Friday, 31 March 2017

சான்றிதழ் சரிபார்த்தல் ஏப்ரல் 9, 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடக்கிறது | ஆய்வக உதவியாளர் நியமனத்தில் அதிகாரிகள் தவறு செய்தால் நடவடிக்கை பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை

சான்றிதழ் சரிபார்த்தல் ஏப்ரல் 9, 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடக்கிறது | ஆய்வக உதவியாளர் நியமனத்தில் அதிகாரிகள் தவறு செய்தால் நடவடிக்கை பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை | அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்காக சான்றிதழ் சரிபார்த்தல் ஏப்ரல் 9, 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த நியமனத்தில் அதிகாரிகள் யாராவது தவறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்து உள்ளார். சான்றிதழ் சரிபார்த்தல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 4 ஆயிரத்து 362 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து கடந்த 2015-ம் வருடம் மே மாதம் 31-ந்தேதி எழுத்து தேர்வை நடத்தியது. 1900 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 7 லட்சத்து 32 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்கள் அனைவரும் எடுத்த மதிப்பெண்கள் விவரம் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டது. அதை அரசு தேர்வுகள் இணைய தளத்தில் காணலாம். மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒருவர் நியமனத்திற்கு 5 பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அழைக்கப்படுபவர்கள் பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக இணையதளத்தில் வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்த்தல் ஏப்ரல் 9, 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறியதாவது:- கடும் நடவடிக்கை ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வக உதவியாளர் பணி நியமனம் வெளிப்படையாக செய்யப்பட உள்ளது. ஆய்வக உதவியாளர் வேலை வாங்கித்தருகிறேன் என்று கூறி யாராவது பணம் கேட்டால் கொடுக்கவேண்டாம். அவ்வாறு மோசடி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வக உதவியாளர் நியமனத்தில் முதன்மை கல்வி அதிகாரி அல்லது யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 30 March 2017

ESLC RESULT 2017 | எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 31.03.2017 அன்று நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்படுகிறது.

ஜனவரி 2017 எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடல் | 04.01.2017 முதல் 09.01.2017 வரை நடைபெற்ற எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 31.03.2017 அன்று நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடியை கட்டணமாக வசூலித்தது சிபிஎஸ்இ


நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடியை கட்டணமாக வசூலித்தது சிபிஎஸ்இ | நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடியை கட்டணமாக சிபிஎஸ்இ வசூலித்துள்ளது பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த மருத்துவப் படிப்புகளுக்கு 2017-2018-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) வரும் மே மாதம் 7-ம் தேதி நடைபெறுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரி யம் (சிபிஎஸ்இ) நடத்தும் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாண வர்கள் ஆன்லைனில் விண்ணப் பித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திரு நெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 104 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிவு ஜூன் 8-ம் தேதி வெளியாகிறது. நீட் தேர்வு எழுத விண்ணப் பிக்கும் பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு ரூ,1,400-ம், எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள் மாணவர்களுக்கு ரூ.750-ம் கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டிருந்தது. இதன்படி நாடுமுழு வதும் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் அதிக மான கட்டணத்தை சிபிஎஸ்இ வசூலித்துள்ளது. தேர்வு நடைபெறும் ஒரு மையத்துக்கு மேற்பார்வையாளர், கண்காணிப்பாளர் என 10 பேர் பணி அமர்த்தப்பட் டாலும், 2,200 மையங்களுக்கு 22 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்படு வார்கள். தேர்வு நடைபெறும் தினத் தன்று ஒருவருக்கு சுமார் ரூ.1000 ஊதியமாக கொடுக்கப்பட்டாலும் 22 ஆயிரம் பேருக்கு ரூ.2 கோடியே 20 லட்சம்தான் செலவாகும். விண்ணப்பங்களைப் பெறுவது, பரிசீலனை செய்வது, வினாத்தாள் தயார் செய்வது, தேர்வு நடத்துவது, விடைத்தாள் மதிப்பீடு செய்வது, தேர்வு முடிவை வெளியிடுவது உள்ளிட்ட அனைத்து பணிகளும் ஆன்லைனில் நடைபெறுவதால் அதிகபட்சமாக ரூ.10 கோடியை தாண்டப்போவதில்லை. ஆனால் மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமாக கட்டணம் வசூலித்திருப்பதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். இதுபற்றி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டிஎன்பி எஸ்சி) செயலாளர் விஜயகுமாரிடம் கேட்டபோது, "நாங்கள் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் தேர்வு நடத்துவோம். தேர்வு மையங்கள் அனைத்தும் இலவச மாக கிடைக்கும். தேர்வு அறை மேற்பார்வையாளர்கள், கண் காணிப்பாளர்களுக்கு ஒருநாள் ஊதியம் தரப்படும்" என்றார். கட்டணம் அதிகம் இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் கே.செந்தில் கூறியதாவது: நீட் தேர்வுக்கு மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடி அளவுக்கு வசூலிக்கப்பட்டிருப்பது தேவை யில்லாதது. அவ்வளவு பணம் செலவாகாது. இதுபற்றி கேட்டால், மறுதேர்வு நடத்தவேண்டி இருந் தால் அப்போது எப்படி மீண்டும் கட்டணம் வசூலிக்க முடியும். நீட் தேர்வுக்கு தனியாக அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைச் சொல்வார்கள். அவர்கள் என்ன காரணத்தைச் சொன்னாலும், ரூ.100 கோடி என்பது மிகவும் அதிகம். இனிவரும் காலங்களில் நீட் தேர்வு விண்ணப்பக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல்

என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல் | என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக் கழக அதிகாரி தெரிவித்தார். என்ஜினீயரிங் கல்லூரிகள் தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 554 உள்ளன. அரசு கல்லூரிகளில் உள்ள 100 சதவீத இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகள் 65 சதவீத இடங்களை அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வுக்கு வழங்க வேண்டும். ஆனால் சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளாக இருந்தால் அவர்கள் 50 சதவீதம் இடங்களை மட்டும் கொடுத்தால் போதும். தனியார் கல்லூரிகள் வைத்திருக்கும் 35 சதவீத இடங்களை அந்த கல்லூரியே நிரப்பிக் கொள்ளலாம். அந்த இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த வருடம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்பில் சேர்வதற்கு 2 லட்சம் இடங்கள் உள்ளன. 1 லட்சம் இடங்கள் 1 லட்சம் மாணவ-மாணவிகள் தான் அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு மூலம் கடந்த ஆண்டு சேர்ந்தனர். இந்த வருடமும் என்ஜினீயரிங் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் இன்றி உள்ளனர். அதற்கு காரணம் வேலைவாய்ப்பு குறைவுதான். சாதாரண கல்லூரிகளில் சேர்ந்து படித்தால் அந்த கல்லூரிகளில் வேலைக்கு ஆள் எடுக்க தனியார் நிறுவனங்கள் வருவதில்லை. அதன் காரணமாக என்ஜினீயரிங் படிப்பை விட கலை அறிவியல் படிப்பில் நிறைய பேர் சேருவார்கள் என்று தெரிகிறது. கலந்தாய்வு மூலம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவது குறித்து அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ஏப்ரல் 2-வது வாரம் கலந்தாய்வு முறையில் எந்த வித மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டு போலவே கலந்தாய்வு நடைபெறும். ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். அந்த விண்ணப்பத்தில் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ்-2 தேர்வு முடிவு 12-ந் தேதி வெளியாகிறது. அதன்பிறகு அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் - விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

எழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் விரைவில் அறிவிப்பு வெளியாகிறது | எழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. 2,100 காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 600 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் 3 முறை பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. தகுதி தேர்வு இதையொட்டி 2,100 ஆசிரியர்களை எழுத்து தேர்வு மூலம் நியமிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராக இருந்தது. ஆனால் அதற்குள் ஆசிரியர் தகுதி தேர்வை விரைவில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துதேர்வு அறிவிப்பை நிறுத்தி வைத்து விட்டு, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வு நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து டி.பி.ஐ. வளாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- விரைவில் அறிவிப்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறத்தேவை இல்லை. தற்போது 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. அப்போது 1,000 பணியிடங்கள் கூடுதலாக உருவாகும். இதில் பதவி உயர்வு போக 500 பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நியமிக்கப்படும். இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 28 March 2017

சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி.பயிற்சியில் சேர ஏப்ரல் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஹால்டிக்கெட் ஏப்.12-ம் தேதி வழங்கப்படும். தேர்வு ஏப்.20-ம் தேதி காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி | சங்கர் ஐஏஎஸ் அகாடமி, மத்திய சமூக நீதி அமைச்சகம் ஆகியவை இணைந்து தாழ்த்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசுப்பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிப்பதற்கு சங்கர் ஐஏஎஸ் அகாடமியை மத்திய சமூக நீதி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இதற்காக செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி யூபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஆண்டுதோறும் தலா 50 மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும். மாத உதவித் தொகையும் உண்டு. தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கும் எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடைபெறும். பின்னர் சான்றிதழ் சரிபார்த்து தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சியில் சேர ஏப்ரல் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஹால்டிக்கெட் ஏப்.12-ம் தேதி வழங்கப்படும். தேர்வு ஏப்.20-ம் தேதி காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 044 43533445, 64597222, 45522227 மற்றும் 9444166435 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். www.shankariasacademy.com என்ற இணையதளத்தையும் காணலாம். 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நீட் தேர்வுக்கு படிக்க தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழிகளில் பாடப் புத்தகங்கள் இல்லாத நிலை தாய்மொழியில் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிப்பு

நீட் தேர்வுக்கு படிக்க தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழிகளில் பாடப் புத்தகங்கள் இல்லாத நிலை தாய்மொழியில் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிப்பு | நீட் தேர்வுக்கு படிக்க ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே பாடப் புத்தகங்கள் உள்ளன. தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழி களில் பாடப் புத்தகங்கள் இல்லாத தால், தாய்மொழியில் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த மருத்துவப் படிப்பு களுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) வரும் மே மாதம் 7-ம் தேதி நடைபெறுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத் தில் மட்டும் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 103 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வு கடந்த ஆண்டு ஆங்கி லத்தில் மட்டும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு கன்னடம், குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளன. ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் நீட் தேர்வுக்கு படிப்பதற்கான பாடப் புத்தகங்கள் இருக்கின்றன. தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழிகளில் பாடப் புத்தகங்கள் இல்லை. இதனால் மாநில மொழிகளான தங்களுடைய தாய்மொழியில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேண்டாம் நீட் தேர்வு இது தொடர்பாக அரசு மருத்து வர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ - SDPGA) மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர் ஏ.ராமலிங்கம் கூறியதாவது: நாடு முழுவதும் பல்வேறு பாடத்திட்டங்கள் உள்ளன. நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கு படிப்பதற்கான சிபிஎஸ்இ பாடப் புத்தகங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே உள்ளன. அப்படி இருக்கும் போது, தமிழ் உள்ளிட்ட மாநில மொழியில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களால் எப்படி தேர்வுக்கு தயாராக முடியும். படிப்பதற்கு பாடப் புத்தகங்களே இல்லாமல், தமிழில் தேர்வு எழுதலாம் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. நீட் தேர்வால் மாநில மொழிகளில் தேர்வு எழுத உள்ள கிராமப்புற, ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வந்த பிறகு நீட் தேர்வை நடத்த வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றார். நாடு முழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ்-2 கணிதத்தேர்வில் 6 மதிப்பெண் கட்டாய கேள்வி கடினமாக இருந்தது மாணவிகள் கருத்து


பிளஸ்-2 கணிதத்தேர்வில் 6 மதிப்பெண் கட்டாய கேள்வி கடினமாக இருந்தது மாணவிகள் கருத்து | பிளஸ்-2 கணித தேர்வில் 6 மதிப்பெண் கட்டாய கேள்வி கடினமாக இருந்ததாக மாணவிகள் தெரிவித்தனர். கடினமாக இருந்தது பிளஸ்-2 தேர்வு தமிழ் முதல் தாளுடன் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. தமிழ், ஆங்கிலம், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவினருக்கான தேர்வுகள் முடிந்துவிட்டன. முக்கிய தேர்வான கணிதம் மற்றும் விலங்கியல் தேர்வுகள் நேற்று நடைபெற்றன. சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கணித தேர்வை எழுதிய மாணவ-மாணவிகள் கூறியதாவது:- கணித தேர்வில் 40 ஒரு மதிப்பெண் கேள்விகள் அனைத்தும் எளிதானவையாக இருந்தன. 6 மதிப்பெண் கேள்விகள் 10 கொடுக்கப்பட்டிருந்தன. அதில் கட்டாயம் பதில் அளிக்க வேண்டிய கேள்வி மட்டும் கடினமாக இருந்தது. அந்த கேள்வி பாடத்திட்டத்தில் இருந்து நேரடியாக கேட்கப்படாமல் சுற்றிவளைத்து கேட்கப்பட்டு இருந்தது. அதனால் நாங்கள் பெரும்பாலானவர்கள் அதற்கு பதில் அளிக்கவில்லை. 10 மதிப்பெண் கேள்விகள் 10 கேட்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் எளிமையாகத்தான் இருந்தன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 20 பேர் பிடிபட்டனர் கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு எடுத்த மாணவர்களுக்கு நேற்றுடன் பிளஸ்-2 தேர்வு முடிந்தது. தேர்வு முடிந்ததையொட்டி மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் முகத்தில் வண்ணப்பொடி பூசி மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். உயிரியியல் மற்றும் வரலாறு பாடப்பிரிவுகள் எடுத்த மாணவர்களுக்கு 31-ந்தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. கணிதத்தேர்வில் காப்பி அடித்ததாக 6 பேரும், விலங்கியல் தேர்வில் காப்பி அடித்ததாக 14 பேரும் பிடிபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் 6 பேரும், சேலம், கடலூர் மாவட்டங்களில் தலா 5 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பேரும் என அந்த 20 பேரும் பிடிபட்டனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 27 March 2017

FIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் வெளியிடபட்டுள்ளது.

