Sunday, 5 February 2017

சி.பி.எஸ்.இ. மாணவர்கள் பாடப்புத்தகங்களை பார்த்து இனிமேல் தேர்வு எழுத முடியாது

சி.பி.எஸ்.. மாணவர்கள் பாடப்புத்தகங்களை பார்த்து இனிமேல் தேர்வு எழுத முடியாது | சி.பி.எஸ்.. 9-ம் வகுப்பில் இந்தி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாட தேர்வுகளிலும், 11-ம் வகுப்பு இறுதி ஆண்டு தேர்வில் பொருளாதாரம், உயிரியல், புவியியல் உள்ளிட்ட சில பாட தேர்வுகளிலும் பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகளை தேர்வு அறைக்கு கொண்டு வந்து, அவற்றை பார்த்து விடையளிக்க அனுமதிக்கும் திட்டம், கடந்த 2014-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த திட்டத்தை வருகிற 2017-2018-ம் கல்வி ஆண்டில் இருந்து ரத்து செய்ய சி.பி.எஸ்.. முடிவு செய்துள்ளது. இந்த திட்டம், மாணவர்களின் திறனை வளர்க்க இடையூறாக இருப்பதாக பள்ளிகளில் இருந்து எதிர்மறையான கருத்துகள் வந்ததால், இது கைவிடப்படுவதாக சி.பி.எஸ்.. உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.