Monday, 12 December 2016

324 பணியிடங்கள் இந்தியன் வங்கியில் அதிகாரி வேலை

324 பணியிடங்கள் இந்தியன் வங்கியில் அதிகாரி வேலை | இந்தியன் வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிக்கு 324 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று இந்தியன் வங்கி. சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் ஏராளமான கிளைகள் உள்ளன. தற்போது இந்த வங்கியில் புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 324 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு வாரியாக பொது பிரிவினருக்கு - 165 இடங்களும், ஓ.பி.சி. -87 இடங்கள், எஸ்.சி. - 48 இடங்கள், எஸ்.டி. - 24 இடங்கள் உள்ளன. இந்த பணியிடங்கள் பயிற்சியுடன் கூடியதாகும்.

அதாவது தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மணிப்பால் குளோபல் எஜூகேசன் சர்வீசஸ் கல்வி மையத்தில் வங்கிப் பணிகள் தொடர்பான முதுநிலை டிப்ளமோ பயிற்சியில் சேர்க்கப்பட்டு பயிற்சி வழங்கப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம். இந்த பயிற்சியுடன் கூடிய பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-7-2016-ந் தேதியில் 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1988 மற்றும் 1-7-1996 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் களுடன் தேர்வு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. தேர்வு செய்யும் முறை: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். கட்டணம் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் வழியே இந்த கட்டணம் செலுத்தப்பட வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 22-12-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை பிற்கால தேவைக்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். இதற்கான முதல் நிலைத் தேர்வு 22-1-2017 அன்றும், முதன்மைத் தேர்வு 28-2-2017 அன்றும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை அறிந்து கொள்ள பார்க்க வேண்டிய இணையதள முகவரி : www.indianbank.in

No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.