வியாண்டில் (2017-18) அரசு, நகராட்சி, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் (முதுகலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர்) பொது இடமாறுதல் கலந்தாய்வு குறித்து வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொடக்கக்கல்வி பொது மாறுதல் 2017 - 2018 | தொடக்க கல்வி துறை ஆசிரியர்கள் புதிய விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தொடக்கக்கல்வி | பொது மாறுதல் 2017 - 2018 ஆம் கல்வி ஆண்டில் | | ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் | | பொது மாறுதல் - கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: 20.04.2017) | |தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: 20.04.2017) | | புதிய மாறுதல் விண்ணப்ப படிவம் விரைவில் வெளியிடப்படும் - தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு | தொடக்க கல்வி துறை ஆசிரியர்கள் புதிய விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Right to Education - 2017-18 Online Application Entry / ஆன்லைன் விண்ணப்பம் பதிவேற்றம்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 பிரிவு 12(1) (C) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட , கிராமபுர ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் விண்ணப்பப் படிவம் . இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க இறுதி நாள் மே 18, 2017. இந்த ஆண்டு வெளிப்படைத்தன்மையுடனும் உரிய வகையிலும் நிரப்பப்பட உள்ள இந்த 25% இட ஒதுக்கீட்டின்படி அனைத்து சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளிலும் இலவச கல்வியை கிராமபுற ஏழை மாணவர்கள் பயன்படுத்த செய்வோம். தற்போதுவரை தம் பகுதியில் உள்ள அரசு பள்ளியை ஒதுக்கிவிட்டு ஏதோ ஓர் மோகத்தால் தனியார் பள்ளிகளில் சேர்த்து பணம் செலவு செய்யும் கிராமபுற ஏழை மாணவர் குடும்பங்களுக்கு முதலில் இத்தகவலை கொண்டு சேர்ப்போம்! ஆன்லைன் மூலமான விண்ணப்பத்திற்கான வழிமுறைகள் மற்றும் இணைய இணைப்புக்கு கீழ்கண்ட இணைப்பினை சொடுக்கவும். http://tnmatricschools.com/rte/rtehome.aspx உங்கள் மாவட்ட அளவில் இந்த வாய்ப்பை பயன்படுத்தக்கூடிய பள்ளிகள் யாவை? அதில் இதற்கான 25% இடங்களின் எண்ணிக்கை எத்தனை என்று அறிய கீழ்காணும் இணைப்பை சொடுக்கவும். http://tnmatricschools.com/rte/rtepdf.aspx ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க நேரடி இணைப்பிற்கு கீழே சொடுக்கவும். http://tnmatricschools.com/rte/rteapp.aspx?c=QfY$!z)A
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க என்னென்ன செய்ய வேண்டும்? மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் ஆலோசனை

