Thursday, 30 June 2016

EMPLOYMENT-TN-TAMIL NEWS 3139|சுந்தரனார் பல்கலை. கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்கு நேர்முகத் தேர்வு

EMPLOYMENT-TN-TAMIL NEWS 3139|சுந்தரனார் பல்கலை. கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்கு நேர்முகத் தேர்வு
சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வு வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக, பல்கலைக்கழக பதிவாளர் ஜான் டி பிரிட்டோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும், பல்கலைக்கழக கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடங்கள் கற்பிக்க பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு விதிகளின்படி தகுதியானோர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான நேர்முகத் தேர்வு வரும் ஜூலை 7ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்.  தேர்வு செய்யப்படும் நபர்கள் தாற்காலிக விரிவுரையாளர்களாக நியமனம் செய்யப்படுவர். தகுதியானோர் அனைத்து அசல் சான்றிதழ்களுடன், 2 நிழற்படம், சான்றொப்பமிட்ட சான்றிதழ்கள் 2 ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும் என பதிவாளர் தெரிவித்துள்ளார்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EMPLOYMENT-TN-TAMIL NEWS 3138|ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு செயில் நிறுவனத்தில் 226 டெக்னீசியன் பணி

EMPLOYMENT-TN-TAMIL NEWS 3138|ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு செயில் நிறுவனத்தில் 226 டெக்னீசியன் பணி
இந்திய அரசு நிறுவனமும், இந்தியாவின் முன்னணி இரும்பு உற்பத்தி நிறுவனமான செயில் நிறுவனத்தின் மேற்கு வங்க மாநிலம் பர்ன்பூர் கிளையில் நிரப்பப்பட உள்ள 226 ஆப்ரேட்டர்-கம்-டெக்னீசியன் (பயிற்சி) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Operator-cum-Technician (Trainee) (S-3) – 134
துறைவாரியான காலியிடங்கள்:
1. Mechanical - 64
2. Metallurgy - 25
3. Electrical - 25
4. Instrumentation - 10
5. Chemical - 10
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,800 - 24,110
பணி: Attendant-cum-Technician (Trainee) (S-1)  - 70
1. Fitter - 50
2. Electrician  - 20
3. Heavy   Vehicle Operation  - 10
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,830 - 22,150
பணி: Specialist / Medical Officer/Dental Surgeon / Principal –School of Nursing / Nursing
Superintendent (E-3/E-1) – 12
1. Paediatrics Medicine, E-3  - 1
2. Orthopaedic Surgeon, E-3  - 1
3. Obstetrics & Gynaecology, E-3  - 1
4. ENT (Otorhinolaryngology), E-3  - 1
வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.
5. Medical Officer,  E-1 - 5
6. Dental Surgeon, E -1 - 1
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
7. Principal –School of Nursing, E-1 - 1
8. Nursing Superintendent, E-1 - 1
வயதுவரம்பு: 34க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்பத் தேதி: 01.07.2016
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://sailcareers.com/pdf/IISCO.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EMPLOYMENT-TN-TAMIL NEWS 3137|ஆவின் நிறுவனத்தில் ஜூனியர் எக்சியூட்டிவ் பணி

EMPLOYMENT-TN-TAMIL NEWS 3137|ஆவின் நிறுவனத்தில் ஜூனியர் எக்சியூட்டிவ் பணி
தமிழ்நாடு கூட்டுறவு பால்பொருள் உற்பத்தி நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் விழுப்புரம் மற்றும் கடலூரில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் எக்சிகியூட்டிவ், டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Extension Officer Gr.II - 09
பணி: Junior Executive (Typing) - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Technician (Lab) - 02
பணி: Technician (Operation) - 02
பணி: Technician (Refrigeration) - 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிவினருக்கு ரூ.250, எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: http://www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager Viluppuram-Cuddalore District Co-operative Milk Producers'
Union Ltd.,Vazhudha Reddy, Kandamanady Post,
Viluppuram 605 401. Tamilnadu.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.07.2016
 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/vpmhrapp16.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EMPLOYMENT-TN-TAMIL NEWS 3136|கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தில் மேலாளர், மேலாளர் டிரெய்னி பணி

EMPLOYMENT-TN-TAMIL NEWS 3136|கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தில் மேலாளர், மேலாளர் டிரெய்னி பணி
இந்திய அரசு நிறுவனமான கோவா ஷிப்யார்ட் லிமிடெட் (GSL) நிறுவனத்தில் 2016 - 2017-ஆம் ஆண்டுக்கான 10 மேலாளர், மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Manager (Safety) - 01
பணி: Manager (Russian Interpreter/Translator) - 01
பணி: Deputy Manager (Civil) - 01
பணி: Assistant Manager (Civil) - 01
பணி: Assistant Manager (Paint) - 01
பணி: Management Trainee (Composites) - 02
பணி: Management Trainee (Naval Architecture) - 03
தகுதி: பொறியியல் துறையில் பி.இ., பி.டெக் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.06.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: http://career.goahipyard.co.in என்ற இணையதளத்தின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Chief General Manager (HR&A),
Dr. B.R Ambedkar Bhavan, Goa Shipyard Limited,
Vasco-Da-Gama, Goa - 403802
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.07.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 05.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற
http://career.goashipyard.co.in/WriteData/626201634658PMAttachment.pdf லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EMPLOYMENT-TN-TAMIL NEWS 3135|மஸாகான் டாக் கப்பல் கட்டும் தளத்தில் மேலாளர், பொறியாளர் பணி

