Friday, 30 December 2016

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள் | வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள். நேரடித் தனித்தேர்வர்கள் அனைவரும் முதல் மொழித்தேர்வாக தமிழ் மொழித்தேர்வை எழுதவேண்டும். வெளிமாநிலங்கள் அல்லது சி.பி.எஸ்.இ. முறையில் படித்தவர்கள் உரிய கல்வி அலுவலரின் மேலொப்பத்துடன் மாற்றுச்சான்று வைத்து விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேராமல் விடுபட்ட தனித்தேர்வர்கள் ஜனவரி 3-ந் தேதி வரை அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பதிவு செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் அவர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்படும் தேர்வு மையத்தில் தான் தேர்வு எழுதவேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.