Saturday, 3 December 2016

TNPSC GROUP I | குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்படாது முன்கூட்டியே விண்ணப்பிக்க TNPSC அறிவுறுத்தல்

TNPSC GROUP I | குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்படாது முன்கூட்டியே விண்ணப்பிக்க TNPSC அறிவுறுத்தல் | குரூப்-1 தேர்வுக்கு விண்ணப் பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்படாது. எனவே, விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர் உட்பட மொத்தம் 85 காலியிடங்களை நிரப்புவதற் கான குரூப்-1 தேர்வு அறிவிப்பு கடந்த நவம்பர் 9-ம் தேதி வெளி யிடப்பட்டது. பட்டப்படிப்பு படித்த வர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 21 வயது நிரம்பி யிருக்க வேண்டும். இதற்கான முதல்நிலைத் தேர்வு 2017 பிப்ரவரி 19-ம் தேதி தமிழகம் முழுவதும் 32 மையங்களில் நடைபெறும். இதற்கு வரும் 8-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி செயலாளர் நேற்று வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிப் பதற்கான கடைசி நாள் நீட்டிக்கப் படாது. எனவே, விண்ணப்பதாரர் கள் கடைசி நாள் வரை காத்திருக் காமல், முன்கூட்டியே போதிய அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனென் றால், கடைசி நாளில் அதிகப்படி யான விண்ணப்பதாரர்கள் விண் ணப்பிக்கும்போது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ, தொழில்நுட்ப பிரச்சினைகளோ ஏற்பட வாய்ப்பு உள்ளது. விண்ணப்பதாரர்கள் இணைய வழி விண்ணப்பத்தில் கோரப்பட் டுள்ள அனைத்து விவரங்களையும் கவனமாக உள்ளீடு செய்யவும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, சில விவரங்களை விண்ணப்ப தாரர்கள் மாற்ற முடியாது. எனவே, இணையவழி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் முன்பு, தாங்கள் அளித்துள்ள விவரங்கள் சரியானதுதானா என்பதை உறுதி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடைசி நாள் நெருங்குகிற நேரத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாமல் போனால் தேர்வாணை யம் பொறுப்பாகாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.