EMPLOYMENT-TN-TAMIL NEWS 3135|மஸாகான் டாக் கப்பல் கட்டும் தளத்தில் மேலாளர், பொறியாளர் பணி
மும்பையில் செயல்பட்டு வரும் மஸாகான் டாக் கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள  முதன்மை மேலாளர், மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் முதல்நிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர அறிவிப்பு எண்: MDL/HR-CR/REC/47/2016
பணி: Chief Manager E-5 - 03
Manager  E-4 - 01
Deputy Manager E- 3 - 03
Assistant Manager E-2 - 09
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.06.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.
பணி: Senior Engineer E-1 - 04
தகுதி: பொறியியல் துறையில் Electrical, Electronics பிரிவுகளில் பொறியியல் பட்டம் பெற்று 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.06.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி: 30.06.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.mazagondock.gov.in/newsite2010/pdf_doc/career_June16/Advertisement%20No.%2047%20with%20challan_31052016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EDUCATION-TN-TAMIL NEWS 3134 |10ம் வகுப்பில் தோல்வி: இன்று துணை தேர்வு.

EDUCATION-TN-TAMIL NEWS 3134 |10ம் வகுப்பில் தோல்வி: இன்று துணை தேர்வு.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் சில தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில், சிறப்பு உடனடி துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் உடனடி துணைத் தேர்வு துவங்கி, ஜூலை, 6ல் முடிகிறது. தமிழ் அல்லாத பிறமொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு, விருப்ப மொழி தேர்வு, ஜூலை, 8ல் நடத்தப்படுகிறது.இந்த தேர்வுக்கு, ஜூன், 18 முதல் இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய, அரசு தேர்வுத் துறை வாய்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு தகவல் தொகுப்பு மைய இணையதளமான www.tngdc.gov.in என்ற தளத்தில், விண்ணப்பதாரர்கள், தங்களின் மார்ச் மாத தேர்வுக்கு வழங்கப்பட்ட பதிவெண் மற்றும் பிறந்த தேதியைபதிவு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EDUCATION-TN-TAMIL NEWS 3133|சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் நாளை கடைசி நாள்.

EDUCATION-TN-TAMIL NEWS 3133|சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் நாளை கடைசி நாள்.
மத்திய இடைநிலை பாடத்திட்ட வாரியமான சி.பி.எஸ்.இ.,யின் அங்கீகாரம் பெறுவதற்கு, பள்ளிகள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, நாளையுடன் முடிகிறது.தனியார் மெட்ரிக் பள்ளிகள், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன.ஆனால், சமச்சீர்க் கல்வி பாடத்திட்டத்தில், 10 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப்படாமல் பழமையாக உள்ளதால், மாணவர்கள், அகில இந்திய போட்டித்தேர்வுக்கு தயாராக முடியாத சூழல் உள்ளது. மேலும், மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு, அடுத்த ஆண்டு முதல் கட்டாயம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, பல பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாறி வருகின்றன. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., அங்கீகாரத்தில் பள்ளிகளை நடத்த, சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற வேண்டும். இதற்கு, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நாளையுடன் முடிகிறது. இதற்கிடையில், இந்த பள்ளிகளுக்கு, தமிழக அரசின் தடையில்லா சான்று கிடைப்பதில் பிரச்னை உள்ளதாக, தனியார் பள்ளி நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர்.




விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EDUCATION-TN-TAMIL NEWS 3132|மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து இன்று...முடிவு! பேச்சுக்கு அரசு அழைத்தால் வாபஸ் வாங்க சங்கங்கள் தீவிரம்

