Wednesday, 7 December 2016

TNPSC - High Court Services - Certificate verification and Counselling | உயர்நீதிமன்றப் பணியில் அடங்கிய கணினி இயக்குபவர், தட்டச்சர், வாசிப்பவர்/தேர்வாளர், காசாளர், மற்றும் ஒளிப்படி இயக்குபவர் பதவிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC - High Court Services - Certificate verification and Counselling | உயர்நீதிமன்றப் பணியில் அடங்கிய கணினி இயக்குபவர், தட்டச்சர், வாசிப்பவர்/தேர்வாளர், காசாளர், மற்றும் ஒளிப்படி இயக்குபவர் பதவிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. I டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவதுசென்னை உயர்நீதிமன்றப் பணியில் அடங்கிய கணினி இயக்குபவர், தட்டச்சர், வாசிப்பவர்/தேர்வாளர், காசாளர், மற்றும் ஒளிப்படி இயக்குபவர் பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 20.07.2016 நாளிட்ட அறிவிக்கை வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான (நேர்முக தேர்வு அல்லாத பதவிகள்) எழுத்துத் தேர்வு கடந்த 28.08.2016 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெற்றது. அதற்கான தெரிவு முடிவுகள் 02.11.2016 அன்று வெளியிடப்பட்டது. இத்தெரிவு தொடர்பான 290 காலிப்பணியிடங்களை நிரப்பும்பொருட்டு சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்வு சென்னை-3, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் கணினி இயக்குபவர், தட்டச்சர், வாசிப்பவர்/தேர்வாளர், காசாளர், மற்றும் ஒளிப்படி இயக்குபவர் பதவிகளுக்கு 13.12.2016/14.12.2016 முதல் 16.12.2016 வரை நடைபெறுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு SMS மற்றும் E-mail மூலமும், கலந்தாய்விற்கான அட்டவணை (அழைப்புக் கடிதம்) விரைவஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. எனவே, நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்விற்கு கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை எண், அவர்களின் இடஒதுக்கீட்டு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டதாலேயே அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதாக உரிமம் கோர இயலாது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்விற்கு குறித்த நேரத்தில் வரத் தவறினால் தங்களின் தரவரிசையை இழக்க நேரிடும் எனவும், அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. செயலாளர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேதி: 02.12.2016 TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Tamil Nadu Public Service Commission in its notification dated 20.07.2016 had invited applications for appointment by direct recruitment to the posts of Computer Operator, Typist, Reader/Examiner, Cashier and Xerox Operator in the Madras High Court Services. The Written examination was held on 28.08.2016 FN & AN (Non - Oral Test Posts) and results published on 02.11.2016. In order to fill up the 290 unfilled vacancies, Certificate verification / Counselling for the post of Computer Operator, Typist, Reader/Examiner, Cashier and Xerox Operator is to be held from 13.12.2016/14.12.2016 to 16.12.2016 at 10.00 A.M. in the O/o. Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, V.O.C. Nagar, Chennai-600 003. 2. Candidates are informed individually by speed post / SMS / E-mail about the date and time of the Certificate verification / Counselling. 3. Candidates are admitted to the Certificate verification / Counselling based on the marks obtained in the Written Examination, Rank and claims made by them in their On-line applications. 4 The allotment to the posts is subject to availability of vacancies in their respective reservation categories when they reach their turn as per their rank, rule of reservation and subject to their eligibility. Hence, mere calling for Certificate verification / counselling itself will not confer him/her to claim any right on the post. 5. Candidates who do not appear for Certificate verification / Counselling on the date and time allotted to them will loose his/her opportunity in the combined merit list and they will not be given any further chance to appear for the same. Secretary Tamil Nadu Public Service Commission இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.