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க என்னென்ன செய்ய வேண்டும்? மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் ஆலோசனை | அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி களுக்கும் அவர் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
1.       பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இதை முன்னி லைப்படுத்தி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப் படுத்த வேண்டியது அவசியம்.
2.       அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க் கையை அதிகப்படுத்துவது தொடர்பாக உதவி மற்றும் கூடு தல் தொடக்கக் கல்வி அதிகாரி களுடன் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் கலந்தாலோசனை செய்ய வேண்டும்.
3.       அங்கன்வாடிகளில் படிக்கும் குழந் தைகளைக் கண்டறிந்து அவர் களை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4.       மக்கள்தொகை கணக்கெடுப் பின்படி, வீடு வீடாகச் சென்று, பள்ளி செல்லக்கூடிய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
5.       பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
6.       அரசின் மூலம் வழங்கப்படும் விலையில்லா நலத்திட்டங்களான புத்தகம், பாடக் குறிப்பேடு, சீருடை, காலணி, கணித உபகரணப் பெட்டி, கிரையான், வண்ண பென்சில்கள், அட்லஸ், ஸ்கூல் பேக் ஆகிய அனைத்தும் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன என்ற விவரத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
7.       அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் பணியாற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களின் உதவியுடன் மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
8.       மாணவர்களுக்கு வசதியான, காற்றோட்டமான கட்டிடங்கள், மதிய உணவு, பாதுகாப்பான குடிநீர், கழிப்பிட வசதி, தகுதி படைத்த நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் இருப்பதை பெற்றோருக்கு எடுத்துக்கூற வேண்டும்.
9.       குழந்தை தொழிலாளர்களைக் கண்டறிந்து அவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10.   அரசு பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி அளிக்கப்படுகிறது என்றும், அந்த வகுப்புகளில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு தரமான ஆங்கிலவழிக் கல்வி வழங்கப்படுகிறது என்றும் ஆசிரியர்கள் மற்று மாணவர்கள் மூலம் பேரணி நடத்தி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
11.   இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
 இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மலைக் கிராமங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மலைக் கிராமங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | மருத்துவ பட்ட மேற்படிப்பு ஒழுங்குமுறை விதிகளின்படி குக்கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ பட்ட மேற்படிப்பில் கூடுதல் மதிப்பெண் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த அரசு மருத்துவரான ராஜேஸ் வில்சன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை சோலையார்நகர் என்னும் அடர்ந்த மலைப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி சிவில்-சர்ஜனாக பணிபுரிந்து வருகிறேன். 2017-18 ஆண்டுக்கான மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வில் பங்கேற்று 824.58 மதிப்பெண் பெற்று, அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 26 ஆயிரத்து 525-வது இடத்தில் உள்ளேன். மருத்துவ பட்ட மேற்படிப்பு ஒழுங்குமுறை விதிகள்-2000 பிரிவு 9(ஏ)ன்படி அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு உள்ள 50 சதவீத இட ஒதுக்கீட்டின்படி குக்கிராமங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் பணிபுரிந்தால் அவர்களுக்கு பணிபுரிந்த ஒவ்வொரு ஆண்டுக்கும் 10 சதவீத மதிப்பெண் போனஸாக வழங்க வேண்டும். அதன்படி நான் 3 ஆண்டுகளாக மலைக் கிராமத்தில் பணிபுரிந்து வருவதால் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணோடு எனக்கு 30 சதவீத மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும். ஆனால் 2017-18-ம் ஆண்டுக்கு மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பேட்டில், நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை 90 மதிப்பெண்ணுக்கு கணக்கிட்டும், மலைக் கிராமங்கள், குக்கிராமங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்த முன்அனுபவத்துக்கு அதிகபட்சமாக 10 மதிப்பெண் கூடுதலாக வழங்கி, மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு தரவரிசை வழங்கி, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பாணை சட்டவிரோத மானது. எனவே எனக்கு நீட் தேர்வில் பெற்ற மதிப் பெண்ணோடு கூடுதலாக 30 சதவீத மதிப்பெண் வழங்கினால் ஆயிரத்து 500-க்கு ஆயிரத்து 136.95 மதிப்பெண் கிடைக்கும் பட்சத்தில் சேர்க்கையும் எளிதாக கிடைக்கும். எனவே அரசுப் பணியில் உள்ள எனக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா பிறப்பித்த உத்தரவில், ''மனுதாரர் அரசுப் பணியில் உள்ளதால் அவரால் மாநில அரசின் இட ஒதுக்கீட்டுக்கு மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும். அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்க முடியாது. தமிழக அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சட்ட மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால், அந்த மசோதா மனுதாரரை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது. மேலும் மலைக் கிராமங்கள், குக்கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அரசுப் பணியில் உள்ள மருத்துவர் களுக்கு பட்ட மேற்படிப்பில் கூடுதல் மதிப்பெண் வழங்க முடியாது என தமிழக அரசு மறுக்க முடியாது. ஆகவே மனுதாரருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும்'' என உத்தரவிட்டார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இலவச கல்வி திட்டத்தில் ஏழை மாணவர்கள் பட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

இலவச கல்வி திட்டத்தில் ஏழை மாணவர்கள் பட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு | இலவச கல்வி திட்டத்தில் ஏழை மாணவர்கள் பட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ்.கருணாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: ஏழை மாணவர்கள் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் இலவச கல்வி திட்டத்தை சென்னை பல்கலைக்கழகம் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ், வரும் கல்வி ஆண்டில் (2017-18) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சென்னை பல்கலைக்கழக இணைப்பு அங்கீகார கல்லூரிகளில் (சுயநிதி கல்லூரிகள் மற்றும் உதவி பெறும் கல்லூரிகள்) சேர விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட 3 மாவட்டங் களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், விவசாய மற்றும் கூலி வேலை செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகள், குடும்பத்தில் முதல் முறையாக பட்டப் படிப்பு படிக்க வரும் மாணவர்கள், கைம்பெண் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு இந்த இலவச கல்வி திட்டத்தில் முன் னுரிமை அளிக்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத் துக்குள் இருக்க வேண்டும். இலவச கல்வி திட்டத் தில் சேருவதற்கான விண்ணப் பத்தையும் இதர விவரங்களையும் சென்னை பல்கலைக்கழக மக் கள்தொடர்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் பல்கலைக்கழக இணைய தளத்தில் (www.unom.ac.in) இருந் தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப் பட்ட தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளிலிருந்து (மே 12) 15 நாட்களுக்குள் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ் 1க்கும் பொதுத் தேர்வு - பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை

பிளஸ் 1க்கும் பொதுத் தேர்வு - பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை | பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுப் பொதுத் தேர்வு நடத்துவதுபோல பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. விரைவில் இந்த திட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு வர உள்ளது. தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி வகுப்பு கடந்த 1978ம் ஆண்டு வரை பள்ளிகளில் கற்பிக்கப்பட்டது. அந்த வகுப்பு முறை நீக்கப்பட்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு முறைகள் கொண்டு வரப்பட்டன. அதற்கு பிறகு தமிழகத்தில் இதே முறைதான் நடைமுறையில் இருந்து வருகிறது. 5 ஆண்டுக்கு ஒரு முறை பாடப்புத்தகங்கள் மாற்றப்படும். இவை எல்லாம் மனப்பாடம் செய்யும் முறையில் இருப்பதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பாடப்புத்தகங்கள் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. மேலும், சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகத்தில் சிபிஎஸ்இ பாடங்கள் போல தரம் இல்லை என்றும் கல்வியாளர்கள், பெற்றோர் குறை கூறி வருகின்றனர். இதையடுத்து, சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களை அப்படியே தமிழில் மொழி மாற்றம் செய்யும் பணி நடந்துவருகிறது. முதலில் 7, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டு மொழி மாற்றம் செய்யப்பட்ட இந்த புத்தகங்களை அறிமுகம் செய்துவிட்டு அதற்கு அடுத்த ஆண்டில் இருந்து மற்ற வகுப்புகளுக்கு அறிமுகம் செய்ய அரசு முடிவு செய்து இருந்தது. ஆனால், இப்போது அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டு, 2018-2019ம் கல்வி ஆண்டில் 7, 8, 9, 10, பிளஸ் 1 வகுப்புகளுக்கு மட்டும் மொழி மாற்றம் செய்யப்பட்ட புத்தகங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதற்கு அடுத்த கல்வியாண்டில் மற்ற வகுப்புகளுக்கு வழங்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும், பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்களை பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களுடன் இணைக்க பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. அதற்காக அடுத்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுப் பொதுத் தேர்வு நடத்தலாம் என்றும், அந்த தேர்வு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் போல நடத்தவும் ஆலோசித்து வருகின்றனர். அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வர உள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிட பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளி வளாகத்தில் பாடப் புத்தகம், நோட்டு, ஷூ, சீருடை விற்கக் கூடாது சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு திடீர் உத்தரவு

பள்ளி வளாகத்தில் பாடப் புத்தகம், நோட்டு, ஷூ, சீருடை விற்கக் கூடாது சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு திடீர் உத்தரவு | பொதுவாக, தனியார் பள்ளி களில் மாணவர்களுக்கு தேவை யான புத்தகங்கள், நோட்டுகள், பென்சில், பேனா, சீருடை, ஷூ போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படும். சிபிஎஸ்இ பள்ளி களிலும் இந்த வழக்கம் காணப்படு கிறது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோரிடமிருந்து சிபிஎஸ்இ தலைமை அலுவலகத்துக்கு ஏராள மான புகார்கள் வந்தன. அதன் அடிப் படையில் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் தலைமை அலுவ லகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை யில் கூறப்பட்டு இருப்பதாவது: பள்ளி வளாகத்தில் பாடப் புத்தகங்கள், நோட்டுகள், எழுதுபொருட்கள், சீருடை, ஷூ, புத்தகப்பை போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதும் அவற்றை வாங்கச் சொல்லி பெற் றோரை நிர்ப்பந்திப்பதும், குறிப் பிட்ட பிராண்ட் பொருட்களை விற் பனை செய்வதும் ஆரோக்கியமான நடைமுறை அல்ல. இதுபோன்ற செயல்களில் சிபிஎஸ்இ பள்ளிகள் ஈடுபடக் கூடாது. பள்ளி என்பது கல்விப் பணி நடைபெறும் இடமே தவிர, வணிக மையம் அல்ல. மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டும் என்பதுதான் முதன்மை பணியாக இருக்க வேண்டும். இதுபற்றி சிபிஎஸ்இ விதிமுறைகளில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, இனிமேல் பள்ளி வளாகத்தில் எந்த மாதிரியான வணிகமும் நடக்கக்கூடாது. மேலும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன் சில் (என்சிஇஆர்டி) வெளியிட் டுள்ள பாடப் புத்தகங்களை விடுத்து, தனியார் வெளியிட்டுள்ள புத்தகங்களை வாங்கச் சொல்லி பெற்றோர்கள் நிர்ப்பந்திக்கப்படு வதாகவும் சிபிஎஸ்இ அலுவலகத் துக்குப் புகார்கள் வரப்பெற் றுள்ளன. பள்ளிகளில் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தனியார் பதிப்பகத்தினர் வெளியிடும் புத்தகங்களை உபயோகப்படுத்தக் கூடாது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வெயில் கொளுத்துவதால் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் கூடாது பள்ளிகளுக்கு இயக்குநர் உத்தரவு

வெயில் கொளுத்துவதால் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் கூடாது பள்ளிகளுக்கு இயக்குநர் உத்தரவு | வெயில் கொளுத்துவதால், கோடை விடுமுறை நாட்களில் எக்காரணம் கொண்டும் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தக் கூடாது என்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய வானிலை ஆய்வு மையம் அதிக வெப்பக்காற்று உரு வாகியுள்ளதாக அறிவித்துள்ளது. வானிலை ஆராய்ச்சி மையத் தின் அறிவுறுத்தலையும், பெற் றோரின் வேண்டுகோளையும் கருத் தில்கொண்டு அனைத்து வகுப்பு களுக்கான தேர்வுகள் முன்கூட் டியே நடத்தப்பட்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளி கள், சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் இதர வாரிய பள்ளிகளுக்கும் ஏப்ரல் 21 (இன்று) முதல் கோடை விடு முறை விடப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவித்திருக்கிறார். எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளும் இது தொடர் பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாணவர்களின் நலன் கருதி எக்காரணம் கொண்டும் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது என அனைத்து வகை பள்ளிகளுக்கும் அறிவுரை வழங்குமாறு முதன் மைக் கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த சுற்றறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 20 April 2017

TEACHERS GENERAL TRANSFER COUNSELLING 2017 SCHEDULE AND NORMS DOWNLOAD | ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விண்ணப்பங்களை ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை வழங்கலாம்.