EDUCATION-TN-TAMIL NEWS 3132|மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து இன்று...முடிவு! பேச்சுக்கு அரசு அழைத்தால் வாபஸ் வாங்க சங்கங்கள் தீவிரம்
மத்திய அரசு ஊழியர்கள், 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை, 11 முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.'திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும்' எனக் கூறியுள்ளரயில்வே தொழிற்சங்கங்களும் ஆயத்த பணியில் இறங்கி உள்ளன.எனினும், அரசு பேச்சுக்கு அழைத்தால், போராட்டத்தை வாபஸ் வாங்கும் முடிவில் உள்ளன.இந்த ஊழியர்கள் முன் வைப்பது மொத்தம், 36 அம்ச கோரிக்கைகள்.
அவற்றில், 18 முக்கிய கோரிக்கைகள் வருமாறு:
1. ஆந்திர மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சம்பளம், 26 ஆயிரம் ரூபாய் போல, மத்திய அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்
2. கடந்த ஜனவரி, 1ம் தேதிக்கு பின், புதிதாக சேர்ந்த ஊழியர்களுக்கு, இந்த குறைந்தபட்ச ஊதியம் எத்தனை மடங்கு உயர்கிறதோ, அது போல ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கும், அந்த அளவுக்கு உயர வேண்டும்
3. ஆண்டு ஊதிய உயர்வை, 3 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
4. பதவி உயர்வின்போது, ஒரு மடங்கு ஊதிய உயர்வுக்கு பதிலாக, ஆண்டுஊதிய உயர்வு போல, இரு மடங்கு வழங்க வேண்டும்
5. ஆண்டு ஊதிய உயர்வு என்பது, ஜனவரி, ஜூலை என, இரண்டு முறைஇருக்க வேண்டும். தற்போது, ஜூலை மட்டுமே உள்ளது
6. ஒருவரது பணி காலத்தில், ஐந்து பதவி உயர்வு வழங்க வேண்டும்; தற்போது, மூன்று பதவி உயர்வு முறையே உள்ளது
7. ஐந்து ஆண்டுகளுக்கு, ஒரு முறை ஊதிய மாற்றம் செய்ய வேண்டும்; தற்போது, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளது
8. புதிய ஊதிய உயர்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 4.82 லட்சம் பேர் புதிய ஓய்வூதியத்தின் கீழ் வருகின்றனர்; மொத்தம் உள்ள ஊழியர் எண்ணிக்கை, 32 லட்சம்
9. ஏழாவது ஊதிய குழு வழங்கியபரிந்துரை படி, தொழில்நுட்ப ஊழியர்களுக்கு போதிய பதவி உயர்வு வழங்காததை, மாற்றி அமைக்க வேண்டும்
10. ஓய்வு ஊதியம் என்பது, சம்பளத்தில், 50 சதவீதமாக வழங்கப்படுகிறது. இதை, 60 சதவீதமாக மாற்றி அமைக்க வேண்டும்
11. ஓய்வு ஊதியத்தில், ஒரு பகுதி, 12 ஆண்டுகளுக்கு கணக்கிட்டு முன் பணமாக வழங்கப்படுகிறது. அதன் பின், 15 ஆண்டுகள் கழித்து தான் முழு ஓய்வு ஊதியம் வழங்கப்படுகிறது. இதை, 10 ஆண்டுகள் முடிந்தவுடன், முழு ஓய்வு ஊதியம் வழங்கும் முறையாக்க வேண்டும்
12. ஓய்வு ஊதியம் பெறுபவர்கள், ஏழாவது ஊதிய குழு பரிந்துரை அமலாகும் போது, இரண்டு வகையில் கணக்கிட்டு, அவர்களின் ஓய்வு ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றுபரிந்துரை உள்ளது. இரண்டில் எது லாபகரமானதோ அதை ஊழியருக்கு அமல்படுத்த வேண்டும்
13. போனஸ் உச்சவரம்பு உயர்த்தப்பட்டதை, மத்திய அரசு ஊழியர்களுக்கும் பொருத்தி, 2014 - 15ல் இருந்தே அமல்படுத்த வேண்டும்
14. கிராமிய அஞ்சல் ஊழியர்களை,அரசு ஊழியராக கருத வேண்டும். அதன்படி, சலுகைகள் வழங்க வேண்டும்
15. ஆயுத தளவாடங்கள், ரயில்வேஆகியவற்றில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கூடாது
16. அஞ்சல் துறையை, 'கார்ப்பரேட்' மயமாக்க எடுத்த முடிவை கைவிட வேண்டும்
17. நிறுத்தப்பட்ட, 52 படிகளை திரும்ப தர வேண்டும்18. மத்திய அரசு துறையில், 6.64 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
இது குறித்து, தட்சிண ரயில்வே ஊழியர் சங்க செயல் தலைவர் இளங்கோவன் கூறியதாவது:தற்போது, ஏழாவது ஊதிய குழு பரிந்துரையின், அடிப்படை சம்பளமாக, 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கும். இதை, 19 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்திதர, மத்திய அரசு முன் வந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.ஏற்கனவே அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆக, 15 ஆயிரத்து, 750 ரூபாய் பெறப்படும் நிலையில், 10 ஆயிரத்து, 250 ரூபாய் மட்டுமே கூடுதலாக கேட்கிறோம்.மற்ற எந்தவொரு கோரிக்கையையும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை.அமைச்சரவை செயலர் மட்டுமே, இதுவரை தொழிற்சங்கத்தினரிடம்பேசி உள்ளார். ஆனால், பொறுப்பான அமைச்சர்கள் தலைமையிலான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டால் மட்டுமே, கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும்.எங்கள் கோரிக்கைகள்தொடர்பாக, இன்று, அமைச்சரவை கூடி கலந்து ஆலோசிக்க உள்ளனர். அதன் பின், பேச்சுக்கு அழைக்க வேண்டும். அழைத்து பேசி, முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டாலே, வேலை நிறுத்தம் வாபசாக வாய்ப்புள்ளது. இல்லையெனில், திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார். எனினும், அரசு பேச்சு நடத்தும் என்ற முழு நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர் என, ரயில்வே வட்டாரங்கள்கூறின.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EDUCATION-TN-TAMIL NEWS 3131|சித்தா, ஆயுர்வேதாவுக்கு 541 விண்ணப்பம்.