FIND TEACHER POST
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடபட்டுள்ளது.

வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்?
உங்கள் திறமைக்கு தகுந்த வேலை வேண்டுமா?
அரசு உதவி பெரும் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்கள் வேண்டுமா?
ஆசிரிய படிப்பு முடித்தவரா நீங்கள்?

அனைத்து கேள்விகளுக்கும் ஒரே தீர்வு FIND TEACHER POST  (WWW.FINDTEACHERPOST.COM) ல் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். முற்றிலும் இலவசமான பட்டதாரி ஆசிரியர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்ட www.findteacherpost.com    தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் பதிவு செய்துள்ள ஆசிரிய பட்டதாரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வருகிறது. முற்றிலும் இலவசமான இந்த சேவையை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.www.findteacherpost.com க்கு  ஆசிரியபட்டதாரிகளின் ஆதரவு தொடர்ந்து பெருகிவருகிறது. ஆம். 22 மாதங்களில் 38000 க்கும் மேல் ஆசிரிய பட்டதாரிகள் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். 2000 க்கும் மேலானோர் பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளனர். தற்போது கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவியர்கள் உடனே பதிவு செய்ய வேண்டுகிறோம். (இறுதியாண்டு மாணவர்கள் B.Ed., படிப்பையும் சேர்த்தே பதிவு செய்யவும்.  ஒரு முறை மட்டுமே ON LINE ல் REGISTER செய்தால் போதுமானது. தமிழகத்தில் உள்ள எண்ணற்ற தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்களுக்கு உங்கள் விண்ணப்பம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த  மென்பொருள். நேர்காணல் பற்றிய தகவல்கள் குறுஞ்செய்தி(SMS) மூலம் இலவசமாக பெறலாம்.இதுவரை நேர்காணல் பற்றிய அழைப்பு கிடைக்காதவர்கள் இந்த தளத்தின் வாயிலாக சுயப்பதிவு (Self Enrolment)  செய்து கொள்ளவும். ON LINE ல் பதிவு செய்ய இயலாதவர்கள் 08067335589 என்ற எண்ணுக்கு MISSED CALL கொடுத்தால் போதும்.இதுவரை பதிவு செய்யாத அனைத்து ஆசிரியபட்டதாரிகளும்  உடனே பதிவு செய்யவும்இச்சேவை முற்றிலும் இலவசம்
NOTE: SMART PHONE வைத்திருப்பவராக இருந்தால் PLAY STORE ல் சென்று FIND TEACHER POST என TYPE செய்து APP – DOWNLOAD செய்து கொள்ளுங்கள். காலிப்பணியிடங்கள் பற்றிய செய்தியை காண்பதுடன் பிடித்த பள்ளியின் காலிப்பணியிடத்துக்கு SELF ENROLLMENT செய்து கொள்ளலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 26 March 2017

JIPMER ADMISSION 2017-2018 | JIPMER - PUDHUCHERRY அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு...விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.05.2017 நுழைவுத்தேர்வு நாள்: 04.06.2017

JIPMER ADMISSION 2017-2018 | JIPMER - PUDHUCHERRY அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு...விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.05.2017  நுழைவுத்தேர்வு நாள்: 04.06.2017

It is informed that JIPMER being an Institute of national importance (Act of Parliament) under the Ministry of Health and Family Welfare, Government of India have been EXEMPTED from NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST (UG) (NEET-UG) for admission to MBBS Course in JIPMER, Puducherry The prospectus has been uploaded in the JIPMER website (www.jipmer.edu.in) which contains detailed information of important dates, test, syllabus, eligibility criteria to appear/admission, reservation, examination fee, cities of examination, Age etc. (Kindly click the following link to see the MBBS Prospectus – MBBS Prospectus 2017) Details of Online Application User Interface with screen shot will be hosted in the website separately on 27.03.2017 at 11:00 AM. Students and Parents are, therefore, advised to regularly visit the website for updates.www.jipmer.edu.in

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வு...விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.4.2017

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்துகிறது | ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வை, சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்துகிறது. இதுகுறித்து மனிதநேய மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இலவச பயிற்சி சைதை துரைசாமியை தலைவராகக் கொண்டு இயங்கும் மனிதநேய பயிற்சி மையம், மத்திய-மாநில அரசு பணிகளுக்காக நடக்கும் பல்வேறு தேர்வுகளில் கலந்துகொள்வதற்காக மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. இவ்வாறு அளிக்கப்பட்ட இலவச பயிற்சிகளில் கலந்துகொண்டு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகள் முதல் பல்வேறு வகையான பணிகளில் 2,838 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டிலும் மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றி வருகிறார்கள். தற்போது இந்த மையம் 2018-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளின் முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை உடனடியாக தொடங்கி 2018-ம் ஆண்டு மே மாதம் வரை நடத்த இருக்கிறது. நுழைவுத்தேர்வு இந்த பயிற்சிக்கான தகுதியும், ஆர்வமும் உள்ள மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக, மனிதநேயம் தமிழகத்திலுள்ள 32 மாவட்டத்தின் தலைநகரங்களில் நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இதற்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி நடைபெறும். நுழைவுத் தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படும். இந்த தேர்வுக்கான வினாக்கள் அனைத்தும் எல்லாதரப்பு மாணவர்களும் எழுதும் வகையில், அடிப்படை பொதுஅறிவு சார்ந்தவையாகவே இருக்கும். இந்த வினாக்களுக்கு விடையளிப்பதற்கு அதிகபட்ச கூடுதல் திறமை தேவையில்லை. மாணவர் தேர்ந்தெடுப்பில் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு உண்டு. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் உள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கு நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமலே இடம் வழங்கப்படும். ஆனால், அந்த மாணவ-மாணவியர்களும் நுழைவுத் தேர்வு எழுதுவது கட்டாயம். கடைசி தேதி இந்த பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், www.sai-d-ais.com என்கிற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இணையதளப் பயிற்சிக்காக ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.4.2017 ஆகும். 22.4.2017 முதல் அனைத்து மாணவர்களும், நுழைவுத் தேர்வுக்கான தங்களின் அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) மேற்கண்ட இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் தங்களது சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அரசு அதிகாரியிடம் கையெழுத்து பெறவேண்டும். அரசு அதிகாரியிடம் கையெழுத்து பெற முடியாதவர்கள், தங்களது புகைப்படம் உள்ள அடையாள அட்டையை அனுமதி சீட்டுடன் கொண்டுவர வேண்டும். இதுவே அனுமதிச் சீட்டாகும். தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 2435 8373, 9840106162. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசுத் தேர்வுகள் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை ஏப்ரல் 3 -ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்..

அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு | அரசுத் தேர்வுகள் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசுத் தேர்வுகள் துறையில் காலியாக உள்ள 5 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணியிடங்கள் பொது, தாழ்த்தப்பட்டோர் (ஏ), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 3 இடங்களும், கோவை, திருச்சி ஆகிய மண்டல அலுவலகங்களில் தலா ஒரு பணியிடம் என உள்ள இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.1.2017 அன்றைய நிலையில், பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30 வயது வரையிலும், பட்டியல் இனத்தவருக்கு 18 முதல் 35 வயது வரையிலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு 18 முதல் 32 வயது வரையிலும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகுதியுடையவர்கள் தங்களது பெயர், கல்வித் தகுதி, பிறந்த தேதி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களுடன்கூடிய, அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒட்டிய சுயவிலாசமிட்ட உறையுடனான விண்ணப்பத்தை, தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் "அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயலாளர், அரசுத் தேர்வுகள் இயக்ககம், டி.பி.ஐ. வளாகம், கல்லூரி சாலை, சென்னை-6' என்ற முகவரிக்கு ஏப்ரல் 3 -ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

AIIMS-PATNA RECRUITMENT 2017 | AIIMS-PATNA அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு... LAST DATE:01.05.2017... விரிவான விவரங்கள்...

AIIMS-PATNA RECRUITMENT 2017 | AIIMS-PATNA அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு...விரிவான விவரங்கள்...
>>>>>>>
§DATE OF NOTIFICATION21.03.2017
§EMPLOYMENT TYPE:GOVT JOB
§APPLICATION:ONLINE
§WEBSITE:www.aiimspatna.org
§NAME OF THE POST:PROFESSOR
§EDUCATIONAL QUALIFICATION:REFER PROSPECTUS
§VACANCIES:MANY
§SALARY:AS PER NORMS
§SELECTION PROCEDURE:MERIT
§LAST DATE:01.05.2017
§DATE OF INTERVIEW:-
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNOU RECRUITMENT 2017 | தமிழ் நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு...விரிவான விவரங்கள்...

TNOU RECRUITMENT 2017 | தமிழ் நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு...விரிவான விவரங்கள்...
>>>>>>>
§DATE OF NOTIFICATION08.03.2017
§EMPLOYMENT TYPE:GOVT JOB
§APPLICATION:OFFLINE
§WEBSITE:www.tnou.ac.in
§NAME OF THE POST:PROFESSOR
§EDUCATIONAL QUALIFICATION:REFER PROSPECTUS
§VACANCIES:7
§SALARY:AS PER NORMS
§SELECTION PROCEDURE:MERIT
§LAST DATE:31.03.2017
§DATE OF INTERVIEW:-

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 25 March 2017

அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் விவரம் வெளியீடு சான்றிதழ் சரிபார்த்தல் 9-ந் தேதி தொடங்குகிறது.அரசு உத்தேசித்திருந்த நேர்முகத் தேர்வு ரத்துசெய்யப்பட்டு இருக்கிறது.

அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரம் வெளியீடு சான்றிதழ் சரிபார்த்தல் 9-ந் தேதி தொடங்குகிறது | அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான சான்றிதழ் சரிபார்த்தல் 9-ந் தேதி தொடங்குகிறது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு 2015-ம் ஆண்டு மே 30-ந் தேதி அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்பட்டு, முடிவுகள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப 1:5 விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் முதன்மை கல்வி அலுவலர்களால் வெளியிடப்படும். இப்பட்டியல் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், நடை முறையில் உள்ள இனசுழற்சி, விண்ணப்பதாரர்கள் அளித்திருந்த விவரங்கள் அடிப்படையிலும் தயார் செய்யப்படும். சான்றிதழ் சரிபார்த்தல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி அடுத்த மாதம் 9-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் அறிவிக்கப்படும் மையங்களில் நடத்தப்படும். மொத்த மதிப்பெண் 167. அதில் எழுத்துத்தேர்வுக்கு 150 மதிப்பெண். மீதம் உள்ள 17 மதிப்பெண்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது 'வெயிட்டேஜ்' அடிப்படையில் வழங்கப்படும். அதன் விவரம் வருமாறு:- வேலைவாய்ப்பக பதிவுமூப்புக்கு 10 மதிப்பெண்கள் அளிக்கப்படும். வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து முதல் 2 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 2 மதிப்பெண்களும், 4 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 4 மதிப்பெண்களும், 6 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 6 மதிப்பெண்களும், 8 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 8 மதிப்பெண்களும், 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் காத்திருப்பவர்களுக்கு 10 மதிப்பெண்களும் வழங்கப்படும். கூடுதல் கல்வி தகுதிக்கு 5 மதிப்பெண்கள் அளிக்கப்படும். பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2 மதிப்பெண்களும், இளங்கலை பட்டம் மற்றும் அதற்கு மேல் படித்தவர்களுக்கு 3 மதிப்பெண்களும், ஆய்வக உதவியாளராக முன் அனுபவம் உள்ளவர்களுக்கு கூடுதலாக 2 மதிப்பெண்களும் வழங்கப்படும். இப்பணி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி நாளான 6.5.2015 வரை தகுதியுள்ள வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை, கல்வி தகுதி, முன் அனுபவம் ஆகியவை மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு அன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங் கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. பணி அனுபவத்தை பொறுத்தவரை தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் பணிபுரிந்த 6.5.2015 வரையிலான பணிக்காலம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். பள்ளிக்கல்வி துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருந்தால் பணி அனுபவ சான்றில் மாவட்ட கல்வி அலுவலரிடமும், கல்லூரிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருந்தால் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரிடம் மேலொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் எழுத்து தேர்வு மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்பின் போது அளித்த சான்றிதழுக்கான மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப்பட்டியல் தயார் செய்யப்படும். அதன் அடிப்படையில் நடைமுறையில் உள்ள இனசுழற்சி, இதர உள்இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தேர்வு பட்டியல் உடனடியாக வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உரிய பணி நியமன ஆணை வெளிப்படையான கலந்தாய்வு மூலம் மாவட்ட கல்வி அலுவலர்களால் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

G.O NO 51 VALUE EDUCATION | வரும் கல்வி ஆண்டிலிருந்து பள்ளிகளில் 2 வரை திருக்குறள் பாடம் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் நீதிபோதனை வகுப்பில் கற்பிக்க அரசு ஏற்பாடு

