Wednesday, 8 February 2017

PLUS TWO TAKKAL ANNOUNCEMENT MARCH 2017 | பிளஸ் 2 தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காத தனித் தேர்வர்களுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் பிப்ரவரி 9, 10-ம் தேதிகளில் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க அரசு தேர்வுத்துறை அழைக்கிறது...விரிவான விவரங்கள் ..

பிளஸ் 2 தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காத தனித் தேர்வர்களுக்கு சிறப்பு அனுமதி விண்ணப்பிக்க அரசு தேர்வுத்துறை அறிவிப்பு | அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர் களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எந்த கல்வி மாவட்டத்திலிருந்து விண்ணப்பிக்கிறார்களோ, அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்துக்கு பிப்ரவரி 9, 10-ம் தேதிகளில் நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித் தேர்வர்களுக்கும் திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய தலைமை இடங்களில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். தனியார் புரவுசிங் மையங்கள் மூலம் விண்ணப்பிக்க முடியாது. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரத்தை தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) அறிந்துகொள்ளலாம். உரிய தேர்வுக் கட்டணம், சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1000, ஆன் லைன் பதிவு கட்டணம் ரூ.50 ஆகியவற்றை பணமாக சேவை மையத்திலேயே செலுத்திவிட வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் பதி விறக்கம் செய்துகொள்ள வேண் டும். பதிவிறக்கம் செய்ய வேண் டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். இணையதளத்தில் வெளியிடப் பட்ட அறிவுரைகளின்படி (தேர்வுக் கட் டண விவரம் தவிர்த்து) வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் பாடங் கள் வகைப்பாடு அறிந்து அதன்படி விண்ணப்பிக்க வேண்டும். தனித்தேர்வர்களுக்குத் தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது, தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.