Thursday, 1 December 2016

அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள 583 பொறியியல் கல்லூரிகளில் ‘செமஸ்டர்’ தேர்வுகள் இன்று ரத்து பதிவாளர் தகவல்

அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள 583 பொறியியல் கல்லூரிகளில் 'செமஸ்டர்' தேர்வுகள் இன்று ரத்து பதிவாளர் தகவல் | வங்கக்கடலில் உருவான 'நாடா' புயல் காரணமாக தமிழகத்தில் இன்று அனேக இடங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி மாணவ-மாணவிகள் நலன் கருதி அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இன்று நடைபெற உள்ள 'செமஸ்டர்' தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் கூறியதாவது:- அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள 583 பொறியியல் கல்லூரிகளில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற இருந்த 'செமஸ்டர்' தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. ரத்து செய்யப்படும் 'செமஸ்டர்' தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.