வரும் கல்வி ஆண்டிலிருந்து பள்ளிகளில் 2 வரை திருக்குறள் பாடம் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் நீதிபோதனை வகுப்பில் கற்பிக்க அரசு ஏற்பாடு | திருக்குறளில் உள்ள 1,330 குறள்களையும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராஜரத்தினம் என் பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், திருக்குறளில் இடம் பெற்றுள்ள அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் பாடத்திட்டத்தில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அர சுக்கு நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்.26-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், உயர் நீதி மன்றத்தின் உத்தரவை நடை முறைப்படுத்தும் வகையில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு நல் லொழுக்க வகுப்பில் அறத்துப்பால், பொருட்பால் பகுதியில் குறிப்பிட்ட குறள்களைக் கற்பிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலர் டி.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: திருக்குறளில் உள்ள 108 அதிகாரங் களையும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது ஆய்வின் அடிப்படையில் திருக் குறளில் இன்பத்துப்பாலில் உள்ள அதி காரங்கள் நீங்கலாக, அறத்துப் பால், பொருட்பாலில் உள்ள 108 அதிகாரங் களில் உள்ள அனைத்து குறள்களையும் கணக்கிட்டு நன்னெறிக் கல்விக்கான பாடத்திட் டத்தை வகுத்துள்ளது. அந்தக் குழு பரிந்துரை செய்த நன்னெறிக் கல்வி பாடத்திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்பு வாரியாக 15 அதிகாரங்கள் 2017-18-ம் கல்வி ஆண்டிலிருந்து பயிற்றுவிக்கப் படும். உலகப் பொதுமறையான திருக் குறளில் இடம்பெற்றிருக்கும் நன் னெறிக் கருத்துகளின் அடிப்படை யில் நீதிக் கதைகள், இசைப்பாடல் கள், சித்திரக் கதைகள், அனிமேஷன் படங்கள் மற்றும் இணையவழி திருக்குறள்களை நவீனமுறையில் உருவாக்கி வெளியிடுமாறு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்கு நரும், தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநரும் அறிவுறுத்தப்பட்டுள் ளனர். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. உயர் அதிகாரி தகவல் இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "ஒவ்வொரு வகுப் புக்கும் 15 அதிகாரங்கள் பாடத் திட்டமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன" என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற டெல்லியில் விஜயபாஸ்கர் முயற்சி

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற டெல்லியில் விஜயபாஸ்கர் முயற்சி | 'நீட்' மசோதா தொடர்பாக நேற்று மீண்டும் டெல்லி வந்த தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய சுகாதாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சர்களைச் சந்தித்து பேசினார். மருத்துவக் கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழக மாணவர்கள் விலக்கு பெறும் வகையில் 2 சட்டத் திருத்த மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜனவரி 31-ம் தேதி நிறைவேற்றப்பட்டன. அரசியலமைப்பு சட்டத்தின் பொதுப்பட்டியலில் 'கல்வி' இடம் பெற்றுள்ளதால் இந்த மசோதாக் களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவது அவசியம். இதற்காக தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் தற்போது மத்திய சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகங்களிடம் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இவற்றுக்கு ஒப்புதல் பெறுவது தொடர்பாக, தமிழக சுகாதார அமைச்சர் சி.விஜய பாஸ்கர் நேற்று டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா, சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோரைச் சந்தித்து பேசினார். இதுகுறித்து செய்தியாளர் களிடம் விஜயபாஸ்கர் கூறும் போது, "முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்து விடும் என நம்புகிறேன். இளநிலை மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து முயன்று வருகிறோம். இந்த மசோதா மத்திய சட்ட அமைச் சகத்தின் கருத்து கேட்டு அனுப்பப் பட்டுள்ளது. எனவே இத்துறை யின் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தையும் சந்தித்து பேசினேன்" என்றார். "உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நாடு முழுவதிலும் 'நீட்' தேர்வு நடைபெறுகிறது. அதில் தமிழகத் துக்கு மட்டும் விலக்கு அளித்தால் அது, நீதிமன்ற அவமதிப்பாகி விடும்" என்று விஜயபாஸ்கரிடம் மத்திய அமைச்சர் நட்டா அச்சம் தெரிவித்துள்ளார். இதைப்போக்கும் வகையில் தமிழகத்தில் இருந்து சம்பந்தப் பட்ட ஆவணங்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு நட்டாவிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன. இதே ஆவணங்கள், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடமும் தரப்பட்டுள்ளன. இவற்றின் மீது மத்திய அரசு ஆலோசனை செய்து, ஓரிரு நாட்களில் தனது பதிலை தமிழக அரசிடம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அமைச்சர்களை விஜய பாஸ்கர் சந்தித்தபோது, தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுரை ஆணையர் முருகானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நாடு முழுவதும் 2,200 மையங்களில் நீட் தேர்வு. தமிழகத்தில் 8 நகரங்களில் நடக்கிறது என சிபிஎஸ்இ அறிவிப்பு

நாடு முழுவதும்  2,200 மையங்களில் நீட் தேர்வு. தமிழகத்தில் 8 நகரங்களில் நடக்கிறது என  சிபிஎஸ்இ அறிவிப்பு | தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, நாமக்கல், வேலூர் ஆகிய 8 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 103 நகரங்களில் 2,200 மையங்களில் மே 7-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த மருத்துவப் படிப்புகளுக்கு 2017-18ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) வரும் மே 7-ம் தேதி நடக்க உள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் இத்தேர்வுக்கு 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 10 மொழிகளில் தேர்வு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி உட்பட நாடு முழுவதும் 80 நகரங்களில் தேர்வு நடத்தப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 23 நகரங்கள் இப்பட்டியலில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நாடு முழுவதும் 103 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடக்க உள்ளது. கடந்த ஆண்டு 2 கட்டங்களாக நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கு 8,02,594 பேர் விண்ணப்பித்தனர். 7,31,223 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 71,371 பேர் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களைக் கொண்டு தாங்களாகவே எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தின. இதில் பல முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இந்த ஆண்டில் அந்தந்த மாநில அரசுகள் நடத்தும் கலந்தாய்வு மூலமாக தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையை நடத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கறுப்புப் பணத்தை பற்றி தெரிவிக்காவிட்டால் வருத்தப்படுவீர்கள் வருமான வரித்துறை எச்சரிக்கை