EDUCATION-TN-TAMIL NEWS 3131|சித்தா, ஆயுர்வேதாவுக்கு 541 விண்ணப்பம்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, நாகர்கோவிலில் உள்ள, ஆறு அரசு கல்லூரிகளில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி,நேச்சுரோபதி - யோகா மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கு, 356 இடங்களும், 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்களும் உள்ளன.இதற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது. முதல் நாளில், 541 பேர் நேரில் விண்ணப்பம் பெற்றனர். 'ஜூலை, 28 வரை விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், ஜூலை, 29க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களை,www.tnhealth.orgஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, இந்திய மருத்துவம் மற்றும் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EDUCATION-TN-TAMIL NEWS 3130|பி.இ., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கை கவுன்சிலிங் துவக்கம்

EDUCATION-TN-TAMIL NEWS 3130|பி.இ., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கை கவுன்சிலிங் துவக்கம்
பாலிடெக்னிக் டிப்ளமோ, பி.எஸ்சி., முடித்தவர்களுக்கான, பி.இ., - பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வு, காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லூரியில் இன்று துவங்குகிறது. காலை, 9:00 மணிக்கு சிறப்பு பிரிவினருக்கும், 3:00 - 4:30 லெதர், பிரின்டிங் பிரிவினருக்கும் நடக்கிறது.காரைக்குடி அரசு போக்கு வரத்து கழகம் சார்பில், புது பஸ் ஸ்டாண்டிலிருந்து, கலந்தாய்வு மையத்துக்கு சிறப்புபேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள, 536 இன்ஜி., கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு இதுவரை, 99 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EDUCATION-TN-TAMIL NEWS 3129|ஜூலையில் 11 நாள்கள் வங்கிகள் செயல்படாது...

EDUCATION-TN-TAMIL NEWS 3129|ஜூலையில் 11 நாள்கள் வங்கிகள் செயல்படாது...
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம், விடுமுறை நாள்கள் (2-ஆவது, 4-ஆவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை), ரமலான்பண்டிகை தின விடுமுறை (ஜூலை 6) ஆகியவை காரணமாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட தேசிய வங்கிகள் ஜூலை மாதம் 11நாள்கள் செயல்படாத சூழ்நிலை உருவாகியுள்ளது.பாரத ஸ்டேட் வங்கியை அது சார்ந்த பிற வங்கிகளுடன் இணைப்பதற்கு வங்கி ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 12, 13, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன.மேலும் ஜூலை மாதம் 5 ஞாயிற்றுக்கிழமைகள் வருவதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய காரணங்களால் ஜூலை மாதம் மொத்தம் 20 நாள்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே ஜூலை மாதம் பண பரிவர்த்தனையை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EDUCATION-TN-TAMIL NEWS 3128|மேலும் 220 பள்ளிகளில் "ஸ்டெம்' பயிற்சித் திட்டம்.

EDUCATION-TN-TAMIL NEWS 3128|மேலும் 220 பள்ளிகளில் "ஸ்டெம்' பயிற்சித் திட்டம்.
மாணவர்களுக்கான செய்முறைக் கற்பித்தல் பயிற்சியான"ஸ்டெம்' பயிற்சித் திட்டம், நிகழ் கல்வியாண்டில் மேலும் 220 பள்ளிகளில் தொடங்கப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) சார்பில், கடினமான பாடங்களான அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், பொறியியல் ஆகியவற்றை, ஆசிரியர்கள் எளிதாக மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கான"ஸ்டெம்' திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக கோவை, தருமபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருவாரூர், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் 10அரசுப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அறிவியல் பாடத்துக்கான கருத்துருக்கள் செய்முறைப் பயிற்சிகளாக நிபுணர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டன. இந்தச் செய்முறைப் பயிற்சிகளுக்கான உபகரணங்கள், ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் கையேடு ஆகியவை ஆர்எம்எஸ்ஏ மூலம் வழங்கப்பட்டன. குறிப்பாக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, மூன்றாம் வகுப்பு முதலான பாடங்களின் அடிப்படையில் செயல் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன. பின்னர், ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்டெம் செய்முறைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 220 பள்ளிகளுக்கு விரிவாக்கம்: நிகழ் கல்வியாண்டில் இந்தத் திட்டம், மேலும் 220 பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ளது.இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்களை புத்தாக்கச் சிந்தனைகளுடனும், மாறுபட்டு சிந்திக்கத் தூண்டும் வகையிலும் "ஸ்டெம்' திட்டம் தொடங்கப்பட்டது. எளிமையான செய்முறைப் பயிற்சிகளை ஆசிரியர்கள் முதலில் செய்து காட்டுவார்கள். பின்னர், இந்தப் பயிற்சிகளை மாணவர்கள் தாங்களாகவே செய்து பார்ப்பதால், கடினமான அடிப்படைக் கருத்துருக்கள் எளிதில் புரியும். இந்தத் திட்டத்தின் மூலம், மாணவர்கள் மனப்பாடக் கல்வி முறையைத் தாண்டி, செயல்வழிக் கற்றலுக்கு பற்றுவிக்கப்படுகிறார்கள். எனவே, முக்கியப் பாடங்களான கணிதம், அறிவியல் பாடங்களுக்கு உபகரணங்களைக் கொண்டு செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்தக் கல்வி ஆண்டில் மேலும் 220 பள்ளிகளில் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. இதன்மூலம், மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறன் மேம்படும் என்றனர்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EDUCATION-TN-TAMIL NEWS 3127|இன்று பள்ளிகளில் Mass cleaning day - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