TEACHERS GENERAL TRANSFER COUNSELLING 2017 SCHEDULE AND NORMS DOWNLOAD | ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மே 19 முதல் 31 வரை நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. >> மாறுதல் விண்ணப்பங்களை ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை வழங்கலாம். >> பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வு மே 19 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை நடைபெறும். >> கலந்தாய்வு ONLINE மூலமாக நடைபெறும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

என்ஜினீயரிங் படிப்புக்கு மே 1-ந்தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். ஜூன் 27-ந் தேதி முதல் கலந்தாய்வு.

என்ஜினீயரிங் படிப்புக்கு மே 1-ந்தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். ஜூன் 27-ந் தேதி முதல் கலந்தாய்வு. | என்ஜினீயரிங் படிப்புக்கு மே 1-ந்தேதி முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு ஜூன் 27-ந் தேதி தொடங்குகிறது. என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை 2017-18-ம் கல்வி ஆண்டுக்கான என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை குறித்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் மாணவ-மாணவிகள் சேர்வதற்கு எந்தவித நுழைவுத்தேர்வும் கிடையாது. கடந்த ஆண்டு போலவே பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு 30-ந்தேதி வெளியிடப்படும். மே 1-ந் தேதி முதல் மே 1-ந்தேதி முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்காக மாணவ-மாணவிகள் தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களை ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம். மே 12-ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. அதன்பிறகு மாணவ-மாணவிகள் எடுத்த மதிப்பெண்களை ஏற்கனவே ஆன்-லைனில் பதிவு செய்திருந்த விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யவேண்டும். பதிவு செய்வதற்கு மே 31-ந்தேதி கடைசி நாள். ஆனால் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை அண்ணா பல் கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க ஜூன் 3-ந்தேதி கடைசிநாள். ஜூன் 27 முதல் கலந்தாய்வு கடந்த ஆண்டு நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.500-க்கு டி.டி. எடுத்தால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஆன்-லைன் மூலமே பணம் செலுத்த வேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களையும் சேர்த்து (நகல்கள்) அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி 'செயலாளர், தமிழ்நாடு என்ஜினீயரிங் அட்மிஷன், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை-600025'. என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஜூன் 20-ந்தேதியும், தரவரிசை பட்டியல் ஜூன் 22-ந்தேதியும் வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூன் 27-ந்தேதி தொடங்க உள்ளது. நீட் தேர்வு ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது நீட் தேர்வுக்கு விலக்குகோரி சட்டசபையில் மசோதா நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலை பெற்றதுபோல இப்போதும் அதற்கான முயற்சியில் தமிழக அரசு இறங்கி உள்ளது. கடந்த வாரம் மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து இதுதொடர்பாக பேசினோம். அவரும் இதுகுறித்து பரிசீலிப்பதாக கூறினார். தமிழகம் முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அந்த பாடத்திட்டத்தில் புதிய தொழில்நுட்பமும், வேலைவாய்ப்பும் சேர்க்கப்பட்டு உள்ளது. வருகிற கல்வி ஆண்டில் அந்த புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சமீபத்தில் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. தொழில்நுட்ப கல்லூரிகளை பொறுத்தவரை (ஐ.ஐ.டி. நீங்கலாக) அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம் பெற்றுள்ளது. சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு விரைவில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். அப்போது உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன், என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் இந்துமதி, கல்விக்குழு இயக்குனர் பேராசிரியர் கீதா, பேராசிரியர்கள் மல்லிகா, நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 19 April 2017

முதல் முறையாக வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6,390 காலியிடங்கள் நிரப்பப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு

முதல் முறையாக வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6,390 காலியிடங்கள் நிரப்பப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு | இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,119 முது கலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடம் உள்பட 6,390 காலியிடங் கள் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் அறிவித்தார். முதல் முறையாக ஆசிரியர் தேர்வு வாரியம் வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை வெளி யிட்டுள்ளது. பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலை மைச் செயலகத்தில் நிருபர்க ளுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தேவையான ஆசிரியர்கள், விரி வுரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களைத் தேர்வுசெய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6,390 பணி யிடங்கள் நிரப்பப்படும். எந்தெந்த பணிகளுக்கு எப்போது தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்ட வணையை முதல்முறையாக வெளியிட்டுள்ளோம். ஆசிரியர் தேர்வு வாரிய வரலாற்றில் வருடாந்திர தேர்வுக்கால அட்ட வணை வெளியிடுவது இதுவே முதல்முறை ஆகும். ஆசிரியர் நியமனம் வெளிப் படையான முறையில் இருக்கும். அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணி நியமனம் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட்டதை அனைவரும் அறிவர். எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாண வர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து வழிகாட்டுவதற்காக அவர்க ளுக்கு வழிகாட்டி முகாம்கள் நடத்தும் முறையை கொண்டு வந்துள்ளோம். இதில் ஏறத்தாழ 20 லட்சம் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றுள்ளனர். ஆன்லைன் விண்ணப்பம் அறிமுகம் இதுவரை தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவம் மூலம் விண்ணப்பித்து வந்தனர். இந்த ஆண்டு புதிதாக ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறையும்பட்சத்தில் ஆசிரியர்கள் உபரியாக இருக்கும் நிலை ஏற்படும். அந்த வகையில், தென் மாவட்டங்களில் பள்ளிகளில் ஏறத்தாழ 5 ஆயிரம் ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். ஒன்று முதல் 6-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளில்தான் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதேநேரத்தில் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேருகிறார்கள். அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளே இதற்கு காரணம். ஜெயலலிதாவின் ஆசியோடு செயல்படும் இந்த அரசு, கல்வித் துறையில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி வருகிறது. கல்வித்துறையானது இந்தி யாவுக்கே வழிகாட்டும் ஒரு துறையாக இருந்து வருகிறது. பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றம் குறித்து பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப் படும். பாடத்திட்டத்தை மாற்று வது குறித்து முன்னாள் துணை வேந்தர்கள் உள்ளிட்ட சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு ஆய்வு செய்துகொண்டிருக்கி றோம். நிச்சயம் சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு இணையாக பாடத்திட்டம் இருக்கும். 'நீட்' உள்ளிட்ட அகில இந்திய அளவி லான நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்த அவர்களுக்கு அடுத்த ஆண்டி லிருந்து பயிற்சி அளிக்கலாமா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அமைச்சர் செங் கோட்டையன் கூறினார். பேட்டியின்போது பள்ளிக் கல்வித்துறை செயலர் டி.உதயச் சந்திரன் உடனிருந்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வெயில் கொளுத்துவதால் தமிழக அரசு நடவடிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்.21 முதல் விடுமுறை

வெயில் கொளுத்துவதால் தமிழக அரசு நடவடிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்.21 முதல் விடுமுறை | தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருப்பதால் அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறி வித்துள்ளார். பொதுவாக பள்ளிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்டு ஏப்ரல் இறுதி வாரத்தில் இருந்து கோடை விடுமுறை விடப்படும். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1-ம் தேதி முதல் விடுமுறை விடப்படும். இந்த ஆண்டு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 28-ம் தேதியில் இருந்தும், நடுநிலை, தொடக்கப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 30-ம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை விடப்படுவதாக இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு மார்ச் தொடக்கத்தில் இருந்தே வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீ்ட்டை தாண்டியுள்ளது. கடும் வறட்சி, குடிநீர் பற்றாக்குறை, வெயிலின் கடுமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. அதேபோல, நடு நிலைப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை ஏப்ரல் 30-ம் தேதியில் இருந்து 21-ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தொடக்கப் பள்ளிகளுக்கும் ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை விடப் பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன், சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர் களிடம் நேற்று கூறியதாவது: உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களுக்கு ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. வெயில் காரணமாக, நடுநிலைப் பள்ளிகளுக்கான கடைசி வகுப்பு ஏப்ரல் 30-ம் தேதியில் இருந்து 21-ம் தேதிக்கு ஏற்கெனவே மாற்றப்பட்டுவிட்டது. அதேபோல தொடக்கப் பள்ளிகளுக்கான கடைசி வகுப்பு ஏப்ரல் 30-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்ப தால் பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப் படாமல் இருப்பதற்காக கடைசி வகுப்பை ஏப்ரல் 21-ம் தேதிக்கு மாற்றியமைக்குமாறும் அதற்குள் தேர்வுகளை நடத்தி முடிக்குமாறும் தொடக்கப் பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம். சிறப்பு வகுப்புகள் கூடாது பொதுவாக பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்த வேண்டாம் என்று பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப் படும். இதுதொடர்பான சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் புதன் கிழமை (இன்று) அனுப்பப்படும். அரசு உத்தரவை மீறி, கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட் டையன் கூறினார். அமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து, தொடக்கப் பள்ளிகளுக் கான ஆண்டு இறுதித் தேர்வு களை 21-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தொடக்கக் கல்வி இயக்ககம் உடனடி நடவடிக்கை யில் இறங்கியது. இன்று (19-ம் தேதி) முதல் 21-ம் தேதி வரை தினமும் காலையும், மாலையும் தேர்வுகளை நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுட்டெரிக்கும் வெயில் இந்நிலையில், ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் 13 நகரங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை விட அதிகமாக இருந்தது. திரு வள்ளூரில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 113 டிகிரி ஃபாரன் ஹீட் வெப்பநிலை பதிவானது. ஏப்ரல் 17, 18 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தில் இடம்பெற்றுள்ள சென்னை உள்ளிட்ட 20 மாவட் டங்களில் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தி ருந்தது. அதைத் தொடர்ந்து 20 மாவட்டங்களிலும் உரிய நட வடிக்கை எடுக்குமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஓவியம், தையல், இசை உள்ளிட்ட தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது

ஓவியம், தையல், இசை உள்ளிட்ட தொழில்நுட்ப தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் | ஓவியம், தையல், இசை உள்ளிட்ட தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வு கள் இயக்குநர் தண்.வசுந்த ராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் மே மாதம் நடைபெறவுள்ள ஓவியம், இந்திய இசை, நடனம், அச்சுக்கலை, விவசாயம், கைத்தறி நெசவு, தையல் ஆகிய தொழில்நுட்ப தேர்வுகளுக்கு ஏப்ரல் 20 முதல் 26-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அரசு தேர்வுத் துறையின் சேவை மையங்களுக்கு சென்று ஆன்லை னில் (www.dge.tn.gov.in) விண்ணப் பத்தை பதிவுசெய்ய வேண்டும். அரசு தேர்வுத் துறையால் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரங் கள் அடைப்புக்குறிக்குள் குறிப் பிடப்பட்டுள்ள இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சேவை மையங்களுக்கு சென்று ஆன்லைனில் விண்ணப் பிப்பவர்கள் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். தனியார் கணினி மையங்கள் மூலம் கண்டிப் பாக விண்ணப்பிக்கக் கூடாது. தபால் மூலம் அனுப்பப் படும் விண் ணப்பங்கள் எந்தவித முன்னறி விப்பும் இன்றி நிராகரிக்கப்படும். தேர்வு கட்டணம் விவரம் பின் வருமாறு: நடனம் - ரூ.57 (கீழ் நிலை), ரூ.62 (மேல்நிலை)இந்திய இசை - ரூ. 27 (கீழ்நிலை), ரூ.37 (மேல்நிலை) இதர பாடங்கள் - ரூ.37 (கீழ்நிலை), ரூ.47 (மேல் நிலை) ஏப்ரல் 26-ம் தேதி மாலை 5 மணி வரை சேவை மையங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

2,119 காலியிடங்களை நிரப்ப முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு ஜூலை 2-ந்தேதி நடக்கிறது | ஆயிரத்து 137 காலியிடங்களை நிரப்ப பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு அறிவிக்கை ஜூன் 2-வது வாரத்தில் வெளியிடப்படும்.கல்லூரி உதவி பேராசிரியர் பதவியில் ஆயிரத்து 883 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றுக்கான தேர்வு அறிவிக்கை ஜூலை 4-வது வாரத்தில் வெளியிடப்படும்.


2,119 காலியிடங்களை நிரப்ப முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு ஜூலை 2-ந்தேதி நடக்கிறது | ஆயிரத்து 137 காலியிடங்களை நிரப்ப பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு அறிவிக்கை ஜூன் 2-வது வாரத்தில் வெளியிடப்படும்.கல்லூரி உதவி பேராசிரியர் பதவியில் ஆயிரத்து 883 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றுக்கான தேர்வு அறிவிக்கை ஜூலை 4-வது வாரத்தில் வெளியிடப்படும்.
2017-ம் ஆண்டில் நடத்தப்படும் பல்வேறு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சார்ந்த 6,390 பணியிடங்களுக்கான தேர்வுகளின் விவரங்கள் அடங்கிய அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று வெளியிட்டார். அதை பள்ளி கல்வித்துறை அரசு செயலாளர் த.உதயச்சந்திரன், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் காகர்லா உஷா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 
2 ஆயிரத்து 119 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப ஜூலை 2-ந்தேதி, எழுத்து தேர்வு நடைபெறுகிறது. தேர்வு தேதிகள் பட்டியல் சென்னை தலைமைச்செயலகத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சார்ந்த 6 ஆயிரத்து 390 பணியிடங்களுக்கான பல்வேறு தேர்வு விவரங்கள் அடங்கிய பட்டியலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டார். அப்போது பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் காகர்லா உஷா ஆகியோர் உடனிருந்தனர். அந்தப் பட்டியலின் விவரம் வருமாறு:- முதுநிலை பட்டதாரி ஆசிரியர் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் (பி.ஜி. அசிஸ்டண்ட்) பிரிவில் 2 ஆயிரத்து 119 காலியிடங்கள் உள்ளன. இதை நிரப்புவதற்கான அறிவிக்கை மே 2-வது வாரத்தில் வெளியிடப்படும். ஜூலை 2-ந்தேதி தேர்வு நடந்து, ஆகஸ்டு மாதம் தேர்வு முடிவு வெளியிடப்படும். பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி (பாலிடெக்னிக்) விரிவுரையாளர் பணியிடங்கள் ஆயிரத்து 137 காலியாக உள்ளன. இந்த காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை ஜூன் 2-வது வாரத்தில் வெளியிடப்படும். ஆகஸ்டு 13-ந்தேதியன்று தேர்வு நடத்தப்படும். அக்டோபரில் தேர்வு முடிவுகள் வெளியாகும். வேளாண்மை கல்வி சிறப்பு ஆசிரியர்கள் பதவியில் ஆயிரத்து 188 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதற்கான அறிவிக்கை ஜூலை 3-வது வாரத்தில் வெளியிடப்பட்டு, ஆகஸ்டு 19-ந்தேதி அன்று தேர்வு நடத்தப்படும். நவம்பரில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். வேளாண்மை கல்விப் பாடம் பயிற்றுவிப்போர் (இன்ஸ்ட்ரக்டர்) பதவியில் 25 இடங்கள் காலியாக உள்ளன. அதற்கான தேர்வு அறிவிக்கை ஜூலை 3-வது வாரத்தில் வெளியிடப்பட்டு, ஆகஸ்டு 20-ந்தேதி அன்று தேர்வு நடத்தப்பட்டு, நவம்பரில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். உதவி பேராசிரியர் இடங்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பதவியில் ஆயிரத்து 883 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றுக்கான தேர்வு அறிவிக்கை ஜூலை 4-வது வாரத்தில் வெளியிடப்படும். செப்டம்பரில் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியிடப்படும். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பிரிவில் 38 இடங்கள் காலியாக உள்ளன. அதற்கான தேர்வு அறிவிக்கை ஆகஸ்டு 2-வது வாரத்தில் வெளியிடப்பட்டு, செப்டம்பர் 30-ந்தேதியில் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும். டெட் தேர்வு டெட் தேர்வின் முதல் தாளுக்கான தேர்வு இந்த மாதம் 29-ந்தேதி நடத்தப்படும். இரண்டாம் தாளுக்கான தேர்வு 30-ந்தேதி நடத்தப்படும். அந்தத் தேர்வுகளின் முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆய்வக உதவியாளர் பணிநியமன ஆணை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆய்வக உதவியாளர் பணிநியமன ஆணை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் | அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆய்வக உதவியாளர் பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆய்வக உதவியாளர்கள் நியமனம் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 24-ந் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கேற்ப 1:5 விகிதாச்சாரப்படி, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர்களால் வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், நடைமுறையில் உள்ள இனசுழற்சி அடிப்படையிலும் தகுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டு தெரிவுப்பட்டியல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் கடந்த 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டது. மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, உரிய பணிநியமன ஆணை வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் அரியலூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, தேனி, திருவாரூர், திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விழுப்புரம் ஆகிய 21 மாவட்டங்களில் 2,444 பணிநாடுநர்களுக்கு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. மீதமுள்ள மாவட்டங்களை சேர்ந்த 1,678 பணியிடங்களில் பலருக்கு நேற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் தேர்வு ஆணை மற்றும் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. 2 மாவட்டங்களுக்கு இன்று (புதன்கிழமை) கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. முதல்-அமைச்சர் வழங்கினார் தேர்வு செய்யப்பட்டவர்களில் 6 பேருக்கு ஆய்வக உதவியாளர்களுக்கான பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியின்போது, பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கோடை வெப்பம் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

