Saturday, 25 March 2017

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற டெல்லியில் விஜயபாஸ்கர் முயற்சி

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற டெல்லியில் விஜயபாஸ்கர் முயற்சி | 'நீட்' மசோதா தொடர்பாக நேற்று மீண்டும் டெல்லி வந்த தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய சுகாதாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சர்களைச் சந்தித்து பேசினார். மருத்துவக் கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழக மாணவர்கள் விலக்கு பெறும் வகையில் 2 சட்டத் திருத்த மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜனவரி 31-ம் தேதி நிறைவேற்றப்பட்டன. அரசியலமைப்பு சட்டத்தின் பொதுப்பட்டியலில் 'கல்வி' இடம் பெற்றுள்ளதால் இந்த மசோதாக் களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவது அவசியம். இதற்காக தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் தற்போது மத்திய சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகங்களிடம் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இவற்றுக்கு ஒப்புதல் பெறுவது தொடர்பாக, தமிழக சுகாதார அமைச்சர் சி.விஜய பாஸ்கர் நேற்று டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா, சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோரைச் சந்தித்து பேசினார். இதுகுறித்து செய்தியாளர் களிடம் விஜயபாஸ்கர் கூறும் போது, "முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்து விடும் என நம்புகிறேன். இளநிலை மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து முயன்று வருகிறோம். இந்த மசோதா மத்திய சட்ட அமைச் சகத்தின் கருத்து கேட்டு அனுப்பப் பட்டுள்ளது. எனவே இத்துறை யின் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தையும் சந்தித்து பேசினேன்" என்றார். "உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நாடு முழுவதிலும் 'நீட்' தேர்வு நடைபெறுகிறது. அதில் தமிழகத் துக்கு மட்டும் விலக்கு அளித்தால் அது, நீதிமன்ற அவமதிப்பாகி விடும்" என்று விஜயபாஸ்கரிடம் மத்திய அமைச்சர் நட்டா அச்சம் தெரிவித்துள்ளார். இதைப்போக்கும் வகையில் தமிழகத்தில் இருந்து சம்பந்தப் பட்ட ஆவணங்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு நட்டாவிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன. இதே ஆவணங்கள், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடமும் தரப்பட்டுள்ளன. இவற்றின் மீது மத்திய அரசு ஆலோசனை செய்து, ஓரிரு நாட்களில் தனது பதிலை தமிழக அரசிடம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அமைச்சர்களை விஜய பாஸ்கர் சந்தித்தபோது, தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுரை ஆணையர் முருகானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.