EDUCATION-TN-TAMIL NEWS 3127|இன்று பள்ளிகளில் Mass cleaning day - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EDUCATION-TN-TAMIL NEWS 3126|பயிற்றுநர்களுக்கான பயிற்சி தொடக்கம்.

EDUCATION-TN-TAMIL NEWS 3126|பயிற்றுநர்களுக்கான பயிற்சி தொடக்கம்.
மத்திய கல்வி, ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி), தமிழக அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) ஆகியவை சார்பில் பயிற்றுநர்களுக்கான 5 நாள் பயிற்சி சென்னை டிபிஐ வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.இந்தப் பயிற்சியைத் தொடக்கிவைத்து என்சிஇஆர்டியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரஞ்ஜனா அரோரா பேசியதாவது:என்சிஇஆர்டி சார்பில் கற்பித்தலைத் தாண்டி, கணிதம், அறிவியல் பாடக் கருத்துகளை மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளச் செய்வதற்கான திட்டக் கருத்துரு தயாரிக்கப்பட்டு, தேசிய பயிற்சியாளர்களைக் கொண்டு ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.தமிழகத்தில் முதல்முறையாக ஆர்எம்எஸ்ஏவுடன் இணைந்து இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு ஆசிரியர் இந்தப் பயிற்சியைப் பெற்று, அவர்கள் மற்ற ஆசிரியர்களுக்குப்பயிற்றுவிப்பார்கள். முக்கியப் பாடங்களை செய்முறை மூலம் கற்பிக்கும்போது மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொள்வார்கள். இதைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் தங்கள் மாவட்டத்தில் அளிக்கும் பயிற்சி குறித்தும், பயிற்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் விரிவான கருத்துக்கள் ஆர்எம்எஸ்ஏவிடம் பெறப்படும் என்றார்.நிகழ்ச்சியில் மாநில ஆர்எம்எஸ்ஏ இயக்குநர் ஜி. அறிவொளி, துணை இயக்குநர் வி.குமார், என்சிஇஆர்டி பேராசிரியர் வி.வி.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EDUCATION-TN-TAMIL NEWS 3125|போட்டித் தேர்வு மூலம் 272 விரிவுரையாளர்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

EDUCATION-TN-TAMIL NEWS 3125|போட்டித் தேர்வு மூலம் 272 விரிவுரையாளர்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறு வனங்களில் 272 விரிவுரையாளர் கள் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவர வியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களில் விரிவுரையாளர் காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன. சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டமும், எம்.எட். பட்டமும் கல்வித்தகுதி யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவங்கள் ஜூலை 15-ம் தேதி முதல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில்வழங்கப்பட உள்ளன. போட்டித்தேர்வு செப்டம்பர் 17-ம் தேதிநடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EDUCATION-TN-TAMIL NEWS 3124|7th Pay:மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அமைச்சரவை இன்றுஒப்புதல் அளிக்கிறது?

EDUCATION-TN-TAMIL NEWS 3124|7th Pay:மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அமைச்சரவை இன்றுஒப்புதல் அளிக்கிறது?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை அதிக அளவுஉயர்த்தும்படி அமைச்சரவை செயலர்கள் குழு தாக்கல் செய்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பணியாளர்கள், ஓய்வூதியதாரர் கள் என சுமார் 1 கோடி பேர் பயனடைய உள்ளனர். மத்திய அரசு துறைகளில் பணியாற்றி வரும் கடைநிலை ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 14.27 சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்தலாம் என கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் 7வது ஊதிய குழு பரிந்துரைத்திருந்தது. 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக குறைந்த அளவில் ஊதி யத்தை உயர்த்த 7வது ஊதிய குழு பரிந்துரை செய்ததால், அதை திருத்த அமைச்சரவை செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான செயலர்கள் குழு அமைக்கப்பட்டது.இக்குழு ஊதிய குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து சமீபத்தில் தனது இறுதி அறிக் கையை தாக்கல் செய்தது. இந்தஅறிக்கையின் அடிப்படை யில் நிதியமைச்சகம் குறிப்பு தயாரித்து அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத் துள்ளது. பி.கே.சின்ஹா தலைமையி லான அமைச்சரவை செயலர்கள் குழு, மத்திய அரசு ஊழியர் களுக்கு மொத்தமாக 23.55 சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்தலாம் என பரிந்துரைத் துள்ளது. ரூ.7 ஆயிரமாக உள்ள குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18 ஆயிரமாகவும், ரூ.90 ஆயிரமாக உள்ள அதிகபட்ச ஊதியத்தை ரூ.2.5 லட்சமாகவும் உயர்த்தலாம் என்ற 7-வது ஊதிய குழுவின் பரிந் துரையையும் அமைச்சரவை செயலர்கள் குழு திருத்தியுள்ளது. அதில் குறைந்தபட்சமாக ரூ.23,500 ஆகவும், அதிகபட்சமாக ரூ.3.25 லட்சமாகவும் ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட இந்த பரிந் துரைக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.அதன்பின் புதிய ஊதிய உயர்வு ஜனவரி 1-ல் இருந்து முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு பணியாளர்கள், ஓய்வூதி யதாரர்கள் என சுமார் 1 கோடி பேர் பயனடையவுள்ளனர். ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்படுவதால் மத்திய அரசுக்கு ரூ.1.02 லட்சம் கோடி வரை கூடுதல் நிதி சுமை ஏற்படும்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EDUCATION-TN-TAMIL NEWS 3123|மாணவர்களுக்கு கல்விக்கடன்: வங்கிகள் இந்த ஆண்டுமுதல் புதிய அணுகுமுறை.