கோடை வெப்பம் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு | கோடை வெப்பம் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதற்கான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 6 ஆயிரத்து 390 காலிப்பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்ய இருக்கிறோம். தேர்வு நடக்கும் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் மாதம் போன்றவை முடிவு செய்யப்பட்டுவிட்டன. எல்லாமே வெளிப்படையாக நடத்தப்படுகின்றன. ஆன்லைன் மூலம் விண்ணப்பம் இப்படி அனைத்துமே ஒரே நேரத்தில் முடிவு செய்யப்பட்டு பட்டியலிடப்பட்டு இருப்பது தமிழகத்தில் இதுதான் முதன்முறையாகும். இந்தப் பணியிடங்களுக்கான தேர்வுகள் அடங்கிய விவரங்கள் அட்டவணை வெளியிடப்படுகிறது. எந்தெந்த பாடங்களுக்கு எவ்வளவு காலியிடங்கள் உள்ளன என்பதும் தெரிவிக்கப்படுகிறது. இனி எதிர்காலத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கான விண்ணப்பங் கள் அனைத்தும் இணைய வழியான ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சில தேர்வுகளுக்கு கணினி வழித் தேர்வை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. வெயிட்டேஜ் முறையில் சில குழப்பங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 5 ஆண்டு காலத்துக்கு முன்னதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இதில் என்ன செய்ய முடியும் என்பதை அரசு பரிசீலித்து வருகிறது. அதாவது, வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்யலாம் என்பது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது. பள்ளிக் கல்வியில் உள்ள பாடத்திட்டங்களில் செய்யப்படும் மாற்றங்கள் பற்றி சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது தெரிவிப்பேன். சிறந்த கல்வியாளர்களை வைத்து ஆய்வு நடத்தப்படுகிறது. விமர்சனங்கள் வராத அளவுக்கு செயல்படுத்துவதற்காக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கண்டிப்பாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையாக அது இருக்கும். நீட் தேர்வுகள் குறித்து தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். இதில் மாணவர்களுக்கு குழப்பம் உள்ளது. அதை மத்திய அரசுதான் தீர்க்கவேண்டும். மீண்டும் அதுபற்றி முதல்-அமைச்சர் வலியுறுத்த இருக்கிறார். நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ளும் அளவுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுமா என்று கேட்டால், அடுத்த ஆண்டு அதற்கான நிலைகளை அரசு பரிசீலிக்கும். அடுத்த ஆண்டு அவர்களுக்கு எப்படி பயிற்சி அளிப்பது என்பதுபற்றி நாங்கள் ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட தேர்வுகளின்போது மாணவர்களை எப்படி தயார்படுத்துவது என்பதை பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. டெட் பரீட்சைகளை வேறு தேதிக்கு மாற்ற முடியாது. ஏனென்றால் அவை கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன. சட்டப்படி நடவடிக்கை கொடுங்கையூரில் சி.பி.எஸ்.இ. என்று சொல்லிக்கொண்டு இயங்கி வந்த பள்ளிக்கூடம் ஒன்றில் மெட்ரிக் சான்றிதழ்கள்தான் தரப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. அதுபற்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதுதொடர்பாக அதிகாரி ஒருவரை அனுப்பியிருக்கிறேன். சி.பி.எஸ்.இ. நிலை கேட்டு அந்தப்பள்ளி விண்ணப்பித்து இருப்பதாகக் கூறியிருக்கின்றனர். முன்கூட்டி விடுமுறை கோடை வெயில் அதிகம் உள்ளது. அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த வாரம் 21-ந் தேதி வரை பள்ளிகள் தொடர்ந்து நடக்கிறது. மக்கள் உணர்வுகளை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுத்துள்ளது. நடுநிலைப் பள்ளிகளுக்கு 22-ந் தேதியில் இருந்து விடுமுறை விடப்படுகின்றன. ஆனால் தொடக்கப்பள்ளிகளுக்கு 29-ந் தேதிவரை பள்ளிக்கூடம் உள்ளது. எனவே, கோடை வெப்பம் காரணமாக தொடக்கப் பள்ளிக்கூடங் களுக்கும் 22-ந் தேதியில் இருந்து விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 22-ந் தேதியில் இருந்து 29-ந் தேதிவரை நடக்கும் தேர்வுகள் அதற்கேற்றபடி மாற்றி அமைக்கப்படும். 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுரை வழங்க இருக்கிறோம். இதில் கலந்துகொள்ள வேண்டுமென்று மாணவர் களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூற இருக்கிறோம். இதற்கான சுற்றறிக்கையை 19-ந் தேதி (இன்று) அனுப்புவோம். அதை மீறி நடந்துகொண்டால் அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்காக 6 மற்றும் 7-ந் தேதிகளில் நடந்த வழிகாட்டி ஆலோசனைக் கூட்டத்தில் 3 லட்சம் பேர் பங்கு பெற்றனர். ஒவ்வொரு துறையிலும் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பது பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 18 April 2017