கறுப்புப் பணத்தை பற்றி தெரிவிக்காவிட்டால் வருத்தப்படுவீர்கள் வருமான வரித்துறை எச்சரிக்கை | கறுப்புப் பணத்தை பற்றி தெரிவியுங்கள் இல்லையெனில் பின்னர் வருத்தப்படுவீர்கள் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. மேலும் அனைத்து வகையான டெபாசிட் பற்றிய தகவல்கள் வருமான வரித்துறையினரிடம் இருப்பதாகவும் கூறியுள்ளது. கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்போர் பிரதான் மந்திரி காரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் விவரங்களையும் கறுப்புப் பணத்தையும் கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது. இது தொடர்பான விளம்பரம் அனைத்து செய்திதாள்களிலும் வெளியாகியுள்ளது. கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த பிறகு, கணக்கில் காட்டப்படாத பழைய ரூபாய் நோட்டுகளை வெள்ளையாக்கிக் கொள்ள மேலும் ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (பிஎம்ஜிகேஒய்) என்ற திட்டத்தை கொண்டுவந்தது. இந்த திட்டத்தின் மூலம் கணக்கில் வராத தொகையை ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்பாக வங்கியில் டெபாசிட் செய்து 50 சதவீதம் வரி மற்றும் அபராதம் செலுத்தி அந்த தொகையை வெள்ளையாக்கிக் கொள்ளலாம். மொத்த தொகையில் 25 சதவீத தொகையை நான்கு ஆண்டுகளுக்கு வட்டி இல்லாத டெபாசிட்டாக வைத்திருக்க வேண்டும். இந்த தொகை பாசனம், வீடு, கட்டுமானம், ஆரம்பகல்வி மற்றும் ஆரம்ப சுகாதாரத்துக்கு பயன்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இந்த கறுப்புப் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வரி செலுத்தி வெள்ளையாக்கிக் கொள்ள மார்ச் 31-ம் தேதி கடைசி நாளாகும். இதையொட்டி வருமான வரித்துறை நாட்கள் குறைவாக இருக்கிறது. உடனே உங்களது கறுப்புப் பணத்தை பற்றிய விவரங்களை தெரிவியுங்கள் என்று எச்சரித்துள்ளது. மேலும் கறுப்பு பணத்தையும் சொத்துகளையும் ஒப்படைத்தவர்களின் விவரங்கள் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்று வரித்துறை கூறியுள்ளது. கறுப்புப் பணம் வைத்திருப் பவர்கள் உடனே இந்த திட்டத்தின் கீழ் தகவலை தெரிவித்து விட வேண்டும் என்றும், இல்லையெனில் பினாமி சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று வருமான வரித்துறை சமீபத்தில் எச்சரிக்கை செய்திருந்தது. மேலும் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் பற்றி மத்திய அமலாக்கத்துறை யினரிடமும் சிபிஐ வசமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித் திருந்தது. ``ஒரு தனிமனிதரோ அல்லது நிறுவனமோ பிரதான் மந்திரி கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் கறுப்பு பணத்தை ஒப்படைத்தால் அவர்களது வருமானத்தில் 49.9 சதவீதம் அபராத வரியாக செலுத்த வேண்டும். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் தெரிவிக்காமல் வருமான வரித்தாக்கல் செய்யும் போது கறுப்புப் பணம் பற்றிய விவரம் அளித்தால் 77.25 சதவீதம் அபராத வரியாக செலுத்த வேண்டும்'' என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் இந்த திட்டத்தின் கீழ் கறுப்புப் பண விவரங்களை அறிவிக்காமல் சோதனையின் மூலம் கறுப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டு கணக்கில் வராத பணத்தை ஒப்படைத்தால் 107.25 சதவீத வரி மற்றும் அபராதமும் செலுத்த வேண்டும். சோதனையின் போது கணக்கில் வராத பணத்தை ஒப்படைக்கவிட்டால் மிக அதிக தொகை அபராதமும் 137.25 சதவீதம் வரியும் செலுத்த வேண்டும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு


ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு | ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கும் திட்டத்தை வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார் என உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று பட் ஜெட் மீதான விவாதத்தின்போது இது தொடர்பாக நடைபெற்ற விவாதம்: கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்): ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட் கள் வழங்கப்படவில்லை. பல இடங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் குடும்பங்களை வறுமைக்கோட்டுக்கு மேலே இருப்பவர்கள் என தவறாக குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்ற குறைகளைக் களைய வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். அமைச்சர் காமராஜ்: ரேஷனில் அனைத்துப் பொருட்களும் தட்டுப் பாடின்றி வழங்கப்படுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தோடு போட்டிபோட முயன்ற சத்தீஸ்கர் மாநிலம் தோல்வி அடைந்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் - திமுக கூட் டணி ஆட்சி காலத்தில் இருந்து தமிழகத்துக்கான மண்ணெண் ணெய் ஒதுக்கீடு பெருமளவில் குறைக்கப் பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின்: காங்கிரஸ் ஆட்சியில் மண் ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக் கப்பட்டதை நான் மறுக்கவில்லை. ஆனால், அன்றைய முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும், உணவு அமைச் சர் எ.வ.வேலுவை டெல்லிக்கு அனுப்பியும் கூடுதல் மண்ணெண் ணெயை பெற்றார். இதனால் ரேஷன் கடைகளில் தட்டுப் பாடின்றி மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. அமைச்சர் காமராஜ்: காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில்தான் சிறப்பு பொதுவிநியோகத் திட்டத் துக்கான மானியம் நிறுத்தப்பட் டது. அந்த சுமையையும் ஏற்றுக் கொண்டு பொதுவிநியோகத் திட்டத்தை ஜெயலலிதா சிறப்பாக செயல்படுத்தினார். வரும் ஏப்ரல் 1-ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார். ரேஷன் கடை களில் அத்தியாவசியப் பொருட் கள் வழங்கப்படாததைக் கண் டித்து பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மு.க.ஸ்டாலின்: அமைச்சர் காமராஜ்: ரேஷன் கடைகள் முன்பு பெண்கள் போராட் டம் நடத்தவில்லை. திமுகவினர் தான் போராட்டம் நடத்தினர். மு.க.ஸ்டாலின்: ரேஷன் கடைகள் முன்பு பெண்கள் போராட்டம் நடத்தியதை நிரூபித் தால் அதனை ஏற்றுக்கொள்ள அமைச்சர் தயாரா? தமிழகத்தில் நான்கரை கோடி பெண்கள் உள்ளனர். அவர்களின் எத்தனை பேர் போராடினார்கள் என சொல்ல முடியுமா? அமைச்சர் காமராஜ்: மு.க.ஸ்டாலின்: உண்மை என்ன என்பதை மக்கள் அறிவார்கள். இவ்வாறு விவாதம் நடை பெற்றது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 24 March 2017

7 லட்சத்து 32 ஆயிரம் பேர் எழுதிய ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு இன்று (24.03.2017) வெளியீடு.

7 லட்சத்து 32 ஆயிரம் பேர் எழுதிய ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு இன்று வெளியீடு | அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 4 ஆயிரத்து 362 ஆய்வக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதையொட்டி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 30-ந்தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 7 லட்சத்து 31 ஆயிரத்து 844 பேர் தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு எழுதியவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட பதிவெண் மற்றும் பிறந்த தேதியை www,dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் ஏதாவது ஒன்றில் பதிவு செய்து தாம் பெற்ற மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.





விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 23 March 2017

ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் இன்று (24.03.2017) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வினை சுமார் 8 லட்சம் பேர் எழுதுதினார்கள். இதில் ஒரு காலிஇடத்திற்கு 5 பேர் என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்படாவிட்டால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு ஏற்படும் என்பதினால் எழுத்துத் தேர்வினை எழுதிய சதீஷ் என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன் கடைநிலை பணிகளுக்கு நேர்முகத் தேர்வு தேவையில்லை. எழுத்துத் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்யலாம். தேவைப்பட்டால் நேர்முகத் தேர்வு நடத்தலாம். அதில் வரும் மார்க் இரண்டையும் சேர்த்து மொத்தமாகக் கணக்கிட்டு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்யலாம் என உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பல நாட்களாக ரிசல்ட் எப்ப வரும் என்று தேர்வு எழுதியவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். சமீபத்தில் டி.பி.ஐ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து இன்று (24.03.2017) ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்விற்காக முடிவுகளை கீழ்க்காணும் இணையதள முகவரியில் சென்றுப் பார்க்கலாம். dge.tn.gov.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in என்ற இணையதள முகவரியில் சென்றுப் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

5-ம் வகுப்பு பயிலும் மாணவருக்கு தனது பெயரைக்கூட தவறில்லாமல் எழுதத் தெரியவில்லை. அந்த அளவுக்கு தமிழக கல்வித்தரம் மிகவும் மோசமடைந்துள்ளது என வேதனை தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம்.