EDUCATION-TN-TAMIL NEWS 3123|மாணவர்களுக்கு கல்விக்கடன்: வங்கிகள் இந்த ஆண்டுமுதல் புதிய அணுகுமுறை.
பொறியியல் கல்லூரிகளின் தரம், வளாக நேர்முகத்தேர்வு வேலைவாய்ப்புகள் ஆகிய வற்றின் அடிப்படையில் மட்டுமே மாணவர்களுக்கு கல்விக்கடன் அளிக்க வங்கிகள் முடிவுசெய்துள்ளன.பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்புக்குச் செல்லும் மாணவர்களுக்கு கைகொடுக்கும் வகையில் அரசு, தனியார் வங்கிகள் கல்விக்கடன் வழங்குகின்றன. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் படிக்கவும் கல்விக்கடன் பெறலாம். எந்தவிதமான பிணையமோ, 3-வது நபர் ஜாமீனோ இல்லாமல் ரூ.7.5 லட்சம் வரை கடன் பெறலாம். டியூஷன் கட்டணம், புத்தகச் செலவு, விடுதிக்கட்டணம், தேர்வுக்கட்டணம், போக்கு வரத்துச் செலவு ஆகிய அனைத்துக்கும் கல்விக்கடன் வழங்கப்படும்.பொறியியல் படிப்புக்கான கல்விக்கடனை பொருத்தவரை, 4 ஆண்டுகள் படித்து முடித்ததும் அதன்பிறகு ஓராண்டு கழித்து மாதாந்திர தவணைகளில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். படிக்கும் காலத்தில் வட்டி மட்டும் செலுத்தினால் போதும். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் இருந்தால் வட்டிச்சலுகை உண்டு.வட்டியை மத்திய அரசே வங்கிக்கு செலுத்திவிடும்.சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க இந்தியன் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி, விஜயாவங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய 7 அரசு வங்கிகள் பல்கலைக்கழக வளாகத்தில் அரங்குகள் அமைத்துள்ளன.கலந்தாய்வு முடித்து கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையுடன் வரும் மாணவர்களுக்கு உடனடியாக கல்விக்கடன் ஒப்புதல் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட மாணவருக்கு கல்விக்கடன் வழங்குமாறு, அவர்களது வீட்டுக்கு அருகே உள்ள தங்களது வங்கிக் கிளைக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்வார்கள்.இந்நிலையில், நடப்பு ஆண்டு முதல் கல்விக்கடன் வழங்க அரசு வங்கிகளில் புதிய அணுகுமுறை கடைபிடிக்கப்படுவதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:கடந்த ஆண்டு வரை எந்த கட்டுப்பாடும் இன்றி பொறியியல் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டது. தற்போது பொறியியல் கல்லூரிகளின் தரம், வளாக நேர்முகத்தேர்வு (கேம்பஸ் இன்டர்வியூ) வேலைவாய்ப்புகள் அடிப் படையில் மட்டுமே கல்விக்கடன் வழங்குமாறு இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) அறிவுறுத்தியுள்ளது.மாணவர்கள் சேர உள்ள கல்லூரி தரமானதா, அங்கு தரச்சான்று பெற்ற படிப்புகள் வழங்கப்படுகிறதா, அங்கு படித்து முடிக்கும் மாணவர்களுக்கு வளாக நேர்முகத்தேர்வு மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான்கல்விக்கடன் வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.தரமற்ற கல்லூரிகளில் படிப்பவர்கள் வேலைவாய்ப்பு பெற முடியாத பட்சத்தில் கல்விக்கடனை அவர்கள் திருப்பிச்செலுத்த முடியாமல் போகிறது. இதனால், கடனை திரும்ப வசூலிக்க வங்கிகள் படாதபாடுபட வேண்டியுள்ளது. எனவே, ஐபிஏ அமைப்பின் புதிய அணுகுமுறையை கறாராகப் பின்பற்ற வங்கிகள் முடிவு செய்துள்ளன.இதன் காரணமாக, அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், வளாக நேர்முகத்தேர்வு மூலம் மாணவர்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித்தரும் புகழ்பெற்ற தனியார்கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு எளிதாக கல்விக்கடன்கிடைத்துவிடும். சாதாரண கல்லூரிகள், வேலைவாய்ப்பு குறைவாக உள்ள கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைப்பது கடினம்தான்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EDUCATION-TN-TAMIL NEWS 3122|Quality - Teachers Participation in Tools Preparation - விருப்பமுள்ள ஆசிரியர்களின் பெயர்களை சேகரிக்கிறது SSA

