Wednesday, 30 November 2016

'நாடா' புயல் எச்சரிக்கையை அடுத்து சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

'நாடா' புயல் எச்சரிக்கையை அடுத்து சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் பள்ளிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 2 ஆகிய இரு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் வானூர், மரக்காணம் ஆகிய இரு வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இந்த விடுமுறையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 'நாடா' புயல் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு 'நாடா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, "வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று (புதன்கிழமை) காலை 8.30 மணிக்கு மேலும் வலுப்பெற்று புயலாக உருவானது. இந்தப் புயலுக்கு 'நாடா' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 'நாடா' புயல் புதுச்சேரிக்கு தென் கிழக்கே 830 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் டிசம்பர் 2-ம் தேதியன்று வேதாரண்யம் - புதுச்சேரிக்கு இடையே கடலூர் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார். சென்னையில் நாளை முதல் மழை அவர் மேலும் கூறும்போது, 'நாடா' புயல் காரணமாக சென்னையில் நாளை அதிகாலை முதல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.




விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வங்கக்கடலில் உருவான நாடா புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை, நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் வானூர், மரக்காணம் வட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.

வங்கக்கடலில் உருவான நாடா புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை, நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் வானூர், மரக்காணம் வட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TEACHERS WANTED | THIRUVALLUVAR VIDHYASALA MIDDLE SCHOOL (AIDED)- VIRUDHU NAGAR | POST - B.T.ASST IN SCIENCE - REGULAR SCALE

TEACHERS WANTED | THIRUVALLUVAR VIDHYASALA MIDDLE SCHOOL (AIDED)- VIRUDHU NAGAR | POST - B.T.ASST IN SCIENCE - REGULAR SCALE





விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு ஊழியர்களின் டிஜிட்டல் பணி பதிவேடு -பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவு.

அரசு ஊழியர்களின் டிஜிட்டல் பணி பதிவேடு -பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவு. அரசு ஊழியர்களின் பணி பதிவேடு டிஜிட்டல் மயமாகிறது. கருவூலங்களில் இது கணினியில் பதிவு செய்யப்படும்.அனைத்து சார்நிலை கருவூலங்களிலும், மாவட்ட கருவூலங்களிலும் அரசு ஊழியர்களின் பணி பதிவேட்டை டிஜிட்டல் மயமாக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த முறையில் பணி பதிவேட்டின் பக்கங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் பதிவு செய்யப்படும். இவ்வாறு ஸ்கேன் செய்யப்பட்ட பின்னர் ஒரு பிரிண்ட் அவுட் வழங்கப்படும். அதனை அரசு ஊழியர்கள் கவனமாக சரிபார்த்து திருத்தங்கள் இருப்பின் உடன் சரி செய்யவேண்டும். இப்பணிமுடிந்த பின்னர் பணி பதிவேடு 'டிஜிட்டல் சர்வீஸ் ரெஜிஸ்டர்' என்று அழைக்கப்படும்.இந்த டிஜிட்டல் மயத்திற்காக பணி பதிவேட்டில் உள்ள முதல் பக்க சுய விபரம் மற்றும் புகைப்படம், பணி நியமன ஆணை பதிவு செய்யப்பட்ட விபரம், பணி வரன்முறை தகுதிகாண் பருவ பதிவுகள், அனைத்து கல்வி தகுதிகள் சார்ந்த பதிவுகள், கல்வி தகுதிகளின் உண்மை தன்மை சார்ந்த பதிவுகள், ஜிபிஎப், சிபிஎஸ் திட்டங்களில் சேர்ந்தமை சார்ந்த பதிவுகள், பணிக்காலம் சரிபார்ப்பு, உயர் கல்வி பயில முன்பு அனுமதி பெறப்பட்ட பதிவுகள், பணியிட மாறுதல், பதவிஉயர்வு சார்ந்த பதிவுகள், ஊதிய நிர்ணயம், தேர்வு நிலை, சிறப்பு நிலை, ஊக்க ஊதியம் சார்ந்த பதிவுகள், பல்வேறு வகையான விடுப்பு பதிவுகள், குடும்ப உறுப்பினர்கள், வாரிசு நியமன படிவங்கள் போன்றவை இவற்றில் சரிபார்க்கப்படும். இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில், 'பள்ளி கல்வித்துறையில் பணி பதிவேட்டை டிஜிட்டல் மயமாக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். பதிவுகளை ஒருமுறை தனி கவனம் செலுத்தி ஆய்வு செய்த பின்னர் பணி பதிவேடுகளை பாதுகாப்பான முறையில் அந்தந்த கருவூலங்களில் சென்று டிஜிட்டல் மயமாக்கும் பணியை நிறைவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கிட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். முதன்மை கல்வி அலுவலகத்தில் இதற்கென ஒரு பதிவேடு தொடங்கி ஒவ்வொரு நாளும் இப்பணியை நிறைவு செய்த பள்ளிகள் சார்ந்த விபரங்களை பதிவு செய்து கண்காணித்திட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளி மாணவர்களுக்கு யோகா கட்டாயம் மத்திய அரசு 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு யோகா கட்டாயம் மத்திய அரசு 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவு | நாடு முழுவதும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கு யோகாவை கட்டாயப் பாடமாக்குவது குறித்து 3 மாதங் களுக்குள் முடிவெடுக்குமாறு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய அளவிலான யோகா கொள்கையை வகுத்து, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல், 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு யோகா மற்றும் சுகாதாரக் கல்விக்கான பாடப் புத்தகங்களை வழங்க மனித வள மேம்பாட்டுத் துறை, என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ, என்சிடிஇ ஆகியவற்றுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அஷ்வினி குமார் உபாத்யாய என்ற வழக்கறிஞர் மற்றும் டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் ஜே.சி.சேத் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அனைத்து மக்களுக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதார உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது என கூறப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதி எம்.பி.லோகுர் தலைமையிலான பெஞ்ச், இம்மனுவையே கோரிக்கை யாகக் கருதி, இவ்விவகாரம் குறித்து 3 மாதத்துக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.





விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நல்லொழுக்க பாடத்தில் ஆசிரியர்களுக்கு 2 நாள் சிறப்பு பயிற்சி

நல்லொழுக்க பாடத்தில் ஆசிரியர்களுக்கு 2 நாள் சிறப்பு பயிற்சி | மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:- அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 9, 10-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், ஒழுக்கத்தை நிலைநாட்டவும் நற்பண்புகள் கொண்ட கல்வி (நல்லொழுக்க பாடம்) வழங்கப்பட உள்ளது. அதற்கான வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளி பாடத்துடன் 40 வகையான நற்பண்புகளை இணைத்து கற்பித்தலும், கற்றலும் என்னும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக பிரத்யேக ஆசிரியர் கையேடு தயாரிக்கப்பட்டு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள நற்பண்புகள் பாடவேளையைப் பயன்படுத்தி வாரத்துக்கு ஒரு பாடம் என்ற முறையில் ஆண்டு முழுவதும் நற்பண்பு கல்வி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக மாநில அளவில் முதன்மை கருத்தாளர் பயிற்சி சென்னையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை (நேற்று) நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன (டயட்) விரிவுரையாளர் ஒருவரும், பட்டதாரி ஆசிரியர்கள் 2 பேரும் கலந்துகொண்டனர். இப்பயிற்சி புதன்கிழமையும் (இன்றும்) நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் டிசம்பர் 2, 3-ம் தேதிகளில் பயிற்சி நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, ஒன்றியங்களில் டிசம்பர் 7, 8-ம் தேதிகளில் பயிற்சி நடைபெறும். இந்தப் பயிற்சியின் மூலம் 15 ஆயிரம் ஆசிரியர்களும் 20 லட்சம் மாணவ-மாணவிகளும் பயன்பெறுவர்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சென்னையை நோக்கி புயல் 2-ந்தேதி கரையை கடக்கும் என்று அறிவிப்பு

சென்னையை நோக்கி புயல் 2-ந்தேதி கரையை கடக்கும் என்று அறிவிப்பு | சென்னையை நோக்கி வரும் புயல் 2-ந்தேதி கரையை கடக்க இருக்கிறது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. 2-ந்தேதி கரையை கடக்கிறது சென்னைக்கு தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது சென்னையில் இருந்து 1,070 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 1,030 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 720 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வடமேற்கு திசையை நோக்கி நகர தொடங்கும். இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று புயலாக மாறும். சென்னை நோக்கி வரும் இந்த புயல் 2-ந்தேதி காலை சென்னை-வேதாரண்யம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழைக்கு வாய்ப்பு இதனால் தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியில் பெரும்பாலான இடங்களில் இன்று (புதன்கிழமை) இரவு முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாளை (வியாழக்கிழமை), நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. மேலும் கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். சில நேரங்களில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும். எனவே இன்று இரவு முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். அதே போல் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள். கடலோர பகுதிகள் சென்னை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும். அதே சமயம் திருச்சி, சேலம், கோவை, தர்மபுரி உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தள்ளிவைப்பு

சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தள்ளிவைப்பு | சென்னை பல்கலைக்கழகத்தின் இந்த ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா, வரும் டிசம்பர் 1-ந்தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இது அந்த பல்கலைக்கழகத்தின் 159-வது பட்டமளிப்பு விழாவாகும். இந்த நிலையில் அந்த பட்டமளிப்பு விழாவை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட சில நிர்வாகக் காரணங்களுக்காக டிசம்பர் 1-ந்தேதியன்று நடத்தப்பட இருந்த பட்டமளிப்பு விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கூறியுள்ளார்.





விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 29 November 2016

தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு பள்ளிகளில் ஆய்வகம் மற்றும் நுாலகத்தை துாசி தட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்து வகுப்புகள் நடத்த வேண்டும்’ என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.

அரசு பள்ளிகளில் ஆய்வகம் மற்றும் நுாலகத்தை துாசி தட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்து வகுப்புகள் நடத்த வேண்டும்' என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்த, வழிபாட்டு கூட்டத்தில் அவர்களை பேச வைக்க வேண்டும். பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்த வேண்டும் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் நோய் பரவும் என்பதை, கிராமப்புற மாணவர்கள் மூலம் அவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அத்துடன், கழிப்பறைக்கு செல்லும் போது காலணி அணியும் படியும், சோப்பு பயன்படுத்தி கை கழுவும்படியும் அறிவுறுத்த வேண்டும் பள்ளி வளாகத்தில் குப்பை, தேவையற்ற பொருட்கள் குவியாமல் பார்த்து கொள்ள வேண்டும். குடிநீர் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்து, மாணவர்களுக்கு துாய குடிநீரை வழங்க வேண்டும் நுாலகம், ஆய்வகம், வகுப்பறை, கணினிகள், ஆவணங்கள், மாணவர்கள் அமரும் பெஞ்ச் போன்றவற்றில் துாசி படியாமல், சுத்தமாக பராமரிப்பது அவசியம். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடு தளர்வு ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடு தளர்வு ரிசர்வ் வங்கி அறிவிப்பு | வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் தற்போது வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் வரை எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த கட்டுப்பாடு காரணமாக வங்கியில் பணத்தை 'டெபாசிட்' செய்ய வாடிக்கையாளர்கள் தயங்கியதாக தெரியவந்தது. எனவே பல்வேறு அம்சங்களையும் கருத்தில் கொண்டு பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாட்டை தளர்த்தி ரிசர்வ் வங்கி நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, தற்போது வரையறுக்கப்பட்டுள்ள தொகையை (ரூ.24 ஆயிரம்) விட கூடுதல் தொகையை எடுத்துக்கொள்ள அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அப்படி எடுக்கும் போது அந்த தொகை 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாக கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.





விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘யு.ஜி.சி.’ ‘நெட்’ தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை கலெக்டர் அறிவிப்பு

'யு.ஜி.சி.' 'நெட்' தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை கலெக்டர் அறிவிப்பு | சென்னை கலெக்டர் .மகேஸ்வரி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியம் மூலம் 22.1.2017 அன்று நடைபெற உள்ள யு.ஜி.சி./ நெட் தேர்வு எழுதுபவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சியில் 40 வயதுக்குட்பட்ட முதுநிலை பாடப்பிரிவை சேர்ந்த வரலாறு, கணிதம், தமிழ், ஆங்கிலம் பயின்ற முதுநிலை பட்டதாரிகள் வயது சான்று, சாதி சான்று, கல்வி சான்று ஆகியவற்றின் நகல்களுடன் அடுத்த(டிசம்பர்) மாதம் 5, 6 ஆகிய இரு நாட்களில் சென்னை கிண்டி தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று விபரங்களை பெற்று இலவச பயிற்சி வகுப்பு கலந்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.




விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் தமிழக அரசு முடிவு

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் தமிழக அரசு முடிவு | அரசு ஊழியர்களுக்கான மாத சம்பள தொகையையும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையையும் வழக்கம் போல வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பண கட்டுப்பாடு தமிழகத்தில் 14 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 1 லட்சம் தொகுப்பூதியதாரர்களும், 7 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். இவர்களுடைய வங்கி கணக்கில் மாதந்தோறும் 30-ந்தேதி பணம் செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று இந்த மாதமும் வங்கி கணக்கில் பணம் செலுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அன்றைய தினமே அவர்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இதுகுறித்து என்.ஜி.. சங்க தலைவர் சண்முகராஜாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:- வங்கி கணக்கு மூலம் அரசு ஊழியர்களுக்கு சம்பள தொகையும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையும் வழக்கம் போல் வங்கி கணக்கு மூலம் 30-ந்தேதி வழங்கப்பட உள்ளது. வங்கிகளில் ஒரு வாரத்துக்கு 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு உள்ளது. இதனை தளர்த்தினால் மட்டுமே ஒட்டுமொத்த தொகையையும் எடுக்க முடியும். ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை அரசு ஊழியர்கள் மாத தொடக்கத்தில் வீட்டு வாடகை, மளிகை செலவு, பால் செலவு போன்ற குடும்ப செலவுகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. எனவே அரசு ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த சம்பளத் தொகையையும் ரிசர்வ் வங்கி வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.




விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE
Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.