TRB ANNUAL PLANNER - 2017 | 2017 ஆண்டில் நடைபெற உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்படும் காலிப்பணியிடப் பட்டியல் அடங்கிய கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.2119 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகிறது. தேர்வு நாள்:02-07-2017

TRB ANNUAL PLANNER - 2017 | 2017 ஆண்டில் நடைபெற உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்படும் காலிப்பணியிடப் பட்டியல் அடங்கிய கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. TNPSC யை போன்று முதல் முறையாக TRB - 2017 ஆம் ஆண்டுக்கான ஒராண்டு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி PG TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர், சிறப்பு ஆசிரியர்கள், வேளாண்மை பயிற்றுநர்கள், அரசு கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், AEEO போன்ற போட்டித்தேர்வுகள் அறிவிக்கப்பட உள்ளது.தேர்வுகளுக்கான காலிப் பணியிடங்கள், + அறிவிப்பு வெளியாகும் நாள், + தேர்வு நாள், + தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் போன்றவை தரப்பட்டுள்ளன. தமிழகத்தில் 6,390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.6390 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 29-ல் தகுதி தேர்வு தொடங்கும் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்று அமைச்சகர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் தெரிவித்துள்ளார். 2119 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகிறது. தேர்வு நாள்:02-07-2017
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNOU RECRUITMENT 2017 | TNOU CHENNAI அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு. POST : ASSISTANT REGISTRAR, ASSISTANT DIRECTOR,JUNIOR ASSISTANT | LAST DATE : 02.05.2017

TNOU RECRUITMENT 2017 | TNOU CHENNAI அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு. POST : ASSISTANT REGISTRAR, ASSISTANT DIRECTOR,JUNIOR ASSISTANT | LAST DATE : 02.05.2017
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNOU RECRUITMENT 2017 | TNOU CHENNAI அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு. POST : ASSISTANT PROFESSOR CUM CO ORDINATOR | LAST DATE : 02.05.2017

TNOU RECRUITMENT 2017 | TNOU CHENNAI அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு. POST : ASSISTANT PROFESSOR CUM CO ORDINATOR | LAST DATE : 02.05.2017
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

AAVIN RECRUITMENT 2017 | AAVIN CHENNAI அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு. POST : PRIVATE SECRETARY | LAST DATE : 02.05.2017

AAVIN RECRUITMENT 2017 | AAVIN CHENNAI அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு. POST : PRIVATE SECRETARY | LAST DATE : 02.05.2017
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNCSC RECRUITMENT 2017 | TNCSC CHENNAI அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு. POST : COMPANY SECRETARY | LAST DATE : 18.05.2017

TNCSC RECRUITMENT 2017 | TNCSC CHENNAI அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு. POST : COMPANY SECRETARY | LAST DATE : 18.05.2017
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNSCB RECRUITMENT 2017 | TNSCB CHENNAI அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு. POST : URBAN PLANNER | LAST DATE : 28.04.2017

TNSCB RECRUITMENT 2017 | TNSCB CHENNAI அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு. POST : URBAN PLANNER | LAST DATE : 28.04.2017
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE
Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.