EDUCATION-TN-TAMIL NEWS 3122|Quality - Teachers Participation in Tools Preparation - விருப்பமுள்ள ஆசிரியர்களின் பெயர்களை சேகரிக்கிறது SSA



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EDUCATION-TN-TAMIL NEWS 3121|இனி மாணவர்களின் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கு மதிப்பு இருக்காது...!?

EDUCATION-TN-TAMIL NEWS 3121|இனி மாணவர்களின் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கு மதிப்பு இருக்காது...!?
நீங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1200க்கு 1180 மதிப்பெண் பெற்று இருக்கிறீர்களா...ஆனால், உங்களுக்கு இளங்கலை ஆங்கிலம் படிக்க தான் விருப்பமா...? நல்லது. ஆனால், அந்த மதிப்பெண்ணை தூர வையுங்கள். இன்னும் சில ஆண்டுகளில் அது உங்களுக்கு பயன்படாமல் போகலாம்.
ஆம். நீங்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிபெண்கள் பெற்றிருந்தாலும்நீங்கள் உயர் கல்வியில் சேர இன்னொரு தகுதிதேர்வு எழுத வேண்டும். அதில் வெற்றி பெற்றால் தான், நீங்கள் விரும்பிய படிப்பைபடிக்க முடியும்.என்ன... கலை படிப்பில் சேர தகுதி தேர்வா? மருத்துவத்திற்கே தகுதி தேர்வு கூடாது என போராடி வரும் சூழலில், கலை படிப்பிற்கு ஏன் தகுதி தேர்வு? உளறாதீர்கள் என்கிறீர்களா. இல்லை நான் உளறவில்லை. புதிய கல்வி கொள்கையை வடிவமைப்பதற்காக வழங்கப்படுள்ள சுப்பிரமணியன் குழு அறிக்கையில் அவ்வாறு தான் உள்ளது.அந்த அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டால், நிச்சயம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பின், நீங்கள் என்ன படிப்பு படிக்க விரும்பினாலும், அதற்கான தனி தகுதி தேர்வு எழுத வேண்டி நிலை வரும்.
புதிய கல்விக் கொள்கை...:
அண்மையில் பீகார் கல்வி அமைச்சர், இந்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம் சமூக ஊடகத்தில்  'டியர், புதிய கல்விக் கொள்கையை எப்போது வெளியிடப்போகிறீர்கள்..?' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.ஆனால், துரதிருஷ்டமாக புதிய கல்விக் கொள்கை என்ற சொற்றொடர் கவனம் பெறாமல், டியர் என்ற சொல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பெரும் விவாதமாக மாறியது. சரி, நாமாவது புதிய கல்விக் கொள்கை மீது கொஞ்சம் கவனம் செலுத்துவோம்.
இந்தியாவின் அடுத்த தலைமுறையின் தலையெழுத்தை நிர்ணயக்க போவது இந்த புதிய கல்விக் கொள்கை தான். இந்தியாவின் கல்வி துறை எத்திசையில் பயணிக்க வேண்டும் என்பதை வழிக்காட்ட போவதும் இந்த புதிய கல்விக் கொள்கை தான்.இதற்காக மத்திய அரசு  முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து இருக்கிறது.இந்த குழுவின் பணி, நாடு முழுவதும் பயணித்து மக்களை, ஆசிரியர்களை, கல்வியலாளர்களை சந்தித்து, அவர்களின் கருத்தை கேட்டு அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசிடம் வழங்க வேண்டும்.அதன் அடிப்படையில் மத்திய அரசு  புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்கும். சுப்பிரமணியன் குழு அறிக்கையை சமர்பித்துபல மாதங்கள் ஆகியும் இன்னும் மத்திய அரசு அதை வெளியிடாமல் இருக்கிறது. ஆனால், அந்த 230 பக்க அறிக்கையை பொதுபள்ளிக்கான மாநில மேடை அமைப்பு எப்படியோ கைப்பற்றி, தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
என்ன இருக்கிறது அந்த அறிக்கையில்...?
அந்த அறிக்கை குறித்து பொதுபள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசிய போது, "அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தும், கல்வித் துறையில் மாநில அரசின் அதிகாரத்தை குறைப்பதாகவே இருக்கிறது.அதாவது, இந்த அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ள பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், மத்திய அரசு தான் கல்வி குறித்த முடிவுகளை எடுக்கும். அதை செயல்படுத்தும் அதிகாரம் மட்டும் தான் மாநில அரசிற்கு இருக்கும்.அதுமட்டுமல்லாமல், மாநில அரசின் அதிகாரம் நகைப்பிற்குரியதாகவும் மாறும். மாநில அரசால் வைக்கப்படும் தேர்வுகளுக்கு மதிப்பில்லாமல் போகும்.பன்னிரெண்டாம் வகுப்பில் மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும், அதற்கு எந்த மதிப்பும் இருக்காது. எந்த படிப்பில் சேர வேண்டுமென்றாலும், அதற்கான தனி தகுதி தேர்வு இருக்கும். அதில் வெற்றிபெற்றால் தான், மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான படிப்பில் சேர முடியும்" என்றவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்,