5-ம் வகுப்பு பயிலும் மாணவருக்கு தனது பெயரைக்கூட தவறில்லாமல் எழுதத் தெரியவில்லை. அந்த அளவுக்கு தமிழக கல்வித்தரம் மிகவும் மோசமடைந்துள்ளது என வேதனை தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இதற்கு புற்றீசல்போல பெருகியுள்ள லெட்டர்பேடு ஆசிரியப் பயிற்சி கல்வி நிறுவனங்களே காரணம் என சுட்டிக்காட்டியுள்ளது. திருச்சியைச் சேர்ந்த தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி நிர்வாகம் நடப்பு கல்வியாண்டில் பிஎட் பாடப்பிரிவில் மாணவர்களி்ன் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புதிதாக எம்எட் பாடப் பிரிவை தொடங்கவும் அனுமதி கோரியிருந் தது. ஆனால் இதற்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது. இதை எதிர்த்து அந்த கல்லூரி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரிய பயிற்சி கல்லூரிகளுக்கு இயந்திரத்தனமாக அனுமதி கொடுக்கிறது. ஆனால் அதைப்பற்றி தமிழக அரசு எந்த அக்கறையும் கொள்வதில்லை. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியப் படிப்பை முடித்து வெளிவரும் ஆசிரியர்களின் கல்வித்தரம் கவலையளிக்கும் வகையில் உள்ளது. ஏனெனில், 5-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு தனது பெயரைக்கூட தவறு இல்லாமல் எழுதத் தெரியவில்லை. அந்த அளவுக்கு தமிழக கல்வித்தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. புற்றீசல்போல பெருகியுள்ள எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத, உரிய விதிமுறைகளைப் பின்பற்றாத லெட்டர்பேடு கல்வி நிறுவனங்களும், அங்கு பயிலும் ஆசிரியர்களுமே இதற்கு முக்கியக் காரணம். தமிழகத்தில் திறமையான, தகுதியான ஆசிரியர்களின் எண் ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இதனால்தான் தமிழக மாணவர்கள் பிற மாநில மாணவர்களோடு கல்வியில் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கல்வி வணிக ரீதியிலான தொழி லாக மாறிவிட்டதற்கு வரன்முறை இல்லாத கல்வி நிறுவனங்களும் ஒரு காரணம். இதை இப்போதே அதிகாரிகள் ஒழுங்குபடுத்த வில்லை எனில் ஆசிரிய பட்டதாரி களின் எண்ணிக்கையும் பெருகி அவர்களும் வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்க நேரிடும். எனவே இந்த வழக்கில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலையும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கிறேன். நாட் டில் எத்தனை ஆசிரியப் பயிற்சி கல்லூரிகள் உள்ளன? ஆசிரியப் படிப்பை முடித்துவிட்டு வேலையில் லாமல் காத்திருக்கும் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படிப்பு முடித்தவர் கள் எத்தனை பேர்? இன்னும் எத் தனை ஆசிரியப் பயிற்சி கல்லூரி கள் தேவை? என்பன உள்ளிட்ட 10 கேள்விகளுக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக மும் விரிவாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 27-க்கு தள்ளிவைத்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 5.84 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 5.84 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 5 லட்சத்து 84 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீது நேற்று நடந்த விவாதம்: கோவி.செழியன் (திமுக): எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த போது, ஏழை மாணவர்களுக்கு மாநகராட்சி பள்ளிகளில் இலவச கணினி பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அதை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்தினார். இவ்வாறாக தந்தையும், மகனும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர். பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்: மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான். கடந்த 4 ஆண்டுகளில் 32 லட்சம் மாணவர் களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 5 லட்சத்து 84 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: ஜெயலலிதா ஆட்சியில் கடந்த 2011-ம் ஆண்டு சிறப்பு திட்ட செயலாக்கத்துறை உருவாக்கப்பட்டது. அதன்கீழ், இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இதை பின்பற்றி உத்தரப் பிரதேச முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவும், மடிக்கணினி வழங்குவதாக அறிவித்தார். ஆனால், ஓராண்டு மட்டுமே வழங்கப்பட்டது. அதன்பின் நிதிநிலையை காரணம் காட்டி நிறுத்தி விட்டார். ஆனால், தமிழகத்தில் 32 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நேற்று விவாதம் நடந்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி.மாசிலா மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணயக் குழுவின் புதிய தலைவர் நீதிபதி டி.வி.மாசிலாமணி | தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி.மாசிலா மணி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 3 ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார். தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பள்ளிகள் செயல்படுகின்றன. தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக் கப்படுவதை ஒழுங்குபடுத்தும் வகை யில் கடந்த 2009-ம் ஆண்டு கல்விக் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனியார் பள்ளிகளின் உள்கட் டமைப்பு வசதிகளை ஆய்வுசெய்து ஒவ்வொரு பள்ளிக்கும் குறிப்பிட்ட கட்டணத்தை நிர்ணயம் செய்து அரசுக்கு பரிந்துரை செய்யும். அதன் அடிப்படையில் தனியார் பள்ளி களுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப் படும். அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது புகார் செய்யவும், அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக்குழு தலைவராக பணியாற்றி வந்த நீதிபதி எஸ்.ஏ.சிங்காரவேலுவின் பதவிக்காலம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 30-ல் முடிவடைந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக புதிய தலைவர் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் புதிய தலைவராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி.மாசிலாமணியை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் டி.உதயசந்திரன் வெளியிட்டுள்ளார். நீதிபதி மாசிலாமணி, பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார். கல்விக் கட்டண நிர்ணயக் குழுவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டதை தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரி குலேஷன், மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநிலப் பொதுச் செய லாளர் கே.ஆர்.நந்தகுமார் வரவேற் றுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக தலை வர் நியமிக்கப்படவில்லை. இப்போது புதிய தலைவர் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நடவடிக்கை எடுக்கலாம் கட்டணக் குழுவின் புதிய தலைவரான நீதிபதி டி.வி.மாசிலாமணி, தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் நிர்வாகச் செலவினங்கள் உயர்ந் துள்ளதையும், கட்டிடச் சான்று, உறுதிச் சான்று, தீயணைப்புத் துறையினர் சான்று, அங்கீகாரம், பல்வேறுவிதமான சான்றிதழ்கள் வாங்குவதற்கு செலவு, காப்பீட்டு கட்டணம், இவற்றை எல்லாம் கணக்கில்கொண்டு கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்குமேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம்" என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்பங்களை இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

7 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி | ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்பங்களை இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தகுதித் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 73 ஆயிரம் விண்ணப் பங்கள் விற்பனை ஆகியுள்ளன விண்ணப்ப விற்பனை நேற் றுடன் முடிவடைந்தது. இந்த நிலை யில், பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்களை தேர்வுகட்டணத் துக்கான செலானுடன் (கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250 மட்டும்) இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் அறிவிக்கப்பட்டுள்ள மையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வி, சாதி சான்றிதழ் நகல்கள் எதுவும் இணைக்க தேவையில்லை. தேர்வு கட்டணத்துக்கான செலான் மட்டும் போதும். பூர்த்தி செய்த விண்ணப் பத்தைச் சமர்ப்பிக்கச் செல்லும் போது அதை நகல் எடுத்துக் கொண்டுசெல்ல வேண்டும். அதில் கையெழுத்து மற்றும் சீல் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். அதை விண்ணப்பம் சமர்ப்பித் ததற்கான ஒப்புகைச்சீட்டாக பயன் படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு மையத்திலும் பெற் றுக்கொள்ளப்படும் விண்ணப்பங் கள் சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அங்கு விண்ணப்பங்கள் சரிபார்க் கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு ஆசிரி யர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப் படும். இணையதளத்திலிருந்து விண்ணப்ப எண்ணை பதிவுசெய்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் தனியே வெளியிடும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 21 March 2017

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6, 7 தேதிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலை வழிகாட்டி முகாம் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.


தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6, 7 தேதிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலை வழிகாட்டி முகாம் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்து வழி காட்டும் வகையில் ஏப்ரல் 6, 7 தேதிகளில் வழிகாட்டி முகாம் கள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார். ஏப்ரல் 6, 7-ல் இந்த முகாம் நடத்தப்படுகிறது. இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் கள் மற்றும் மாவட்ட கல்வியி யல் ஆராய்ச்சி நிறுவன விரிவுரை யாளர்களுக்கு சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, ''எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்புக்கு வழிகாட் டும் வகையில் முகாம் நடத்தப் படுவது நாட்டிலேயே இது முதல் முறை. இந்த வழிகாட்டி முகாம் கள் தமிழகம் முழுவதும் வட் டாரத்துக்கு ஒன்று என்ற அளவில் 500 இடங்களில் நடத்தப்படும். இதன்மூலம் கிராமப்புற மாண வர்கள் பெரிதும் பயன் பெறு வார்கள்'' என்றார். முன்னதாக, ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்றுப் பேசும்போது, ''இந்த வழிகாட்டி முகாம்களில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்'' என்றார். விழாவில் பயிற்சி கையேட்டை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் வெளியிட, முதல் பிரதியை தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, பள்ளிக் கல்வித் துறை செயலர் டி.உதயச் சந்திரன் பெற்றுக் கொண்டனர். தமிழ்நாடு பாடநூல் கழக நிர் வாக இயக்குநர் மைதிலி ராஜேந் திரன், செயலர் கார்மேகம், அனை வருக்கும் கல்வி திட்ட மாநில இயக் குநர் பூஜா குல்கர்னி, மத்திய இடை நிலைக் கல்வி திட்ட (ஆர்எம்எஸ்ஏ) மாநில இயக்குநர் ஜி.அறிவொளி, பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆய்வக உதவியாளர் நியமனம் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பதவியில் 4,362 காலியிடங்களை நிரப்ப கடந்த 2015 மே 31-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் அரசு தேர்வுத் துறை நடத்திய இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். 2 ஆண்டுகள் நெருங்கி யும் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இத்தேர்வு குறித்து 10 நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கடந்த 2-ம் தேதி அறிவித்தார். அதன் பிறகும் முடிவுகள் வெளியிடப்படாதது குறித்து, நேற்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ''ஆய்வக உதவியாளர் நியமனம் தொடர்பாக 2 அல்லது 3 நாட்களில் அரசாணை வெளியிடப்படும்'' என்றார். எழுத்துத் தேர்வுக்கு பிறகு நேர்காணல் நடத்தி, அதன்மூலம் ஆய்வக உதவியாளர்களை தேர்வு செய்ய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், நேர்காணல் மட்டுமின்றி, எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணையும் கணக்கில் கொண்டே ஆய்வக உதவியாளர் நியமனம் நடக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, நியமனத்துக்கு எழுத்துத் தேர்வு மதிப்பெண் சேர்க்கப்படுமா அல்லது எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண், கூடுதல் கல்வித்தகுதி, பணிஅனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் இருக்குமா என்பது அரசாணையில் தெரிவிக்கப்படும். எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு மேற்படிப்பு, வேலைவாய்ப்பு வழிகாட்டி ஆலோசனை வழங்குவதற்கான பயிற்சி கையேட்டை பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட, முதல் பிரதியை பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, பள்ளிக்கல்வித்துறை செயலர் டி.உதயச்சந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
செய்தித் துளிகள் | LATEST NEWS
  • 21/3/2017 | பள்ளி கல்வித்துறைக்கு போதிய ஆசிரியர்கள் உடனடி நியமனம் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 
  • 21/3/2017 | 6 மாதத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 
  • 21/3/2017 | நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 
  • 21/3/2017 | எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்து வழி காட்டும் வகையில் ஏப்ரல் 6, 7 தேதிகளில் வழிகாட்டி முகாம் கள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார். ஏப்ரல் 6, 7-ல் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
  • 21/3/2017 | ஆய்வக உதவியாளர் நியமனம் தொடர்பாக 2 அல்லது 3 நாட்களில் அரசாணை வெளியிடப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல். நியமனத்துக்கு எழுத்துத் தேர்வு மதிப்பெண் சேர்க்கப்படுமா அல்லது எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண், கூடுதல் கல்வித்தகுதி, பணிஅனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் இருக்குமா என்பது அரசாணையில் தெரிவிக்கப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 19 March 2017

TNPSC RECRUITMENT 2017 | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION-CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - ASSISTANT DIRECTOR | NO. OF VACANCIES - 4 | LAST DATE : 13.04.2017 | DATE OF EXAMINATION : 16.07.2017

TNPSC RECRUITMENT 2017 | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION-CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - ASSISTANT DIRECTOR | NO. OF VACANCIES - 4 | LAST DATE : 13.04.2017 | DATE OF EXAMINATION : 16.07.2017
>>>>>>>
§DATE OF NOTIFICATION15.03.2017
§EMPLOYMENT TYPE:Govt Job
§APPLICATION:ONLINE
§WEBSITE:http://www.tnpsc.gov.in/latest-notification.html
§NAME OF THE POST:ASSISTANT DIRECTOR
§EDUCATIONAL QUALIFICATION:REFER PROSPECTUS
§VACANCIES:4
§SALARY:Rs.15,600-39,100+Grade Pay Rs.5400
§SELECTION PROCEDURE:EXAM-OBJECTIVE TYPE OMR METHOD
§LAST DATE:13.04.2017
§DATE OF EXAMINATION:16.07.2017

List of Current Notifications
S No.Advt. No./ Date of NotificationName of the PostOnline RegistrationDate of ExaminationActivity

FromTo
NOTIFICATIONS - 2017
19/2017 15.03.201713.04.201716.07.2017Apply Online

28/2017 08.03.201707.04.201702.07.2017Apply Online
37/2017


01.03.201729.03.201725.06.2017Apply Online
45/2017

22.02.201721.03.201724&25.06.2017Apply Online
53/2017 08.02.201731.03.201701&02.06.2017
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE
Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.