Thursday, 30 March 2017

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடியை கட்டணமாக வசூலித்தது சிபிஎஸ்இ


நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடியை கட்டணமாக வசூலித்தது சிபிஎஸ்இ | நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடியை கட்டணமாக சிபிஎஸ்இ வசூலித்துள்ளது பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த மருத்துவப் படிப்புகளுக்கு 2017-2018-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) வரும் மே மாதம் 7-ம் தேதி நடைபெறுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரி யம் (சிபிஎஸ்இ) நடத்தும் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாண வர்கள் ஆன்லைனில் விண்ணப் பித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திரு நெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 104 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிவு ஜூன் 8-ம் தேதி வெளியாகிறது. நீட் தேர்வு எழுத விண்ணப் பிக்கும் பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு ரூ,1,400-ம், எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள் மாணவர்களுக்கு ரூ.750-ம் கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டிருந்தது. இதன்படி நாடுமுழு வதும் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் அதிக மான கட்டணத்தை சிபிஎஸ்இ வசூலித்துள்ளது. தேர்வு நடைபெறும் ஒரு மையத்துக்கு மேற்பார்வையாளர், கண்காணிப்பாளர் என 10 பேர் பணி அமர்த்தப்பட் டாலும், 2,200 மையங்களுக்கு 22 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்படு வார்கள். தேர்வு நடைபெறும் தினத் தன்று ஒருவருக்கு சுமார் ரூ.1000 ஊதியமாக கொடுக்கப்பட்டாலும் 22 ஆயிரம் பேருக்கு ரூ.2 கோடியே 20 லட்சம்தான் செலவாகும். விண்ணப்பங்களைப் பெறுவது, பரிசீலனை செய்வது, வினாத்தாள் தயார் செய்வது, தேர்வு நடத்துவது, விடைத்தாள் மதிப்பீடு செய்வது, தேர்வு முடிவை வெளியிடுவது உள்ளிட்ட அனைத்து பணிகளும் ஆன்லைனில் நடைபெறுவதால் அதிகபட்சமாக ரூ.10 கோடியை தாண்டப்போவதில்லை. ஆனால் மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமாக கட்டணம் வசூலித்திருப்பதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். இதுபற்றி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டிஎன்பி எஸ்சி) செயலாளர் விஜயகுமாரிடம் கேட்டபோது, "நாங்கள் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் தேர்வு நடத்துவோம். தேர்வு மையங்கள் அனைத்தும் இலவச மாக கிடைக்கும். தேர்வு அறை மேற்பார்வையாளர்கள், கண் காணிப்பாளர்களுக்கு ஒருநாள் ஊதியம் தரப்படும்" என்றார். கட்டணம் அதிகம் இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் கே.செந்தில் கூறியதாவது: நீட் தேர்வுக்கு மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடி அளவுக்கு வசூலிக்கப்பட்டிருப்பது தேவை யில்லாதது. அவ்வளவு பணம் செலவாகாது. இதுபற்றி கேட்டால், மறுதேர்வு நடத்தவேண்டி இருந் தால் அப்போது எப்படி மீண்டும் கட்டணம் வசூலிக்க முடியும். நீட் தேர்வுக்கு தனியாக அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைச் சொல்வார்கள். அவர்கள் என்ன காரணத்தைச் சொன்னாலும், ரூ.100 கோடி என்பது மிகவும் அதிகம். இனிவரும் காலங்களில் நீட் தேர்வு விண்ணப்பக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.