சரி.. இந்த அறிக்கை எப்படி தயார் செய்யப்பட்டது?
இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், வட்ட அளவில்  கூட்டங்கள்நடத்தி, ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியலாளார்கள் ஆகியோரிடம் கருத்து கேட்டு, இந்த அறிக்கையை தயார் செய்ததாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அப்படி அவர்கள் யாரையும் சந்தித்து கருத்து கேட்டதாக தெரியவில்லை.கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில்ஏறத்தாழ 20,000 பேரை சந்தித்து, இந்த புதிய கல்வி கொள்கை குறித்து உரையாடினோம்.அவர்களிடம் புதிய கல்வி கொள்கை குறித்து உங்களிடம் ஏதேனும் கருத்து கேட்கப்பட்டதாஎன்று கேட்டோம். ஆனால், அவர்கள் யாருக்கும் புதிய கல்வி கொள்கையை இந்தியா வடிமைக்கிறது என்பதே தெரியவில்லை. அதாவது யாரிடமும் கருத்துக் கேட்கப் படவில்லை.
யாரிடமும் கருத்துக் கேட்கபடவில்லையா ?
மத்திய அரசிற்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் வேண்டுமானால் கருத்து கேட்கப்பட்டிருக்கலாம். அந்த குழு, மக்களின் கருத்தை கேட்க தான் வடிவமைக்கப்பட்டது. ஆனால், அவர்கள் மக்களைசந்தித்து கருத்து கேட்கவில்லை. மக்களின் கருத்தை பெறாமல் ஒரு புதிய கொள்கையை வடிவமைப்பது ஜனநாயக படுகொலை.
இந்த அறிக்கையில் வேறு என்ன பரிந்துரைகள் இருக்கிறது ?
அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என்று அனைவரும் குரல் கொடுத்து வரும்பட்சத்தில், இந்த அறிக்கை அதிகாரம் முழுவதையும் மத்திய அரசின் கைகளில் திணிக்கிறது. மத்திய அரசின் விருப்பமும் அதுவாக தான் இருக்கிறது.
கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா...?
இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து, புதியகல்விக் கொள்கை வடிவமைக்கப்படும்பட்சத்தில்மத்திய அரசு  உருவாக்கும் பாடத்திட்டத்தை, மாநில அரசுபின்பற்றும் நிலை ஏற்படும். இந்தியா பல இனங்கள், பல கலாச்சாரங்களை கொண்ட நாடு. வடகிழக்கில் உள்ள கலாச்சாரம் வேறு, தமிழ் நாட்டின் கலாச்சாரம் வேறு.இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், மத்திய அரசு உருவாக்கும் பாடத்திட்டத்தை மாநிலங்கள் பின்பற்ற வேண்டுமென்று கட்டாயப்படுத்தினால், விளைவுகள் படுமோசமானதாக இருக்கும். இது இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கும், அரசியல் அமைப்பிற்கும் எதிரானது.கல்வி நிர்வாகப் பணிக்கு 'இந்திய கல்வி பணித் தேர்வு (IES)' என்ற பரிந்துரையையும்வழங்கப்பட்டு இருக்கிறது. அதாவது, இனி கல்வி துறையை நிர்வகிப்பதில் கல்வியாளர்களின் பங்களிப்பு என்பது குறைந்து, நிர்வாகிகளின் பங்களிப்பு அதிகமாகும்.புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க அமைக்கப்பட்டுள்ள சுப்பிரமணியன் குழுவே முழுக்க நிர்வாகிகளை கொண்ட குழுவாக தான் இருக்கிறது. அதில் உள்ள ராஜ்புட் ஒருவரை தவிர மற்ற யாரும் கல்வியாளர்கள் இல்லை.கல்வியாளர்கள் பெரும்பான்மையாக இல்லாத ஒரு குழு கல்வி குறித்த ஒரு கொள்கையை வடிவமைத்தால் இப்படி தான் இருக்கும்.
நம் கோரிக்கைகள் என்ன...?
மத்திய அரசு வெளிப்படையாக செயல்பட வேண்டும். உடனடியாக இந்த குழுவின் அறிக்கையை வெளியிட்டு, கல்வியலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்பெற்றோர்கள் ஆகியோருடன்  விவாதம் நடத்தி, அவர்களின் கருத்தினை இப்போதாவது பெற வேண்டும் என்பது தான் நமது பிரதான கோரிக்கை. அது மட்டுமல்ல, கல்வித் துறையில் மாநிலத்தின் அதிகாரங்கள் முழுவதுமாக பறிக்கப்படும் அபாயம் இருக்கிறது. அதனால் மாநில அரசும் இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE
Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.